இலங்கையில்
ஏழு நாட்கள்
===============
இலங்கைக்குச் சென்று வருவது என முடிவு செய்தேன். ஏன் இலங்கை? இந்தியாவில் எல்லா இடங்களும் பார்த்தாகி விட்டதா? என்ற உங்கள் கேள்வி புரிகிறது. உடலில் தெம்பு இருக்கும்போது இலங்கைக்கு சென்று வந்துவிடுவோம் என்ற எண்ணம் தான். இலங்கை எனது தாயின் தாய் நாடு. என்னது புரியவில்லையா? எனது தாய் யாழ்ப்பாணம் அருகே உள்ள சுநாகம் என்ற பகுதியைச் சேர்ந்தவர். 1943 ல் தனது திருமணத்திற்காக இலங்கையிலிருந்து இங்கு குடிபெயர்ந்தார். 1943 மார்ச்சில் திருமணம் 1956 மார்ச்சில் அமரர் ஆகிவிட்டார். அப்போது எனக்கு வயது ஐந்து. அன்னையுடன் இருக்கமுடியவில்லை அன்னை பிறந்த மண்ணையாவது பார்த்து விடுவோம் என்ற எண்ணத்தில் சென்றென்
அதிகாலை இரண்டு மணிக்கு விமானம் கொழும்பு சென்றடைந்தது. நாற்பத்து எட்டுபேர் கொண்ட எங்கள் குழுவிற்காக பேருந்து தயாராக இருந்தது. நீர் கொழும்பபு வழியாக பேருந்து சென்றது. சரியாக நான்கு மணிக்கு ஒரு தேநீர் கடை வாசலில் நின்றது. பொறுப்பாளர் ஒரு குண்டு போட்டார். இங்கு பாலே கிடையாது. இறக்குமதி செய்யப்பட்ட பவுடர் பால் தான். மெஷின் காபி தயார் செய்வதால் சர்க்கரை முதலிலேயே கலந்து விடுவர். மீண்டும் இந்தியா திரும்பும் வரை சர்க்கரை நோயாளிகளுக்கு சிரமம் என்று சொல்லிவிட்டார்.
"என்னது!பாலே கிடையாதா? அப்புறம் எப்படி?" இணையத்தின் பக்கங்களைப் புரட்டினேன். அவர் சொல்வது சரிதான். மாட்டிலிருந்து பால் கறப்பது” என்ற நடைமுறை அங்கு மிகக் குறைவாகவே உள்ளது; இலங்கையில் உள்ளூர் பால் உற்பத்திச் செலவு அதிகமாக இருப்பதால், இறக்குமதி செய்யப்பட்ட பால் பவுடர் பெரும்பாலும் மலிவானதாகவும், எளிதில் கிடைக்கக்கூடியதாகவும் உள்ளது. அதனால் அரசு மற்றும் வணிகர்கள், உள்ளூர் பசும்பால் உற்பத்தியை விரிவாக்குவதற்குப் பதிலாக, வெளிநாடுகளில் இருந்து பால் பவுடரை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கின்றனர். காரணம் இங்கு மேய்ச்சல் நிலங்கள் மிகவும் குறைவு. உள் நாட்டு உற்பத்தி நாட்டின் தேவையில் முப்பது முதல் நாற்பது சதவீத தேவையைத்தான் எதிர்கொள்ள முடியும். அதனால் தேவையைப் பூர்த்தி செய்ய நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இறக்குமதி செய்கிறது. 2025ம் ஆண்டில் இலங்கை சுமார் 2,700க்கும் மேற்பட்ட கப்பல்கள் மூலம் சரக்குகளை இறக்குமதி செய்துள்ளது. இலங்கை ஆண்டு ஒன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் பால் உபயோகப்படுத்துகிறது. ஆண்டு ஒன்றுக்கு 8௦௦௦௦ முதல் 90000 மெட்ரிக் டன் பால் பவுடர் இறக்குமதி செய்யப்படுகிறது.
ஆக இலங்கையில் நகரக் குழந்தைகள் எல்லோரும் பவுடர் பாலைக் குடித்துத்தான் வளர்கின்றனர். இன்னும் இருபத்து ஆண்டுகள் கழித்து அங்கு பசு மாடுகளை மியூசியத்தில் தான் பார்க்க முடியும். இப்போது புரிகிறதா, நமது பிரதமர் ஏன் அமெரிக்காவின் பால் பவுடர் கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்துயிட மறுத்தார் என்று. உள்ளூர் உற்பத்திச் செலவு இறக்குமதியை விட அதிகம்தான். ஆனாலும் நமது விவசாயிகள் பாதிக்கக்கூடாது என்பதற்காக அவர் அந்த முடிவு எடுத்தார்.
இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்கும்போது தங்கும் விடுதி வந்துவிட்டது. மீதி அடுத்த பதிவில்.
No comments:
Post a Comment