வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் எழுச்சி
பதிவு எண் 399
நேற்றைய தொடர்ச்சி
ஜாம்பவான் ஹனுமனின் வீரத்தை அவனுக்கு உணர்த்துவதை நலுங்கு மெட்டு இராமாயணத்தில் எவ்வாறு கூறப்பட்டுள்ளது என்று பார்ப்போம்.
===========================================
இஷ்டசித்தி நிறைவேற இருக்குதையா மார்கமொன்று
கஷ்டமில்லை நஷ்டமில்லை காரியத்தைத் தேறிச்செய்யப்
புத்தியிலும் சக்தியிலும் பொறுமையிலும் அருமையுள்ள
எத்தனையோ பெருமையுள்ள சித்தசுத்தி மிகவுமுள்ள
உத்தமராம் அனுமாரை உபசரிப்போம் சுபம்பெருக
--------------------
இத்தரையில் அவராலேயே எல்லாங்கை கூடுமையா
மருமமெல்லாம் அவரரிவார் மாதவனாம் ஸ்ரீ இராமனுக்குப்
பிரியமுடன் உழைத்திடவே பிரபஞ்சனந்தன் லுதித்துவந்தார்
தன்னுடைய பலமறியார் தகுந்தபடி யுபசரித்துச்
சொன்னலவர் பலமிகுமே சுளுவிலெல்லாம் சாதிப்பாரே
-----------------------
ஆகையினால் அனுமாரை அடுத்துரைப்போக் வருமென்று
தாகமுடன் எழுந்தாரம்மா தனியாக ஓரிடத்து
மவுனமாக விருக்குமந்த மருதியை வந்துசூழ்ந்து
விவரமெல்லாஞ் சொன்னதோடு வெகுவிதமா உபசரித்துப்
புகழ்ந்தாரம்மா................
(நலுங்கு மெட்டு இராமாயணம்)
===========================================
தொடரும்
No comments:
Post a Comment