இலங்கையில்
ஏழு நாட்கள்
===================
மூன்றாம் நாள்: பதிவு எண் மூன்று
அதடுத்து நாங்கள் சென்ற இடம் hernal and spices garden
ஒரு காலத்தில் இலங்கை “Spice Island” என அழைக்கப்பட்டது; பண்டைய காலத்தில் அரபு, போர்த்துகீசியர், டச்சு, பிரிட்டிஷ் ஆகியோர் மசாலா வணிகத்தில் ஈடுபட்டனர். கண்டி Spice Gardens இலங்கையின் மத்திய மாகாணத்தில், தேயிலை மற்றும் மசாலா வளர்ப்பின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் சுற்றுலா மையங்கள். இவை சீனமன், ஏலக்காய், மிளகு, ஜாதிக்காய், மாஸ் போன்ற மசாலாக்களின் வரலாறு, பயிரிடும் முறைகள், மருத்துவப் பயன்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துகின்றன. அங்கு ஆயுர்வேத சிகிச்சைகள், மசாஜ், சமையல் விளக்கங்கள் போன்ற செயல்பாடுகள் நடக்கின்றன. மசாலா, எண்ணெய்கள், அழகு சாதனங்கள், மூலிகை மருந்துகள் விற்கப்படுகின்றன; சில பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கண்டி பகுதியில் உள்ள Spice Gardens இந்த பாரம்பரியத்தை சுற்றுலாப் பயணிகளுக்கு காட்டும் வகையில் 20ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டன.இங்கு விற்கப்படும் பொருட்கள் சீனமன், ஏலக்காய், மிளகு, ஜாதிக்காய், மாஸ். மூலிகை சோப்புகள், கிரீம்கள், பவுடர்கள். மூலிகை கஷாயம், சிரப், பவுடர். ஏற்றுமதி மூலம் இலங்கை அரசுக்கு கணிசமான அந்நிய செலவாணி கிடைக்கிறது.
நாங்கள் சென்றபோது அங்குள்ள ஆயுர்வேத மருத்துவர் அந்தக் காட்டைச் சுற்றியுள்ள மலை சஞ்சீவி மலை என்றார். ஹனுமன் மயக்கமடைந்த இலக்ஷ்மணனை உயிர்பிக்க இமயமலையிளிருது சஞ்சீவி மலையைத் தூக்கி வரும்போது மலையின் ஒரு துண்டு அங்கு விழுந்து மலையாயிற்று என்றார். சஞ்சீவி செடியையும் காண்பித்தார். ஆனால் அதற்கு ஆதாரங்கள் தரவில்லை. அவர் சர்க்கரை நோய் மற்றும் மூட்டு வலிக்கான சிகிச்சை முறைகளையும் சொல்லி அந்த மருந்துகள் தோட்டத்தில் கிடைக்கும் என்றார். ஆனால் விலைதான் அதிகம். மற்றப்படி மசாலா பொருட்கள் ஆயுர்வேத பொருட்கள் எல்லாம் மிகச் சுத்தமான முறையில் அங்கு விற்கப்படுகின்றன. அங்கு விளைந்த காய்கறிகளைக் கொண்டு எங்களுக்கு சுவையான ஆர்கானிக் உணவு வழங்கப்பட்டது. மிக மிக அழகான இடம்.
அடுத்து நாம் சென்றது
தம்புள்ள தங்க புத்தர் கோவில் (Dambulla Golden Buddha Temple) –
தம்புள்ளை பொற்கோவில் (Dambulla Golden Temple / Dambulla Cave Temple) இலங்கையின் மத்திய மாகாணத்தில், மாத்தளை மாவட்டத்தில் அமைந்துள்ள UNESCO உலக பாரம்பரியச் சின்னம். இது பண்டைய குகை கோவில் தொகுப்பு ஆகும்; 150க்கும் மேற்பட்ட புத்தர் சிலைகள், சுவற்றோவியங்கள், மற்றும் பண்டைய சிங்கள அரசர்களின் வரலாற்றை வெளிப்படுத்துகிறது. இதன் சிறப்பு உலகின் மிகப் பெரிய தங்க புத்தர் சிலை (Golden Buddha Statue) இங்கு உள்ளது. – உயரம் 30 மீட்டர் (98 அடி), எடை 300 டன். 2000களில் கட்டப்பட்டது. கோவிலின் உள்ளே உள்ளே 48 மீட்டர் நீளமான புத்தர் படுக்கை சிலை உள்ளது. . இலங்கைச் சுற்றுலாவின் மிகப் பெரிய தலங்களில் இதுவும் ஒன்று – ஆண்டுக்கு ஒரு மில்லியனுக்கும் மேற்பட்டோர் வருகை தருகின்றனர்/
நேரமின்மையால் உள்ளே செல்லாமல் வெளியில் இருந்து பார்த்து விட்டு வந்தோம். அங்கு எனக்கு அவசரமாக கழிப்பறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று. ஒருவருக்கு கட்டணம் நூறு இலங்கை ரூபாய். நமது நாணயத்தில் முப்பத்தி இரண்டு ரூபாய். நீங்கள் ஒன்றோ இரண்டோ எதற்குப் பயன் படுத்தினாலும் அதே கட்டணம். மொத்தத்தில் அது நுழைவு கட்டணம். நூறு ரூபாய் கொடுத்துவிட்டேன் என்பதற்காக சுஜாதா சொன்னது போல குடம் குடமாகக் கொட்டமுடியுமா?
பயணம் தொடரும்.
No comments:
Post a Comment