வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் பிறப்பு
பதிவு எண் 400
நேற்றைய தொடர்ச்சி
பிறகு ஜாம்பவான் ஹனுமனுடைய வரலாற்றைப் பின்வருமாறு கூறத் தொடங்கினான். ஒரு காலத்தில் குஞ்சரன் என்னும் வானரன் ஒருவன் இருந்தான். ஒரு முறை முனிவர் ஒருவரின் சாபத்தால் அவனுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்தது. அப்பெண்ணிற்கு அஞ்சனை என்று பெயரிட்டான். அவள் வளர்ந்து பெரியவளான போது மிகவும் அழகுடையவளாக இருந்தாள். அவள் தெய்வத்தன்மையை அடைந்து நினைத்த வடிவத்தை எடுக்கக்கூடிய சக்தியையும் பெற்றிருந்தாள்.
கேசரி என்னும் வானர வீரனை அவளை மணந்து கொண்டாள் உலகில் உள்ள அழகிகளுக்கெல்லாம் பேரழியாக அவள் விளங்கினாள்.. ஒரு நாள் அவள் மானுட ரூபம் கொண்டாள். மஞ்சள் பட்டாடையை அணிந்து கொண்டாள். உயர்ந்த வகையான அணிகலன்களை அணிந்து தன்னை வெகுவாக அலங்கரித்துக் கொண்டாள். ஊர் உயரமான மலைச் சிகரத்தில் உலாவிக் கொண்டிருந்தாள்.
அப்பொழுது வாயு பகவன் அவள் மேல் ஆசை கொண்டான். அவள் ஆடையை அபகரித்துக் கொண்டான். பின்னர் அவளை அணைத்துக் கொண்டான். அதைக் கண்டு அவள் திடுக்கிட்டாள். பயந்து நடுங்கினாள். பதிவிரதையான என்னைக் கெடுக்க விரும்பிய கொடியவன் யார்”? என்று கேட்டாள்.
அதற்கு வாயு பகவன் “பெண்ணே! பயப்படாதே! நான் உன்னைக் கெடுக்க விரும்பவில்லை. உன்னைக் கட்டித் தழுவி மனத்தால் மட்டுமே இன்பத்தை அனுபவித்தேன்.
================
मनसा अस्मि गतो यत् त्वाम् परिष्वज्य यशस्विनि |
वीर्यवान् बुद्धि संपन्नः पुत्रः तव भविष्यति || ४-६६-१८
महासात्त्वो महातेज महाबल पराक्रमः |
लंघने प्लवने चैव भविष्यति मया समः || ४-६६-१९
===================
அதன் மூலம் உனக்கு ஒரு ஆண்மகன் பிறப்பான். அவன் வீரத்திலும் பலத்திலும் நிகரற்றவனாக இருப்பான். என்னைப் போன்று வலிமையுடவனாய் இருப்பான். எங்கும் தடையில்லாமல் செல்லும் ஆற்றல் பெற்றிருப்பான்.” என்று கூறினான்.
தேவகுமாரனின் அருளைப் பெற்ற அவள் ஒரு மலைக் குகையில் உன்னைப் பெற்றெடுத்தாள்.
தொடரும்
No comments:
Post a Comment