Thursday, January 8, 2026

 


இலங்கையில்
ஏழு நாட்கள்


இரண்டாம் நாள் – ஒன்று


சிறு வயது முதலே பாலன் தேவராயனின் கந்த ஷஷ்டி கவசத்தில் வரும் வரிகள் ‘கதிர்காமத்துறை கதிர்வேல் முருகா” என்ற பாடல் வரிகள் வரும்போது வாழ்க்கையில் ஒரு முறையாவது அங்கு சென்று முருகனைத் தரிசித்து வரவேண்டும் என்ற ஆசை. சமீபத்தில் இலங்கை சென்றபோது அந்தக் கோவிலுக்குச் சென்றென். முருகன் கோவில் என்றவுடன் நான் திருச்செந்தூர், திருத்தணி, பழனி, சுவாமிமலை இது போன்று அந்த முருகன் கோவில் இருக்கும் என்று கற்பனை பண்ணிச் சென்றென். ஆனால் அங்கு நான் எதிர்பார்த்தது போல் இல்லை.. கோவிலுக்குச் செல்லும் முன் கோவிலைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டு சென்றிருக்க வேண்டும். மனதில் பலப்பல எண்ணங்கள், நாங்கள் எல்லோரும் ஆசை தீர உணர்ச்சி பொங்க கந்த ஷஷ்டி கவசம் சொன்னோம். . இந்தியா வந்து அக்கோவிலைப் பற்றிய ஒரு சிறிய ஆய்வு மேற்கொண்டுள்ளேன். அதனால் இந்த கோவிலைப் பற்றிய முழு விவரங்களையும் இந்தத் தொடர் முடியும் தரலாம் என்று எண்ணியுள்ளேன்.”


அடுத்து நாங்கள் சென்ற இடம்


இராவணன் நீர்வீழ்ச்சி


இந்த நீர்வீழ்ச்சி இலங்கையின் உவா மாகாணத்தில் எல்லா என்ற இடத்தின் அருகே உள்ளது. இலங்கையின் அழகிய நீர் வீழ்ச்சிகளில் ஒன்று சாலையின் ஓரத்தில் நின்று கொண்டே கண்டு களிக்கலாம். இதன் உயரம் 82 அடி தரையிலிருந்து இந்த இடம் 4500 அடி உயரத்தில் உள்ளத்து.ஆசை தீர போட்டோக்கள் எடுத்தோம். சுற்றுலா பயணிகளை அதிகம் கவரும் இடம். இதற்கும் இராவணனுக்கும் என்ன சம்பந்தம்? சூர்ப்பனகையை அவமானப்படுத்திய இராம இலக்ஷ்மணர்களைப் பழிவாங்க, இராவணன் சீதையைக் கடத்தி வந்து இந்த அருவியின் பின்னல் ஒரு குகையில் சிறை வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த குகையில் 25000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


அருகில் உள்ள எல்லா என்ற இடத்திற்கு வெளி நாட்டினர் படை எடுக்கின்றனர். குறிப்பாக இளைஞர்கள் இளம்பெண்கள் ட்ரெக்கிங் (மலை ஏறும் பயிற்சிக்காக) இங்கு வருகின்றனர். இந்த இடம் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடங்களை ரயில் மூலம் இணைக்கிறது.


அடுத்து அன்னை சீதை தீக்குளித்த இடத்திற்குச் சென்றோம்....அது அடுத்த பதிவில்.





No comments: