இலங்கையில்
ஏழு நாட்கள்
=================
ஐந்தாம் நாள் பதிவு எண் ஒன்று
யாழ்ப்பாணத்தை நோக்கி...................
இன்று நாங்கள் வவுனியா வழியாக யாழ்ப்பாணம் பகுதிக்குள் நுழைந்தோம். எனக்கு மனதிற்குள் மகிழ்ச்சி. காரணம் நான் ஆரம்பத்திலேயே சொல்லி இருந்தேன். நூறு ஆண்டுகளுக்கு முன் எனது தாயார் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுனாகம் என்ற இடத்தில் பிறந்தார். அந்தப் பகுதிக்குச் செல்லப் போகிறோம் என்ற மகிழ்ச்சி. நான் என்றாவது ஒரு நாள் இந்தப் பகுதிக்கு வருவேன் என்று நினைத்ததேயில்லை.
வவுனியா தாண்டியதும் மாங்குளம், கிளிநொச்சி போன்ற ஊர்கள் வந்தன. இந்தப் பெயர்களை அந்தக் காலத்தில் இலங்கை வானொலியில் கேட்டுள்ளேன். இன்று அந்த இடங்களை நேரில் பார்க்கும்போது மனதில் ஒரு மகிழ்ச்சி. நாங்கள் செல்லும்போது எங்கள் பேருந்து செல்லும் பாதையை ஒட்டி ரயில்வே இருப்புப்பாதையும் இருந்தது. இது கொழும்புவையும் யாழ்ப்பாணத்தையும் இணைக்கும் இருப்புப் பாதை. இந்தப் பாதையில் ஓடும் இரயில்களைக் கட்டி இலங்கைக்குப் பரிசளித்துள்ளது இந்திய அரசு.
ஆயினும் யாழ்ப்பாண பகுதிகள் இன்னும் 11983-2009 போரின் தாக்கத்திலிருந்து விடுபட்டதாகத் தெரியவில்லை.. மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படவில்லை.. முப்பது ஆண்டுகள் நடந்த போரில் மூன்று லட்சம் பேர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இதன் பாதிப்பு இரண்டு மூன்று தலைமுறைக்குத் தொடரும்.. பல லட்சம் பேர் புலம் பெயர்ந்து கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா நாடுகளுக்குச் சென்று விட்டனர். வேலை வாய்ப்புகளே இல்லாத நிலையில் இன்னும் இளைஞர்கள் புலம் பெயர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர்.
யாழ் பகுதியில் முக்கியமான தொழில்கள் விவசாயம், மற்றும் மீன் பிடித்தல். யுத்தத்தின் காரணமாக பல கட்டுமானங்கள் அழிந்த நிலையில் அந்தப் பகுதியில் முதலீடு செய்ய யாரும் முன்வருவதில்லை. புலம் பெயர்ந்து சென்று வெளி நாட்டுகளில் வாழும் தமிழர்கள் தங்கள் பகுதிக்கு விடுமுறையில் வந்தாலும் அவர்களும் இந்தப் பகுதியில் முதலீடு செய்ய விரும்பவில்லை. அதனால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பதே இல்லை.
அச்சு வெளி என்ற இடத்தில் அரசாங்கம் தொழிற்பேட்டை அமைத்துள்ளது. ஆனாலும் அதிலும் ஐம்பது சதவீதமே தொழில் தொடங்கப்பட்டுள்ளது.
தனி நபர் வாருமானம்
=======================
· Per capita income: National average is about USD 4,500. Colombo is well above that (closer to USD 6,000–7,000), while Jaffna is below (around USD 2,500–3,000).
· Sri Lanka’s economy: GDP growth in 2024 was about 5%, but the country is still fragile after its 2022 debt default. Inflation and debt remain challenges. Contribution to GDP from Colombo area is 42% and Jaffna is less than 5%
இதிலிருந்து யாழ்ப்பாணம் பகுதியின் வாழ்வோரின் நிலையைப் புரிந்து கொள்ளலாம்.
நமது ஊரில் செய்தித்தாள் விற்பதற்கு கடைகள் உள்ளது போல அங்கு எங்கும் கடைகள் தென்படவில்லை. நமது ஊரில் செய்தித்தாளுக்கு வால் போஸ்ட் போடுவது போல அங்கு எங்கும் தென்படவில்லை. நாங்கள் ஊருக்கு கிளம்பும் சமயம் சாவகச் சேனை என்ற ஊரில் ஒரு கடையில் வீர கேசரி என்ற செய்தித்தாள் பார்த்தோம் விலையைக் கேட்டதும் ஒரே ஷாக். அதன் விலை இலங்கை ரூபாய் 150/=. அதாவது இந்திய ரூபாயில் ஐம்பது ரூபாய். நம் நாட்டில் விலை பத்து ரூபாய் என்றாலே யாரும் செய்தித்தாள் வாங்கமாட்டார்கள். அங்கு வியாபாரம் ஆகிறதா என்று தெரியவில்லை. யாரும் சாலைகளின் ஓரத்தில் நின்று செய்தித்தாள் படித்து நான் பார்க்கவில்லை.
யாழ்ப்பாணத்திலேயே அறுபத்து ஐந்து பிரதான ஆலயங்கள் இருப்பதாக பயண ஏற்பாட்டாளர் தெரிவித்தார். அவை அனைத்தையும் பார்ப்பது கடினம் என்றும் சொல்லிவிட்டார். யுத்தத்தில் சேதமடைந்த சில முக்கியமான ஆலயங்களை நமது பிரதமர் மோடி நல்ல முறையில் மீண்டும் புனரமைத்துக் கொடுத்ததாகவும் சொன்னார். அதில் ஒன்று கீரி மலை நகுலேஸ்வரன் கோவில். இது தவிர இந்திய அரசு வடக்கு மற்றும் கிழக்கு இலங்கையில் USD 350 million நிதியில் 50000 வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளது . USD 800 million செலவில் ரயில் பாதைகளை புனரமைத்து கொடுத்துள்ளது . மருத்துவ சேவைக்காக நூறு ஆம்புலன்ஸ் வழங்கி உள்ளது soft cultural diplomacy மூலம் சேதமடைந்த பள்ளிகள், கல்லூரிகள் கோவில்கள், சர்ச்கள் மற்றும் மசூதிகளை புனரமைக்க உதவி உள்ளது. 2022-23 இலங்கையின் பொருளாதாரம் மோசமான நிலையை எட்டியபோது 54 பில்லியன் டாலர் அளவுக்கு உதவி செய்துள்ளது. சமீபத்தில் புயலினால் பாதிக்கப்பட்டபோது கூட தேவையான உதவிகளைச் செய்துள்ளது. இந்த உதவிகளை இலங்கை மறக்காமல் இருக்கவேண்டும்.
=========
இருள் சூழ்ந்த வடநிலம்,
ஆலயங்கள் சிதைந்தன;
பக்தியின் குரல் மௌனமாய்,
கண்ணீர் மட்டும் ஓடியது.
அண்ணன் நாடு கரம் நீட்டி,
அருளின் ஒளி பரப்பியது;
வீடுகள், பள்ளிகள், ஆலயங்கள்,
மீண்டும் மலர்ந்தன நம்பிக்கையால்.
கோணேசம் மீண்டும் மலர்ந்தது,
சங்கரி சக்தி சின்னமே;
பக்தியின் ஒளி பரவியது,
நம்பிக்கை மீண்டும் உயிர்த்தது.
யாழின் இதயம் மீண்டும் மலர்ந்தது,
நாகுலேஸ்வரன் புகழ் பரவியது;
பக்தர்கள் கண்ணீர் ஆனந்தமாய்,
அருள் இசை மீண்டும் ஒலித்தது.
==========
பயணம் தொடரும்
No comments:
Post a Comment