இலங்கையில்
ஏழு நாட்கள்
===================
மூன்றாம் நாள்: பதிவு எண் இரண்டு
ஸ்ரீ மகா பத்னி தேவாலயா வளாஹத்தில் இருக்கும் புகழ் பெற்ற இடம் ஸ்ரீ தலதா மாளிகை (Sri Dalada Maligawa) – இலங்கையின் புனிதமான பௌத்த வழிபாட்டுத்தலம். இது கண்டி நகரின் மையத்தில் உள்ளது. இலங்கையின் மிக முக்கியமான பௌத்த கோவில் மற்றும் உலக அளவில் பிரபலமானது. இது “பல் கோவில்” என்று தமிழில் அழைக்கப்படுகிறது. இது உலக பாரம்பரிய தளமாக UNESCO நிறுவனம் 1988Lல்ள் அறிவித்துள்ளது.. இதனுள் புத்தரின் பல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல் இந்தியாவிலிருந்து கி,பி. நாலாம் நூற்றாண்டில் கொண்டுவரப்பட்டது. ஆகஸ்ட் மாதம் பத்து நாட்கள் எசல பெஹரா என்ற விழா கொண்டாடப்படும். அப்போது இந்தப் பல் ஊர்வலமாக எடுத்துவரப்படும். இலங்கையில் ஜனாதிபதி பதவி ஏற்கும் முன் இந்தக் கோவிலுக்கு வந்தபின்தான பதவி ஏற்பது வழக்கம்.. ஆண்டுக்கு ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வருவதாகச் சொல்லப்படுகிறது. நாங்கள் சென்ற அன்று இது பார்வையாளர்ர்களுக்காகத் திறக்கப்படவில்லை..
அடுத்து நாங்கள் சென்ற இடம் ஜெம் ம்யூசியம்\
அந்த மியூசியத்தின் உள்ளே நுழைந்ததும் திகைத்துப் போனோம்.எங்கு பார்த்தாலும் ரத்தினங்கள், வைரங்கள், முத்துக்கள் பவளங்கள்.. இலங்கை அதன் இரத்தினக் கற்களின் பெரும் அளவு மற்றும் நேர்த்தியான பன்முகத்தன்மைகளுக்காக உலகம் முழுவதும் நன்கு அறியப்பட்டதாகும். இந்த ரத்தினக் கற்கள் முக்கியமாக பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் காணப்படும் வண்டல் சரளைகளில் காணப்படுகின்றன, இதில் துணை மலை ஓடைகள் பாய்கின்றன, அவை வானிலையின் மூலம் வெளியிடப்படும் ரத்தினக் கனிமங்களை எடுத்துச் செல்கின்றன, இது மலை உச்சிகள் அல்லது மலைப்பகுதிகளில் அமைந்துள்ள படுக்கை பாறை மூலங்களாக மாறுகிறது. ரத்தினக் கற்களைக் கொண்ட வண்டல் உருவாக்கத்தைத் தவிர, சில பாறைகளிலும் ரத்தினக் கற்கள், குறிப்பாக கோரண்டம் வகைகள் இருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது..
ஆரம்ப காலங்களில் இலங்கை ஒரு காலத்தில் "இரத்தின-தீபம்" என்று மிகவும் பொருத்தமாக குறிப்பிடப்பட்டது, இது "இரத்தினக் கற்களின் தீவு" என்பதன் பொருளைக் குறிக்கிறது. ரத்னா-த்வீபம் என்ற பெயர் பல வரலாற்றில் காணப்படுகிறது. உலகின் ஐந்து மிக முக்கியமான ரத்தினக் கற்கள் கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். விலைமதிப்பற்ற மற்றும் விலையுயர்ந்த கற்கள் அதிக அளவில் கிடைப்பதும், ஏற்றுமதியாளர்களின் நிபுணத்துவமும் உலக சந்தைக்கு ஒரு வரப்பிரசாதமாகும்.. உலகிலேயே அதிக ரத்தின அடர்த்தி கொண்ட நாடுகளில் இலங்கையும் ஒன்று ,
இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ள வகைகளான
ரூபி, ஸ்பைனல், நீலக்கல்,கார்னெட், அக்வாமரைன், டூர்மலைன் , சைமொபேன் புஷ்பராகம், அலெக்ஸாண்ட்ரைட், செவ்வந்திக்கல், ரோசே க்வார்ட்ஸ், அகட், சிற்றின், சந்திறக்கள்
.
இங்குள்ள பள்ளத்தாக்குகளிளிருந்து ரத்தினங்கள் எடுக்கப்படுகின்றன. ரத்தினக் கற்கள் வெட்டப்பட்டு பாலிஷ் செய்யப்பட்டுச் சந்தைக்கு வருகின்றன. இதனால் கிராமப்புறத் தொழிலளர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இப்படி ஆண்டுக்கு ஐநூறு மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ரத்தினங்கள், வைரங்கள், பவளங்கள், முத்துக்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இது இலங்கையின் முன்னேற்றத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. நீங்கள் என்ன வாங்கினீர்கள் என்று என்னைக் கேட்கிறீர்களா? பவளங்கள் அருமையாக இருந்தன. அவைகளைப் பார்த்தோம். ஆனால் தனித் தனியாக வாங்கி என்ன பயன்? அவைகளைப் பதிப்பதற்கு மோதிரங்கள், சங்கிலிகள் வேண்டுமே? தங்கத்தின் விலை கண் முன் வந்தது. பர்சை உள்ளே வைத்து வெளியே வந்து விட்டோம்.
பயணம் தொடரும்
No comments:
Post a Comment