இலங்கையில்
ஏழு நாட்கள்
====================
நான்காம் நாள் பதிவு
எண் நான்கு
அடுத்து நாம் சென்ற
இடம் திரிகோணமலை திருக்கோணேச்சரம் கோயில்.
இறைவர் :
திருக்கோணேஸ்வரர்
இறைவியார் :
மாதுமையாள்
விருட்சம் :கல்லால
மரம்
தீர்த்தம் : பாவநாசம்
வழிபட்டோர் : இராவணன், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தேவாரப் பாடல்கள் :
சம்பந்தர்
இக்கோயிலின் வரலாறு 3287 ஆண்டுப் பழமை வாய்ந்ததாகும். இதற்கு திரிகூடம் என்றும் பெயருண்டு.. இமயமலையின் ஒரு பகுதியே கோணப் பர்வதம் என்ற நம்பிககை காரணமாகக்
கோணேஸ்வரத்திற்கு தட்சணகைலாயம் என்ற பெயர் உருவாகியது. திருமால் மச்சவதாரத்தில்
தட்சணகைலாயத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால்
மச்சகேஸ்வரம் என்ற பெயரும் உருவாகியதாக தட்சணகைலாய புராணம் கூறுகின்றது. புராண
இதிகாசங்களில் இருந்து பல மறுபெயர்கள் அறிந்து கொண்ட போதிலும் திருக்கோணேஸ்வரம்
என்ற பெயரே நீண்ட கால வழக்கில் உள்ள தலப் பெயராகும். ஏழாம் நூற்றாண்டுக்குரியவர்களாகக் கருதப்படும்
திருஞானசம்மந்தர் திருகோணமலை என்ற பதிகத்திலே குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கே
திருக்கோணேஸ்வரம், வடமேற்கே திருக்கேதீஸ்வரம், வடக்கே நகுலேஸ்வரம், மேற்கே முனீஸ்வரம், தென்கிழக்கே
தொண்டீஸ்வரம் எனப் பஞ்ச ஈஸ்வரங்களைக் கொண்ட சிவபூமியாக ஈழம் விளங்கியது. பஞ்ச ஈஸ்வரங்களுள் ஒன்றான திருக்கோணேஸ்வரம் அமைந்துள்ள திருகோணமலை மாவட்டம், பல்வேறு
சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. திருகோணமலை இயற்கை எழில் கொஞ்சும்
பிரதேசமாகக் காணப்படுவதோடு, மிகப்பெரிய இயற்கைத் துறைமுகத்தையும் கொண்டதாக
விளங்குகின்றது. இக்காரணத்தினால் இப்பிரதேசம் உலகுப் புகழ்பெற்ற பிரதேசமாகவும்
காணப்படுகின்றது. கி.மு. 1300 ஆண்டுகளுக்கு முன் கோணேசர் ஆலயம்
கட்டப்பட்டுள்ளது
கி.பி.1624 இல் போர்த்துக்கேயர் திருகோணமலையைக் கைப்பற்றி, கோணேசர் ஆலயத்தை
நிர்மூலமாக்கியபோது போர்த்துக்கேய படையின் தளபதியாக விளங்கிய கொன்ஸ்ரன்ரைன்
டீசா இங்கு கைப்பற்றிய சுவடிகளைப் போர்த்துக்கலிலுள்ள லிஸ்பனுக்கு அனுப்பி
வைத்துள்ளான். இவை லிஸ்பனிலுள்ள அஜூடா நூல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது. ‘கைலாசபுராணம்’ என்னும் நூலில் மனுநீதிகொண்ட சோழ
மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க, அவரது மகனான
குளக்கோட்டு மகாராஜா இக்கோயிலைக் கட்டினாரெனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக ‘முன்னே குளக்கோட்டன் மூட்டுந் திருப்பணியைப் பின்னே பறங்கி பிரிக்கவே’ என்ற கல்வெட்டு வரிகள் சான்றாகக் கூறப்பட்டுள்ளன. ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த
கோயிலைக் குளக்கோட்டு மன்னன் புனருத்தாரணம் செய்ததோடு, பல திருப்பணிகளையும் செய்துள்ளான் என்பதையே பலரும் ஏற்றுக் கொள்கின்றனர் சுதந்திரம்
பெற்றபின் 1950ஆம் ஆண்டில், கோயில் இருந்த நிலத்தில் ஆலயம் அமைக்க முற்பட்டுக்
காசியிலிருந்து சிவலிங்கப்பெருமானை எழுந்தருளச் செய்தார்கள். அக்காலத்தில்
நகரசபையார் கிணறு தோண்ட முயன்றபோது மூன்றடி தோண்டிய வேளையில் சிவனருளோ என்று
கண்டவர்கள் அதிசயிக்கும் வண்ணம் மாதுமையாள் சமேத கோணேசுவரப் பெருமானோடு, சந்திரசேகரர், பார்வதியார், பிள்ளையார், அஸ்திரதேவர் முதலாய
தெய்வத்திருவுருவங்கள் வெளிப்பட்டன. அவையாவும் அண்மைக் காலத்திலமைக்கப் பெற்ற
திருக்கோயிலில் ஆங்காங்கே எழுந்தருளச் செய்யப்பெற்றுள்ளன.
கோவிலின் நுழை
வாயிலில் சிவபெருமான் பிரமாண்டமாக நம்மை வரவேற்கிறார். கோவில் சுத்தமாகப்
பராமரிக்கப்பட்டு வருகிறது. கோவிலின் சுவர்களில் பலவித ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
இங்குள்ள இராவணன் வெட்டு என்ற இடத்தில் பாறை இரண்டாகப் பிளந்து நிற்கிறது. இராவணன்
தனது தாயாரின் வேண்டுகோளுக்கிணங்க இந்தக் கோவிலைத் தனது அரண்மனைக்கு எடுத்துச்
செல்ல வாளால் வெட்டியபோது சிவபிரான் தனது கால் கட்டை விரலால் பாறையை அழுத்த
இராவணனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆனால் மலை இரண்டாகப் பிளந்து நிற்கிறது.
எல்லோரும் பார்க்கவேண்டிய கோவில்
பயணம் .தொடரும்
No comments:
Post a Comment