Sunday, January 25, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள

===============

  

ஐந்தாம் நாள் பதிவு எண் மூன்று


Boat mail service

 

நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன் துறை வழியாகப் பேருந்தில் சென்றோம். காங்கேசன் துறையில் ஒரு இரயில் நின்று கொண்டிருந்தது. பயண அமைப்பாளர் அதை boat mail என்று சொல்லுவார்கள் என்றார். அதாவது ஒரு காலத்தில் சென்னைக்கும் இலங்கைக்கும் இடையே ரயில் போக்குவரத்து இருந்தது அதை நினைவு கூறும் விதமாக அந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது என்றார். சரி வலையைத் திறந்து விவரங்கள் அறிந்து கொள்வோமே என்று முனைந்தேன்.

  

Boat Mail Express என்பது இந்தியா–இலங்கை (Ceylon) இடையே 50 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிய புகழ்பெற்ற ரயில்–கப்பல் சேவை. சென்னை எக்மோர் முதல் ராமேஸ்வரம் வரை ரயில், அங்கிருந்து தணுஷ்கோடி துறைமுகம், பின்னர் கப்பலில் தலைய்மன்னார் (இலங்கை), அங்கிருந்து மீண்டும் ரயிலில் கொழும்பு வரை பயணம் செய்யும் ஒருங்கிணைந்த சேவையாக இருந்தது 1876-இல் “Indo-Ceylon Express” என அறிமுகம்; 1914-இல் பாம்பன் பாலம் திறக்கப்பட்ட பின் “Boat Mail Express” என பெயர் பெற்றது இதன் சிறப்பம்சம்சம் ஒரே டிக்கெட்டில் சென்னை முதல் கொழும்பு வரை பயணம் செய்ய முடிந்தது.

  

19 முதல் 20 ஆம் நூற்றாண்டு வரையிலான தொடக்கத்தில், அப்போது சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கை, 1970 களில் பாரசீக வளைகுடா நாடுகள் மாறியதைப் போலவே தென்னிந்தியாவிற்கு இருந்தது: வேலை வாய்ப்புகள் அத்ரிஷ்டத்தைத் தேடித்தந்தன.  தேயிலைக்கான உலகளாவிய பசியைத் திருப்திப்படுத்துவதற்காக, பிரிட்டிஷார் தீவில் பல தேயிலைத் தோட்டங்களை அமைக்க உதவினர், அவற்றை நிர்வகிக்க தொழிலாளர்கள் இல்லை. எனவே, 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீபகற்ப இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் மக்கள் மற்றும் பொருட்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்காக, வெள்ளையர்கள்  இரண்டு காலனிகளையும் ரயில் மூலம் இணைக்க முடிவு செய்தனர்.

 

நாடுகளை இணைப்பதற்கான முதல் படி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரு ரயிலாக இருந்தது, அங்கிருந்து பயணிகள் இறங்கி நீராவிக் கப்பலில் கொழும்புக்குச் செல்வார்கள். 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கடினமான பயணம், கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் எடுக்கும், ஏனெனில் 709 கிலோமீட்டர் ரயில் பயணம் 21 மணி நேரம் 50 நிமிடங்கள் நீடித்தது,  .இதனால் மண்டபத்தை ராமேஸ்வரத்துடன் இணைக்கும் பாம்பன் பாலம் 1914  ள் கட்டப்பட்டது. அன்று அது பிரிட்டிஷ் அரசின் சாதனையாகக் கருதப்பட்டது.

  

பிறகு அந்த boat mail பிறந்தது. அது எழும்பூரில் இருந்து புறப்பட்டு தனுஷ்கோடியில்  முடிவடையும். ஆனால் 1964  தனுஷ் கோடி புயலால் பாதிக்கப்பட்டதால் கப்பல் போக்குவரத்து நின்றது.  தற்போது சென்னையிலிருந்து இராமேஸ்வரம் செல்லும் ரயில் இன்னும் boat mail என்று தான் செல்லமாக அழைக்கப்படுகிறது. சமீபத்தில் தான் நாகப்பட்டினத்திற்கும் இலங்கை காங்கேசன் துறைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கி உள்ளது.

 

யாழ்ப்பாணக் கோட்டை

    

யாழ்ப்பாணக் கோட்டை என்பது யாழ்ப்பாணத்தை ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சியாளர்கள் ஆண்ட காலத்தில் கட்டப்பட்ட கோட்டையாகும். முதலில் போர்த்துக்கீசரால் அமைக்கப்பட்ட 1618ல்இக் கோட்டை பின்னர் டச்சுக்காரர்களால் 1680 ல்  இடித்து மீளவும் கட்டப்பட்டது. 1980களின் இறுதிக்காலம் வரை நல்ல நிலையில் இருந்த இக் கோட்டை பின்னர் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் தாக்கத்தால் சிதைவடைந்த நிலையில் இருந்தது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் டச்சு  அரசின் உதவியுடன் திருத்தப்பட்டுள்ளது. பின்னர் பிரிட்டிஷ் ஆட்சியிலும் பயன்படுத்தப்பட்டது. இன்று இது இலங்கையின் இரண்டாவது பெரிய கோட்டை ஆகும், யாழ்ப்பாணத்தின் வரலாற்று, கலாச்சாரச் சின்னமாக விளங்குகிறது யாழ்ப்பாணக் கோட்டை, போர்த்துகீசியர்–டச்சு–பிரிட்டிஷ் ஆட்சியின் அடையாளம், வட இலங்கையின் வரலாற்று, கலாச்சாரச் சின்னம். இன்று இது பாரம்பரியச் சுற்றுலா தலம் ஆக, யாழ்ப்பாணத்தின் பெருமையை வெளிப்படுத்துகிறது.. இப்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருப்பதால் நாங்கள் வெளியிலிருந்தே பார்த்து மகிழ்ந்தோம்.


பயணம் தொடரும்







No comments: