இலங்கையில்
ஏழு நாட்கள்
===================
நான்காம் நாள் பதிவு எண் இரண்டு
நேற்றைய தொடர்ச்சி
அறையிலே. அடைபட்ட தாதுசேனன் உணவின்றி இறந்தான்...“நியாயமான முறையில் அரசு கிடைத்திருந்தால் நாட்டை அமைதியாக ஆளலாம். அதற்கு மாறாக அரசைக் கைப்பற்றிய காஷ்யபன் அநுராதபுரத்தில் இருந்து அரசாள விரும்பவில்லை. தக்க பாதுகாப்:புள்ள இடத்தில் அரண்களை அமைத்துக்கொண்டு வாழவேண்டும் என்று முடிவு செய்தான். அவனுக்கு. இந்தச் சிங்ககிரிப் பகுதி தன் கருத்துக்கு இசைந்த. இடம் என்று தோன்றியது.......சிங்ககிரியின் உச்சியிலே அரண்மனையைக் கட்டினான்.. கோட்டை கட்டினான். மலையைச் சுற்றிலும்.கொத்தளங்களும் அகழியும் அமைத்தான். அங்கே பதினெட்டு ஆண்டுகள் வாழ்ந்தான். சிங்ககிரியின்: தாழ்வரையில் உட்குழிவான சில இடங்கள் இருக்கின்றன.அவ்விடங்களில் மிக அற்புதமான ஓவியங்களை எழுதச் செய்தான். கலைப்பண்பு நிறைந்த கட்டிடங்களைக் கட்டினான்.
தமிழ்நாட்டுக்குச் சென்ற...மொக்கல்லானன்..பதினெட்டு ஆண்டுகள் கழித்துத் தமிழ் மன்னர் உதவிபெற்று இலங்கைக்கு வந்தான். சிங்ககிரியை முற்றுகையிட்டான். காஷ்யபன் கோட்டையை விட்டு வெளியே வத்து சண்டையிட்டான். கடைசியில் தனியே போய்த் தற்கொலை செய்துகொண்டான். மொக்கல்லானன் அரசைக் கைப்பற்றி மீட்டும் அநுராதபுரத்தையே தலைனகாராகக் கொண்டு வாழத் தொடங்கினான்.
இதில் ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் அந்த மலையின் உச்சியில் எப்படி அந்த கோட்டையைக் கட்டினான் என்பதாகும். அதில் எத்தனை ஆயிரக்காணக்கான உழைப்பாளர்களின் உழைப்பு உள்ளது. அவ்வளவு பெரிய கட்டுமானங்களை எப்படி உச்சிக்கு எடுத்துச் சென்றனர்? இதெல்லாம் புல்லரிக்கும் விஷயங்கள். . இதில் ஒரு சிலர் அந்த மலை உச்சியில் உள்ள கட்டுமானங்களைக் கட்டியது இராவணன் என்று சொல்கின்றனர். இங்கு ஹெலிகாப்டர்களை இறக்க எப்படி ஹெலிபாட் அமைக்கிறோமோ அப்படியே அந்தக்காலத்தில் இராவணன் தனது புஷ்பக விமானத்தை இறக்குவதற்கு உச்சியில் ஒரு தளம் கட்டியுள்ளான் என்று சொல்கின்றனர் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாகச் சொல்கின்றனர். இன்று, சிகிரியா தொல்லியல், புராணம் மற்றும் கலாச்சார நினைவுகளை ஒன்றிணைக்கும் ஒரு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாகத் திகழ்கிறது.. இலங்கை வந்தால் இதை முழுவதுமாகப் பார்க்கத் தவறாதீர்கள்
பயணம் தொடரும்
No comments:
Post a Comment