Tuesday, March 31, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 62

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமன் தனக்கு ஒன்றுமே தெரியாது, ஞானமில்லாதவன். எனது தலைவனை மட்டும் நம்பி இருக்கிறேன் என்று சொல்கிறான். அதாவது எனக்கு இறைவனை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வேறு பாதையும் இல்லை என்று அந்த நாராயணனிடம் சரண் அடைகிறான். அதாவது சர்ரனாகதி தத்துவத்தில் இது முதல் அம்சம். . அப்படியானால் சரணாகதி தத்துவத்தின் அந்த ஆறு அங்கங்கள் என்ன?

 

अनुकूलस्य संकल्पः प्रतिकूलस्य वर्जनम् ।

रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्वे वरणं तथा ।

आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागति:

 

இந்த சுலோகம் ஹரி-பக்தி-விலாஸம் (என்ற வைஷ்ணவக் கிரந்தத்தில் இருந்து வருகிறது, இது ஸ்ரீ சனாதன கோஸ்வாமி அவர்கள் எழுதியது. இதில் ஷட்விதா சரணாகதி பகவானிடம் சரணாகதியாக இருப்பதற்கான ஆறு முக்கிய அம்சங்கள் விளக்கப்படுகின்றன.

 

சரணாகதி ஆறு அம்சங்கள்

 

1.       அனுகூலஸ்ய ஸங்கல்ப

 

 நன்மைக்கே மனதளவில் ஒப்புதல்

பகவானுக்கு ஏற்ற, தர்மத்துக்கு ஏற்ற, பக்திக்கு ஏற்ற செயல்களை மனதாலும், செய்கையாலும் ஏற்கும் மனநிலை.

 

-உதாரணம்: ஜபம், பஜனம், தர்மம், பக்தி, சேவை.

நான் பகவானுக்கே உகந்ததைச் செய்கிறேன்என்ற மனநிலை.

 

 

2.       ப்ரதிகூலஸ்ய வர்ஜனம்

 

 தர்மத்துக்கு எதிரானதைத் தவிர்த்தல்

 

-பக்திக்கு விரோதமான, தர்மத்துக்கு எதிரான, மாயை சார்ந்த செயல்களை முழுமையாக விலக்குதல்.

 

-உதாரணம்: அகங்காரம், ஆசை, பொய், வன்மம்.

பகவானுக்கு விரோதமானதை நான் செய்ய மாட்டேன்என்ற உறுதி.

 

 

3.       ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸ:

 

 பகவான் என்னை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை

 

-எந்த சூழ்நிலையிலும், பகவான் என் பாதுகாவலர் என்ற உறுதியான நம்பிக்கை.

-இது பக்தியின் ஆதார நம்பிக்கை.

 

என்னை யாரும் காப்பாற்ற முடியாது; பகவானே என் காப்பாளர்”.

 

தொடரும்


Monday, March 30, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 61

 

நேற்றைய தொடர்ச்சி

 

 

“நான் உங்கள் மாயையால் கட்டுண்டவன். ஆம். எனக்கு காலத்தின் கொடுமையினால், விதியின் கடுமையினால் பல அவகுணங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஸ்வாமி ! நான் உனக்கு சேவகம் செய்யப் பிறந்திருக்கும் புத்திரன் அல்லவா? என் பிரபுவாகிற நீர்,எனக்கு எஜமானரல்லவா? (அதாவது நான் மாயையில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் விளையாடியவர் ஆயிற்றே. தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா?” என்று இராமனிடம்   ஹனுமன்  கேட்கிறான்.

 

  

जदपि नाथ बहु अवगुन मोरें। सेवक प्रभुहि परै जनि भोरें॥

नाथ जीव तव मायाँ मोहा। सो निस्तरइ तुम्हारेहिं छोहा॥1॥

 


“இதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. சுவாமி! ஜீவர்கள் அனைவரும் உங்கள் மாயையினால் தானே கட்டுண்டு நிற்கிறார்கள். உனது அருள்தான் அவர்களை  உய்விக்கும். அண்ணலே!

 

 

* ता पर मैं रघुबीर दोहाई। जानउँ नहिं कछु भजन उपाई॥

सेवक सुत पति मातु भरोसें। रहइ असोच बनइ प्रभु पोसें॥2॥

 


“உன் மேல் ஆணை உம்மை பூஜிப்பதோ  உம்மை அடைவதற்கு யோகசாதனகளைச செய்வதோ  எனக்கு ஒன்றும் தெரியாது. எங்கேயாவது சேவகன் தனது எஜமானனை நம்பி வாழ்பவன் கவலைப் பாடுவானா? அது போல் தாயை நம்பி வாழும் குழந்தை கவலைப் படுமா? அதுபோல என்னை ரட்சிப்பவர் தாங்கள் தான். உமது திருவடிகளைச்  சரணம் அடைந்து  உம்மையே அண்டி நான் வாழ்வேன், துளசிதாசர் இங்கு कछु भजन उपाई॥ என்றப் பதப் பிரயோகம் செய்கிறார். அதாவது உன்னை நினைத்து சிறிதளவே பூஜித்தாலும் தாங்கள் அதை ஏற்றுக் கொள்வீர்கள். ஆனால் எனக்கு அந்தச் சிறிதளவு பூஜைகூட செய்யத் தெரியாது என்று ஹனுமன் பணிவுடன் சொல்ல முயல்கிறார். இந்த சுலோகம் ஹனுமானின் பதினாலாவது ஸ்துதி.. நட்சத்திரங்களில்  பதினாலாவது சித்திரை . ஹனுமானின் நட்சத்திரம் சித்திரை. மேற்கண்ட ஸ்லோகத்தை சொல்பவர்களுக்கு நன்மையே நடக்கும்.

 

தொடரும்

Sunday, March 29, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 60 



நேற்றைய தொடர்ச்சி

 

மீண்டும் துளசிதாசரிடம்.......................

 

பிறகு ஹனுமன் மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு  பகவானைப் போற்றினார். தமது தலைவனை அடையாளம் கண்டு கொண்ட  அவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. ஸ்ரீ இராமனைப் பார்த்து ஹனுமான் “சுவாமி! நான் தங்களைக் கேட்டவை அனைத்தும் நியாயமானதே. பல்லாண்டுகளுக்குப் பிறகு தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தவசி கோலத்தில். நான் ஒரு குரங்கு. அதனால் குரங்கு புத்திக்கு ஏற்ப உங்களை ஏதேதோ கேட்டேன். நான் உங்களைப் புரிந்து கொள்ளவில்லை.  ஆனால் நீங்கள் மனிதனைப் போல என் கதையைச் சொல்லும்படி கேட்பது விந்தையினும் விந்தை” என்றான்.


निज नाथहि चीन्हीं” பல ஆண்டுகளுக்குப் பிறகு  தங்களைப் பார்க்கிறேன். அதுவும் தபஸ்வி கோலத்தில் . இங்கு தான் மீண்டும் அந்த பத்ம இராமாயணத்தை நமக்கு நினைவு படுத்துகிறார், சிறு வயதில் இராமுனுடன் விளையாடியுள்ளார். பல ஆண்டுகள் ஓடி விட்டன. அதுவும் தவசி கோலத்தில் வேறு இருப்பதால் உடனே அடையாளம் தெரியவில்லை என்பதாகச் சொல்கிறார். அதனால் நான் கேட்டதில்  நியாயம் இல்லை. ஆனால் ஒரு மனிதனாக நீங்கள் கேட்டதில் என்ன நியாயம்? நீங்கள் பரப்பிரம்மம், எல்லாம் அறிந்தவர். அப்படி இருக்கும்போது தாங்கள் என்னிடம் எப்படிக் கேள்வி கேட்கிறீர்கள். தாங்கள் எல்லாம் தெரிந்தவர்தானே? என்று ஹனுமன் நினைக்கிறான்.

  

तव माया बस फिरउँ भुलाना। ता ते मैं नहिं प्रभु पहिचाना।।5।

एकु मैं मंद मोहबस कुटिल हृदय अग्यान।

पुनि प्रभु मोहि बिसारेउ दीनबंधु भगवान॥2

 

“நானோ தங்கள் மாயாவசத்தால் என்னை மறந்து திரிந்து கொண்டிருக்கிறேன். எனவே என் சுவாமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.”


 

प्रष्टव्यं योग्यमस्माकं त्वं पृच्छसि कथं नृवत्। 

मायावश्यो भ्रमाम्यत् प्रभु न ज्ञातवानतः॥

 

“நான் உங்கள் மாயையால் கட்டுண்டவன். ஆம். எனக்கு காலத்தின் கொடுமையினால், விதியின் கடுமையினால் பல அவகுணங்கள் ஏற்பட்டுள்ளன. இருந்த போதிலும், ஸ்வாமி ! நான் உனக்கு சேவகம் செய்யப் பிறந்திருக்கும் புத்திரன் அல்லவா? என் பிரபுவாகிற நீர்,எனக்கு எஜமானரல்லவா? (அதாவது நான் மாயையில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் என்னுடன் விளையாடியவர் ஆயிற்றே. தாங்கள் என்னை மறந்து விட்டீர்களா?” என்று கேட்கிறான்)

 

தொடரும்

Saturday, March 28, 2026

 





துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 59

 

நேற்றைய தொடர்ச்சி.........

 

முந்தைய பதிவில் நாரதரின் சாபத்தால் இராமாவதாரம் உண்டானது என்று பார்த்தோம்.

 

இராமனை எவ்வாறு அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன்.

 

இங்கு இன்னொரு கதை சொல்லப்படுகிறது. பத்ம இராமாயணம்  என்ற இராமாயணத்தில் இராமனின் இளமைக் கால விளையாட்டுகளைப் பற்றிய விவரங்கள் உள்ளன. அதில் இளம்வயதில் இராமன் குரங்குகளுடன் விளையாட ஆசைப்பட்டதாகவும் அதற்காக குரங்குகள் வரவழைக்கப்பட்ட்டதாகவும் ஆனால் இராமனுக்கு அந்த குரங்குகள் பிடிக்காததால் வசிஷ்டர் அஞ்சனையின் மகனான் ஹனுமனைக் கொண்டு வந்ததாகவும். இராமன் ஹனுமனுடன்  விளையாடியதாகவும் சொல்லப்படுகிறது. இராமனுக்கு ஐந்து வயதானவுடன் கல்வி கற்கச் சென்றபோது ஹனுமன் மீண்டும் அஞ்சனையிடம் ஒப்படைக்கப்பட்டான் என்று சொல்லப்படுகிறது.

 

சில உரையாசிரியர்கள் விஸ்வாமித்திரர் தாடகையின் வதத்திற்காக இராமனையும் இலக்ஷ்மணனையும் கூட்டிச் சென்றபோது ஹனுமன் அவர்களிடமிருந்து பிரிந்ததாகவும் சொல்லப்படுக்றது. இதனால் ஹனுமனுக்கு இராமனின் அடையாளம் புரிந்தது என்றும் சொல்கிறார்கள்.

  

இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது. அதாவது சூரியன் ஹனுமனின் குரு. அவருக்கு வேதங்கள் அனைத்தும் கற்றுத் தந்தவர்,  ஆப்பொழுது அவர் ஹனுமனிடம் “எனது அம்சமாக சுக்ரீவன் பூமியில் வானரனாகத் தோன்றுவான். அவனுக்கு அசம்பாவிதம் உண்டாகும்.. அப்போது நீ அவனுக்குத் துணை நிற்கவேண்டும். இதனால் உனக்கு நல்லது நடக்கக்கூடும். மாகாவிஷ்ணு பூமியில் மனிதனாக அவதாரம் எடுப்பார், அப்போது அவரது மனைவி அபஹரிக்கப்படுவாள்,, அவளைத் தேடிக்கொண்டு அவர் அங்கு வருவார்” என்று சொல்லி இருந்தார். அதனால் இராமனை எளிதில் அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன் என்று சில உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.

  

पुनि धीरजु धरि अस्तुति कीन्ही। हरष हृदयँ निज नाथहि चीन्ही॥

मोर न्याउ मैं पूछा साईं। तुम्ह पूछहु कस नर की नाईं॥4

 

தொடரும்


Friday, March 27, 2026

 


 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 58

 

நேற்றைய தொடர்ச்சி.........

  

நாரதரும் இராமனுக்கு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று  ஒரு சாபம் கொடுக்கிறார் அது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. அதனால் பூமிக்கு நன்மையே விளைந்தது.. நாரதர் இராமனுக்கு சாபம் இட்டார் என்ற கருத்து, அத்யாத்ம ராமாயணம் மற்றும் சிவபுராணம் போன்ற தத்துவ ரீதியான புராணங்களின் ஒரு ஆழமான விளக்கம் ஆகும். இது இறைவன் ஏன் மனிதராக அவதரிக்க வேண்டியது ஏற்பட்டது என்பதை விளக்கும் ஒரு கதை.

 

 கதைச் சூழ்நிலை:

 

ஒரு முறை, சிவபெருமான் பார்வதிக்கு இராமனின் அவதார ரகசியத்தை விளக்குகிறார். பார்வதி கேட்கிறாள்: “இராமன் ஜய-விஜயன் சாபத்தால் அவதரித்தாரா?” சிவபெருமான் பதிலளிக்கிறார்: “இல்லை, நாரதரின் சாபத்தினால்தான் திருமால் இராமனாக அவதரித்தார்”.

 

சாபக் கதை:

 

நாரதர், ஒரு சமயம் தபசில் ஈடுபட்டிருந்தார். தபசின் முடிவில், அவர் மனதில் ஒரு சிறிய அகந்தை கொண்டார்: “நான் காமத்தை வென்றவன்!”

 

அதைக் கண்டு விஷ்ணு, அவருக்கு ஒரு பாடம் கற்பிக்க விரும்பினார்.

 

அவர் மாயையால் உருவாக்கினார் — ஒரு அழகிய ராஜகுமாரி, ஒரு மன்னன், ஒரு திருமண சூழ்நிலை.


நாரதர், அந்த ராஜகுமாரியை விரும்பி, திருமணத்திற்காக விஷ்ணுவிடம் அழகான முகம் வேண்டினார்..ஆனால் விஷ்ணு, வானர முகம் (குரங்கு முகம்) கொடுத்தார்..

 

திருமணத்தில், ராஜகுமாரி மற்றொரு அரசனைத் திருமணம் செய்தாள், நாரதர்  உண்மையை உணர்ந்தார். - கோபத்தில், நாரதர் விஷ்ணுவை சபித்தார்:.“நீயும் மனிதராக பிறந்து, மனைவியை இழந்து,வானர உதவியால் தேட வேண்டிய நிலைக்கு வருவாய்!”- இதுவே இராமாவதாரத்தின் தத்துவ ரீதியான காரணம்

 

இறைவன், சாபத்தின் வழியே தர்மத்தை நிலைநிறுத்த மனிதராக அவதரிக்கிறார்.

 

 தத்துவ விளக்கம்:

 

-நாரதரின் சாபம் என்பது மனித வாழ்வின் சோதனைகளை இறைவன் தானே அனுபவிக்க வேண்டும் என்பதற்கான தத்துவ அடிப்படை.

 

அஹங்காரம், மாயை, விரகி, தர்மம், பக்தி — இவை அனைத்தும் இந்தக் கதையில் பின்னப்பட்டுள்ளன.

 

இறைவன் கூட மனிதனாக, துன்பம் அனுபவித்து, தர்மத்தை நிலைநிறுத்த வேண்டும் என்பதற்கான புராண ரீதியான விளக்கம்.

 

“बंचेहु मोहि जवनि धरि देहा। सोड़ तनु धरहु

श्राप मम् एहा॥ कापि आकृति तुम्ह कीन्हि हमारी। कारिहहिं कीस सहाय तुम्हारी॥ म्र अपकार कौनह तुम्ह

भारी। नारि बिरह तुम्ह होब दुखारी॥”


 

தொடரும்

 


ஸ்ரீ இராம ஜெயம் 

--------

ஒரு பகல் உலகு எலாம் உதரத்துள் பொதிந்து

அருமறைக்கு உணர்வு அரும் அவனை,

அஞ்சனக் கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியை

திரு உறப் பயந்தனள் திறம் கொள் கோசலை"


 

==========



பிரளய காலத்தில் எல்லா உலகங்களையும் தன் வயிற்றில் அடக்கி, வேதங்களுக்கும் எட்டாத பரம்பொருளாக விளங்கும் இராமனை, கரிய மேகத்தின் எழில் காட்டும் சோதியாகக் கோசலை பெற்றெடுத்தாள்.




Thursday, March 26, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் 57


நேற்றைய தொடர்ச்சி....


பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டாரன்.. உடனே இராமனுடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினான்

- "रसग्रहो जनः" – உண்மையான ரஸம் (ஆனந்தம்) பெற்றவன், மாயை, சம்சாரம், வேறு தேவைகள் அனைத்தையும் விட்டு விடுகிறான்.- இது பக்தி யோகத்தின் உச்ச நிலை –அனுபவம், நினைவு, மற்றும் அழிவில்லா ஈர்ப்பு.

முகுந்தன் திருவடி நினைத்தவுடன்,

மாயையின் வலை கிழிந்ததடி!

சஞ்சாரம் எனும் சுழற்சி நின்றது,

சதாசிவம் போல ஆனந்தமடி!

----

ஒருமுறை முகுந்தனைச் சேவித்தால்,

மீண்டும் பிறவிக்கு இடமில்லை!

திருவடியில் விழும் என் மனம்,

திரும்பிப் போகும் வழியில்லை!

--------

अतिसय प्रबल देव तव माया।

छूटइ राम करहु जौं दाया।।

பகவானை அடையாளம் கண்டு கொண்டான் ஹனுமன்? என்று சொல்கிறார் துளசிதாசர் எப்படி கண்டு கொண்டான்? இரண்டுவிதமாக ஒன்று அசரீர் குரல்.

कस्यप अदिति महातप कीन्हा। तिन्ह कहुँ मैं पूरब बर दीन्हा॥

ते दसरथ कौसल्या रूपा। कोसलपुरीं प्रगट नर भूपा॥2

இராவணனின் கொடுமையால் தேவர்களும் பூமாதேவியும் மகாவிஷ்ணுவிடம் முறையிட அவர் “கவலையை விடுங்கள். முனிவர் காஷ்யபரும் அவரது மனைவியும் நான் அவர்கட்கு மகனாக பிறக்கவேண்டும் என்று தவம் செய்துள்ளனர். அவர்கள் தசரதராகவும் கோசலையாகவும் பிறந்து மனிதர்களாக கோசல நாட்டில் உள்ளனர். அவர்கள் மகனாக நான் அவதாரம் எடுப்பேன்” என்று சொன்னார். தற்பொழுது ஹனுமனிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது ‘நான் கோசலை அரசன் தசரதனின் மகன்’ என்று சொன்னார். இரண்டையும் இணைத்து வந்திருப்பவன் பகவான் மகாவிஷ்ணு என்று புரிந்து கொண்டான் ஹனுமன் என்று சொல்கிறார் துளசிதாசர். இது போக நாரதரும் இராமனுக்கு மனிதனாகப் பிறக்கவேண்டும் என்று ஒரு சாபம் கொடுக்கிறார் அது வேண்டுமென்றே கொடுக்கப்பட்ட சாபம் அல்ல. அதனால் பூமிக்கு நன்மையே விளைந்தது..

தொடரும்




Wednesday, March 25, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 56

 

நேற்றைய தொடர்ச்சி....

 

பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டாரன்.. உடனே  அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு  சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினான்.

 

பாகவதத்தில் சொல்லியபடி

  

न वै जनो जातु कथञ्चनाव्रजेत्

मुकुन्दसेव्यन्यवदङ्ग संसृतिम् ।

स्मरन्मुकुन्दाङ्‌घ्र्युरपगूहनं पुनः

विहातुमिच्छेन्न रसग्रहो जनः ॥ १९ ॥


======

 

முகுந்தனை (விஷ்ணுவை) ஒருமுறை சேவித்தவன்,

அவனைத் தவிர்த்து வேறு வழியில் சஞ்சரிக்க விரும்பமாட்டான்.

அவன் திருவடிகளை நினைத்தவுடன்,

அவனிடமிருந்து விலக விரும்பாதான்,

ஏனெனில் அவன் உண்மையான ரஸத்தை (பரம ஆனந்தத்தை) அனுபவித்துவிட்டான்.

 

இந்த ஸ்லோகம் பக்தியின் உச்ச நிலையை சித்தரிக்கிறது:- முகுந்தன் என்பது விஷ்ணுவின் முக்தி தரும் வடிவம்.- ஒருவர் முகுந்தனை உண்மையாக சேவித்துவிட்டால்,அவர் சம்சாரம் (பிறவிப் பந்தம்) போன்ற மாயை வழிகளை மீண்டும் நாடமாட்டார்.- முகுந்தனின் திருவடிகளை நினைத்தவுடன்,அந்த பரம ஆனந்தம் அவரை மீண்டும் வேறு எதற்கும் செல்ல முடியாத நிலைக்கு கொண்டு செல்லும்.- இது ரஸானுபவம் – பக்தியின் அமிர்தம்.

 

முகுந்தனைக் கைவிடும் மனம் எதுவோ?

முகுந்தனின் பாதம் நினைவு மறவேனோ?

அகிலம் தந்தாலும் அமுதினை விட்டிடேன்,

அருளினைச் சுவைத்தவர் விலகார் இனிதே


தொடரும்  

Tuesday, March 24, 2026

 



 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 55

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

ஹனுமனிடம் இராமன் அவரைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு கேட்கிறான்.  துளசிதாசர் இங்கு “निज कथा” என்ற பதத்தையும் கொடுத்துள்ளார். இதன் பொருள் உனது தந்தை பெயர், உனது பெயர், என்ன குலம், உனது கல்வி, குருவின் பெயர், இந்த காடுகளில் நீ ஏன் சுற்றுகிறாய், யாரால் அனுப்பப்பட்டு நீ இங்கு வந்தாய் போன்ற முழு விவரங்களையும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறான். இராமன் ஏன் அப்படிக் கேட்கிறான்? இராமனுக்குத் தெரியாததா? ஹனுமன் வானர வடிவத்தை விட்டு இளம் பிராமணனாக வந்துள்ளான். உருவத்தை மறைத்தது போல் விவரங்களையும் மறைக்காமல் உள்ளது உள்ளபடி சொல்ல வேண்டும் என்ற தொனியில் சொல்கிறான்.

 

இராமன் தனது விவரத்தை ‘சரித’ என்று சொல்லுகிறான் ஆனால் ஹனுமனின் விவரங்களை ‘கதா; என்று சொல்லுகிறான். இதன் உட்பொருள்  “எங்களுக்கு ஒரு பிரச்னை நிகழ்ந்துள்ளது அதனால் நாங்கள்  கோரமான வனத்தில் சுற்றுகிறோம். உனக்கு அப்படி என்ன பிரச்னை வந்துள்ளது? நீ ஏன் இந்த அடர்ந்த வனத்தில் சுற்றுகிறாய்” என்று தெரிந்து கொள்வதற்காக..

 

அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன்

 

प्रभु पहिचानि परेउ गहि चरना। सो सुख उमा जाइ नहिं बरना॥

पुलकित तन मुख आव न बचना। देखत रुचिर बेष कै रचना॥3

  

பகவானை அடையாளம் கண்டுகொண்ட ஹனுமன் “இவர் என் பிரபு” என்பதைத் தெரிந்து கொண்டாரன்.. உடனே  அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு  சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினான். பக்தரான ஆஞ்சநேயர் தன்னை ஆளும் தலைவனைக் கண்டு கொண்ட அந்தக் காட்சி பார்வதிக்குக் கதை சொல்லிவந்த சிவபெருமான் புளகாங்கிதம் அடைந்து பார்வதியிடம் சொல்கிறார் “பார்வதி! அந்த சுகத்தை வர்ணிக்க முடியாது.. உடல் புளகாங்கிதம் அடைய வாயிலிருந்து வார்த்தைகள் வெளிவர இயலாத நிலை. அவன் பகவானின் அழகிய வேடத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்”

 

தத்துவப் பார்வை (J. Krishnamurti பாணியில்):

 

அடையாளம் காணுதல் (Recognition): அனுமன் அதுவரை ராமரை ஒரு 'அந்நியராகவோ' அல்லது ஒரு 'ராஜகுமாரனாகவோ' பார்த்துக் கொண்டிருந்தார் (Fragmented observation). ஆனால் 'பிரபு பஹிசாநி' - அதாவது அடையாளம் கண்ட அந்த நொடியில், பிரிவினை மறைந்துவிடுகிறது.

 

மௌனம் (The Silence): ஜே.கே சொல்வது போல, "Truth is a pathless land." சத்தியத்தை உணரும்போது அங்கே வார்த்தைகளுக்கு இடமில்லை (முக ஆவ ந வசநா). மனம் எப்போது முழுமையாகக் கவனிக்கிறதோ, அப்போது மொழி (Language) நின்றுவிடுகிறது. அனுமனின் அந்த மௌனம், ஒரு பக்தனின் மௌனம் மட்டுமல்ல; அது ஒரு ஞானியின் 'சிந்தனையற்ற நிலை' (State of no-thought).

 

உடல் சிலிர்த்தல்: மனம் அடங்கும்போது உடல் எதிர்வினை ஆற்றுகிறது. அங்கே "நான் ராமரைப் பார்க்கிறேன்" என்ற எண்ணம் (Ego) அழிந்து, "பார்த்தல்" மட்டுமே எஞ்சுகிறது. அதுவே அந்த வர்ணிக்க முடியாத 'ஸுகம்'.

 

கம்பராமாயணத்தோடு ஒரு ஒப்பீடு:

 

கம்பரும் இதே காட்சியை மிக அழகாகப் பாடுவார். அனுமன் ராமரைச் சந்தித்த உடனே, தன் கைகளைத் தலைக்கு மேல் கூப்பிக்கொண்டு நின்றாராம்.

 

"அஞ்சன வண்ணன் தன்னை, அஞ்சலி செய்து நின்றான்"

 

ஹனுமன் இராமனைப் பார்த்த அந்தத் தருணத்தை, கம்பர் ஒரு 'தவப்பயன்' என்கிறார். துளசிதாசர் 'வார்த்தைகளால் சொல்ல முடியாத சுகம்' என்று சொல்வதை, கம்பர் அனுமனின் 'அடக்கம்' மற்றும் 'பக்தி' வழியாகக் காட்டுகிறார்.

 

தொடரும்

Monday, March 23, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 54

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

இராமன் ஹனுமனிடம் அவனைப் பற்றிய விவரங்களைச் சொல்லுமாறு கேட்கிறான்.


कहहु बिप्र निज कथा बुझाई  இதன் மறைமுகமாகன பொருள் என்னவென்றால் உனது பேச்சிலும் உச்சரிப்பிலும்  வேதங்களின் சாயல் தெரிகிறது.. இதைத்தான் வால்மீகியும் கூறி உள்ளார். 


=========

न अन् ऋग्वेद विनीतस्य न अ\-\-यजुर्वेद धारिणः |

न अ\-\-साम वेद विदुषः शक्यम् एवम् विभाषितुम् || ४-३-२८

नूनम् व्यकरणम् कृत्स्नम् अनेन बहुधा श्रुतम् |

बहु व्याहरता अनेन न किंचित् अप शब्दितम् || ४-३-२९

=========

 

வால்மீகி ராமாயணத்தின்படி இராமன் இலக்ஷ்மணனிடம் ஹனுமன் இதுவரை பேசியதை வைத்து அனைத்து வேதங்கள் மற்றும் இலக்கணங்கள் தெரியாதவனால் இவ்வாறு பேசமுடியாது. என்று கூறுகிறான். அதைத்தான் சுருக்கமாக துளசிதாசர் கூறிவிட்டார்,.

 

வாக்கின் தூய்மை: ஒருவன் என்ன பேசுகிறான் என்பதை விட, எப்படிப் பேசுகிறான் என்பது அவனது கல்வியைக் காட்டும். ஹனுமன் ராகத்தோடு, சரியான மாத்திரை அளவில், தெளிவான உச்சரிப்புடன் பேசியதை இராமன் ரசிக்கிறான்.

 

சொல்லின் செல்வன்: இதனால்தான் ஹனுமனுக்கு "சொல்லின் செல்வன்" என்ற பெயர் வந்தது. கம்பராமாயணத்திலும் கம்பர் இதை "யாரோ இந்த அனுமன்? இவன் பேச்சில் வேதம் ஒலிக்கிறதே!" என்று இராமன் வியப்பதாகப் பாடியிருப்பார்.

 

வேதமும் இலக்கணமும்: வேதங்களைக் கற்றாலும், இலக்கணம் தெரியாவிட்டால் சொற்களைச் சரியாகக் கையாள முடியாது. ஹனுமனிடம் இரண்டும் சம அளவில் இருந்ததை வால்மீகி இங்கே பதிவு செய்கிறார்.

 

இந்த ஸ்லோகத்தை வேறொரு கோணத்தில் பார்க்கலாம்:

 

கவனிப்பு (Observation): இராமன் இங்கே ஒரு சிறந்த 'கவனிப்பாளராக' (Observer) இருக்கிறார். ஹனுமன் பேசும்போது, இராமன் அவரது சொற்களை மட்டும் கேட்கவில்லை; அந்தச் சொற்களுக்குப் பின்னால் இருக்கும் 'ஒழுக்கத்தையும்' (Discipline), 'அமைதியையும்' (Silence) கவனிக்கிறார்.

 

Fragmentation (பிரிவினை): சாதாரணமாக நாம் பேசும்போது நம் மனம் எதையாவது மறைக்க முயலும் அல்லது மிகைப்படுத்த முயலும். ஆனால் ஹனுமனின் பேச்சில் 'பிரிவினை' (Fragmentation) இல்லை. அவர் என்னவாக இருக்கிறாரோ (Observed), அதுவே அவரது சொல்லாகவும் (Observer) வெளிப்படுகிறது.

 

Communication: "உண்மையான தொடர்பு (Communication) என்பது சொற்களுக்கு அப்பாற்பட்டது." ஹனுமனின் வார்த்தைகளில் பிழையில்லை (அபசப்தம் இல்லை) என்பதற்குக் காரணம், அவரது 'மனதில்' குழப்பம் இல்லை என்பதே. தெளிவான மனம் தெளிவான சொற்களைத் தருகிறது.

 

கம்பர் இந்தப் பகுதியை இன்னும் அழகாகத் தமிழில் வடித்திருப்பார்:

 

"இல்லாத உலகத்து எங்கும் ஈங்கு இவன் இசைகள் கூறக்

கல்லாத கலையும் இல்லை; கற்றவை முடிவும் இல்லை!"

 

அதாவது, இந்த உலகில் ஹனுமன் கற்காத கலையே இல்லை; அவர் கற்ற கலைகளுக்கு முடிவே இல்லை என்று இராமன் வியக்கிறான்.



தொடரும்..................

Sunday, March 22, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் 53


நேற்றைய தொடர்ச்சி ..........

சீதையை இராவணன் அபகரித்துச் சென்றவுடன் இராமன் சீதையைத் தேடி வனத்தில் அலைகிறான். மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நதிகள் ஆகியவற்றிடம் சீதையைப் பற்றி விசாரிக்கிறான்.

==========

कुंद कली दाड़िम दामिनी। कमल सरद ससि अहिभामिनी॥

बरुन पास मनोज धनु हंसा। गज केहरि निज सुनत प्रसंसा

===============


இயற்கை எல்லாம் இன்று மகிழ்கிறது —

அவள் இல்லாத உலகம்,

அழகை மீண்டும் புகழ்கிறது!

ஆனால் என் இதயம் —

அவள் இல்லாமல்,

அழகின் அர்த்தம் இழந்துவிட்டது!

=========

“குந்த மலரின் மொட்டு, மாதுளை பழம், மின்னல், தாமரை, சரத்கால சந்திரன், பாம்பு, வருணனின் பாசம், மன்மதனின் வில், அன்னப்பறவை, யானை, சிங்கம் — இவை எல்லாம் இன்று தங்கள் அழகைப் பற்றி புகழப்படுகிறதைக் கேட்டு மகிழ்கின்றன."

இந்தச் ஸ்லோகம், அவளின் அழகுடன் ஒப்பிடப்படும் இயற்கை உருவங்கள், இப்போது சீதையைக் காணாமல், தங்கள் அழகைப் பற்றிப் புகழப்படுவதால் மகிழ்கிறார்கள் என்கிற விலாபக் கவிதை.

இயற்கையின் அழகு கூட சீதையின் அழகின் முன்னிலையில் மங்கியதாக இருந்தது. இப்போது அவள் இல்லாததால், அவை தங்கள் பெருமையை மீண்டும் கேட்டு மகிழ்கின்றன.

இராமன் வைதேஹியைத் தேடி இங்கு வந்தோம்.என்று சொல்கிறான். இதை ஏன் ஹனுமனிடம் சொல்லவேண்டும்? ஹனுமன் அந்தண வேடத்தில் உள்ளான். திருமணத்தில் கணவன் மனைவியிடம் உன்னை வாழ்நாள் முழுவதும் கண்ணின் மணி போல பார்த்துக் கொள்வேன் என்று உறுதி அளிக்கிறான். அந்தணன் என்ற முறையில் ஹனுமன் இதை அறிந்திருப்பான். அதனால் எனது மனைவியான வைதேஹியைத் தேடி இங்கு வந்தேன் என்று சொல்கிறான்..

இராமன் எங்கள் சரித்திரத்தை நான் சொல்லிவிட்டேன். இனி உனது கதையைச் சொல் என்கிறான். आपन चरित कहा हम गाई। बिप्र कहहु निज कथा“! உரையாசிரியர்கள் இதுவரை உள்ள “आपन चारित! இராமாயணத்தையே இராமன் சொல்லிவிட்டான் என்கிறார்கள் . எப்படி? 'कोसलेस दसरथ के जाए” இது பால காண்டம் हम पितु बचन मानि बन आए य இது அயோத்யா காண்டம் “इहाँ हरी निसिचर बेदेही இது ஆரண்ய காண்டம் “बिप्र फिरहिं हम खोजत तेही இது கிஷ்கிந்தாக் காண்டம் .இதைச் சொல்லிவிட்டு ஹனுமனிடம் அவனைப் பற்றிய விவரத்தைக் கேட்கிறான்.,


தொடரும்.............

Saturday, March 21, 2026

 


காலை வணக்கம்

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் 52



நேற்றைய தொடர்ச்சி.................

ஹனுமனிடம் இராமன் தங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போது உடன் அழைத்து வந்த சீதை சுகுமாரி (மென்மையானவள்) அவளை அரக்கன் கடத்திச் சென்று விட்டான். அவளைத் தேடிய இந்த வனத்திற்கு வந்தோம் என்று சொல்கிறான்


இதையே துளசிதாசர் தன்னுடைய கவிதாவளி என்ற நூலில் கூறியுள்ளார்.

पुर ते निकसी रघुबीर-बधू, धरि धीर दये मर्ग में डग है ।

झलक भरि भाल कनी जल की, पुट सूखि गये मधुराधर वै ॥

फिरि बूझति हैं-”चलनो अब केतिक, पर्णकुटी करिहौ कित है?”

तिय की लखि आतुरता पिय की अँखिया अति चारु चलीं जल च्वै॥

இராமன் சீதை இலக்ஷ்மணன் மூவரும் வனவாசத்திற்காக அயோத்தியிலிருந்து இரதத்தில் கிளம்பி ஓரளவு தூரம் சென்ற பிறகு ஸ்ருங்கிபேரபுறம் நோக்கி நடக்கிறார்கள். நல்ல வெயில். இரண்டு அடிகள் எடுத்து வைத்ததுமே சீதையின் நெற்றியில் வியர்வைத் துளிகள். தண்ணீர் இல்லாமல் உதடுகள் வறண்டன. இராமனை நோக்கி “ஐயனே! இன்னும் எவ்வளவு தூரம் நாம் நடக்கவேண்டும். எவ்வளவு தூரத்தில் பர்ணசாலை அமைப்பீர்கள்” என்று கேட்கிறாள். இராமனுக்கு அவளது வேதனை புரிந்தது. அவள் களைத்துவிட்டாள் ஓய்வெடுக்க விரும்புகிறாள் என்று புரிந்து கொண்டான். அரணமனையில் இராணியாக உள்லசாமாக இருந்தவள் இன்று இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறாளே என்பதை நினைத்து இராமனின் கண்களில் கண்ணீர் வந்ததாம்.

ஹனுமனின் கேள்விகளுக்கு மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டான் இராமன். இங்கு ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். வால்மீகி இராமாயணத்தில் இராமன் தான் பதிலுரைக்கவில்லை. மாறாக இலக்ஷ்மணன்தான் பதிலளித்தான்.. காரணம் இராமனுக்கு ஹனுமனைத் தெரியாது. அவரைப் பொறுத்தவரை அந்நியன். ஒரு அந்நியனிடம் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூற விரும்பவில்லை. மேலும் அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர், எந்த அரசரும் தனக்குச் சமமாக உள்ளவர்களிடம்தான் பேசுவார்கள். அதனால் அந்தப் பொறுப்பை இலக்ஷ்மணனிடம் விட்டுவிட்டார். இலக்ஷ்மணனும் துளசிதாசர் சொன்ன விவரங்களையே வால்மீகி இராமயணத்தில் கூறி உள்ளார்.

ஹனுமன் கேட்டான் “இந்தக் கடினமான கல்லும் முள்ளும் நிறைந்த பாதையில் மிருதுவான பாதங்கள் கொண்ட தாங்கள் ஏன் வந்தீர்கள்? “काठिन भूमि कोमल पद गामी। कवन" என்று கேட்டதற்கு தந்தையின் கட்டளைப்படி 'हम पितु बचन मानि बन आए! வந்தோம் என்று சுருக்கமாகச் சொல்கிறார்.

இராமன் ஹனுமனிடம் எங்களுடன் எனது அழகிய மனைவியும் இருந்தாள். संग नारि सुकुमारि सुहाई.எப்படிப்பட்ட அழகு? ஏற்கனவே பல இடங்களில் சீதையின் அழகைத் துளசி தாசர் சொல்லியுள்ளார். ஆனால் இந்த இடம் ஒரு சிறப்பு வாய்ந்த இடம். துளசிதாசரின் புலமைக்கு ஒரு எடுத்தக்காட்டு. அதாவது சீதையை இராவணன் அபகரித்துச் சென்றவுடன் இராமன் சீதையைத் தேடி வனத்தில் அலைகிறான். மரங்கள், செடிகள், கொடிகள், மலைகள், நதிகள் ஆகியவற்றிடம் சீதையைப் பற்றி விசாரிக்கிறான்.

தொடரும்..................