Monday, January 5, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

 

முதல் நாள்

 

 

கொழும்பில் நான் பார்த்த முக்கியமான இடங்கள்

 

இலங்கையின் சுதந்திரச் சதுக்கம்

 

இலங்கையின் சுதந்திரச் சதுக்கம் (Independence Square) என்பது கொழும்பில் அமைந்துள்ள தேசிய நினைவுச்சின்னம் . இது 1948 பிப்ரவரி 4 அன்று பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இலங்கை (அப்போது சிலோன்) சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்டது. 1948 பிப்ரவரி 4 அன்று இலங்கையின்  முதல் பாராளுமன்றத்தைத் திறந்த நிகழ்வு இங்கு நடைபெற்றது.  இதன் கட்டுமானம் 1949-இல் தொடங்கி 1953-இல் நிறைவடைந்தது. Independence Memorial Hall   எனப்படும் மண்டபம் பாரம்பரிய சிங்களக் கட்டிடக் கலையை  பிரதிபலிக்கிறது. கொழும்பின் முக்கிய பாரம்பரியச் சுற்றுலா இடங்களில் ஒன்றாகும். இங்கு நாட்டின் முதல் பிரதமர் டி.எஸ். சேனநாயக்கே (Father of the Nation) சிலை உள்ளது  சுருக்கமாகச் சொன்னால், சுதந்திரச் சதுக்கம் இலங்கையின் தேசிய பெருமை, பாரம்பரியம், மற்றும் கலாச்சார நினைவகத்தை ஒருங்கிணைக்கும் இடம். நமக்கு  டில்லி செங்கோட்டை எப்படியோ இலங்கையினருக்கு  இந்த இடம் இலங்கைக்கு.

 

லோடஸ் டவர் (LOTUS TOWER)

 

லோட்டஸ் டவர் (Lotus Tower ) கொழும்பு நகரின் மையத்தில் உள்ள தெற்காசியாவின் உயரமான கோபுரம். இது இலங்கையின் நவீன அடையாளமாகவும், சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. கொழும்பை ஆசியாவின்  நவீன் நகராக மாற்றவும். அதன் தொலைத் தொடர்பு உட்கட்டமப்பை பலப்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிற்பதற்காகவும் கட்டியதகச் சொல்லப்படுகிறது.

 

உயரம்: 356 மீட்டர்கள் (1,168 அடி) – தெற்காசியாவில் முதலிடம், உலகில் 19ஆவது உயரமான தொலைத்தொடர்பு கோபுரம்.


திறப்பு: 2019 செப்டம்பர் 16 (முழுமையாக பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது 2022 இல் கால தாமதத்துடன்


செலவு: சுமார் 104 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.

 

இதைக் கட்டியவர்கள்; சீனாவின் EXIM வங்கி நிதியுதவியுடன் சீன நிறுவனங்கள் (China National Electronics Import & Export Corporation & Aerospace Long-March International).

 

கோபுரத்தின் மேற்பகுதி தாமரை மலர் மொட்டு போல வடிவமைக்கப்பட்டது – இலங்கையின் பௌத்த கலாச்சாரத்தையும் தேசிய மலரான தாமரையையும் குறிக்கிறது.

 

கீழ் பகுதி: தொலைத்தொடர்பு உபகரணங்கள்.


நடு பகுதி: உணவகங்கள், கடைகள், அருங்காட்சியகம்.


மேல் பகுதி:சுழலும் உணவகம் (revolving restaurant) & பார்வையிடும் தளம் (observation deck) – 360° கொழும்பு நகரக் காட்சி.


உயரம் வாரியாக: 280 மீட்டரில் பார்வை தளம் – கொழும்பு துறைமுகம், காலி முகத்திடல், இந்தியப் பெருங்கடல் எல்லாம் தெரியும். கொழும்பின் நவீன அடையாளமாகவும், சுற்றுலா ஈர்ப்பாகவும் திகழ்கிறது.


ஆனால் இந்தக் கட்டுமானம் கடுமையான ஊழல் குற்றச்சாற்றுக்கு ஆளாகி உள்ளது. அங்குள்ள மக்கள் இது தேவையைற்ற கட்டுமானம் (white elephant) என்று கருதுகிறார்கள். இதற்காகச் செலவழித்த 104 மில்லியன் அமெரிக்க டாலர்களை அவ்வளவு எளிதில் வசூல் செய்ய முடியாது என்று கருதுகிறார்கள். இதைக் கட்டமைப்பதில் இவ்வளவு பெரிய தொகையும் செலவழித்து  கால தாமதமும் இருந்தால் ஊழல் குற்றச்சாற்று வரத்தானே செய்யும்.

இத்தகைய கட்டுமானங்களை கட்டிக் கொடுத்ததன் மூலம்  இலங்கை சீனாவின் பிடியில் உள்ளது என்று சொல்கிறார்கள். இதைப் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்



பயணம் தொடரும்




No comments: