Friday, January 23, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் ஒன்று

  

நம்மில் பெரும்பாலோர் வால்மீகி இராமாயணம், கம்ப இராமாயணம் படித்து இருப்போம். ஆனால் துளசி தாசரின் இராமாயணமாகிய இராம சரித மானஸ் படித்து இருக்கும் வாய்ப்புகள் குறைவு.  வட இந்தியாவில் மக்களிடையே பிரபலமானது இந்த ராம சரித மானஸ். அவதி மொழியில் எழதப்பட்டது. இதை மிக மிகப் புனித நூலாகக் கருதுகின்றனர். காசி, சோமநாத் ஆலயங்களுக்குச் சென்றவர்கள் அங்கு நிறைய பேர் ஆலயத்தினுள் இராம  சரித மானஸ் படித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.

 

கடந்த ஐந்து ஆண்டுகளாக வால்மீகி, கம்பர், துளசிதாசர் ஆகியோர் எழுதிய இராமாயணத்தில் பால, அயோத்தியா, ஆரண்ய காண்டங்களைத் தொகுத்து முகநூலில் வெளியிட்டு விட்டேன். வால்மீகியின் கிஷ்கிந்தா கண்டத்தைத் தொகுத்தும் வெளியிட்டு விட்டேன். கொரோனா காலத்தில் எல்லோரும் நலமாக இருக்க வேண்டி சீதா கல்யாணம் எழுத வேண்டும் என்று ஆரம்பித்து பிறகு பால காண்டத்திலிருந்து ஆரம்பித்து கிஷ்கிந்தா காண்டம் வரை வந்து விட்டேன்.. இதற்கிடையில் துளசிதாசரின் கிஷ்கிந்தா காண்டத்தைத் தொகுத்து விட்டேன்.  நான் முன்பு சொன்னது போல்  இது ஒரு மொழிபெயர்ப்பு அல்ல. கதையுடன் இணைந்த ஆய்வு.  இதில் வால்மீகி, இராமாயணம், ஆத்யாத்ம இராமாயணம்,  நலுங்கு மெட்டு இராமாயணம் முதலிய இராமாயணங்களையும் ஒப்பிட்டுத் தொகுத்துள்ளேன்.


இந்த ஆய்வில் எனக்கு மிக உறுதுணையாக இருந்த நூல்கள்

 

1.       திரு அஞ்சனி நந்த சரண் எழுதி கீதா பிரஸ் வெளியிட்ட மானஸ் பியுஷ்

2.        திரு அஜய் குமார் சவ்சாரியாவின் ராமசரித மானஸ்

 

இவர்களுக்கும் புத்தகத்தை வெளியிட்ட நிறுவனங்களுக்கும் மனமார்ர்ந்த நன்றி. எல்லோரும் இதைப் படித்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும். எல்லோருக்கும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியும் அன்னை சீதையும் அருள் பாலிக்கவேண்டும் என்று வேண்டி இந்தப் பயணத்தைத் துவங்குகிறேன்


நாளை சந்திப்போம்

No comments: