இலங்கையில்
ஏழு நாட்கள்
=======================
நான்காம் நாள் பதிவு எண் மூன்று
நாங்கள் தங்கி இருந்த விடுதி பொலனருவா என்ற இடத்தில் இருந்தது. இந்த நகரம் சரித்திரப் புகழ் வாய்ந்தது.. பொலனறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு புராதன நகரமாகும். கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாக இது திகழ்ந்திருக்கின்றது. இதற்கு முன் அனுராதபுரம் தலைநகராக இருந்துள்ளது. அனுராதபுரத்தை சோழர்கள் கைப்பற்றிய பின்னர், இந்நகரை இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பொலன்னறுவை சோழர்களால் ஜனநாதபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது. சோழர்கள் 52 ஆண்டுகள் இங்கு ஆட்சி செய்தார்கள். சோழர்களை தோற்கடித்த முதலாம் விஜயபாகு தான் பொலன்னறுவையின் முதலாவது சிங்கள மன்னனாவான். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலங்களிலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது..13ம் நூற்றாண்டில் வெளிநாட்டு போர் உள்நாட்டு போரின் காரணமாக இந்த நகரம் வீழ்ச்சி அடைந்தது.
இன்று நிலைத்து நிற்பவை:
ஒரே பாறையில் செதுக்கப்பட்ட நான்கு பெரிய புத்தர் சிலைகள்.
2,500 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நீர்த்தேக்கம்.
பராக்கிரமபாகுவின் அரண்மனை இடிபாடுகள்.
பெரிய ஸ்தூபி.
சோழர் காலத்தில் கட்டப்பட்ட சிவாலயங்கள்.
இராஜேந்திர சோழன் தனது தாயார் வானாதேவிக்காக கட்டப்பட்ட சிவலாயத்தில் இன்றும் பூஜை நடைபெறுகிறது.UNESCO அங்கீகாரம் பெற்ற இடம்.. பண்டைய நகரமைப்பு, பாசனக் கலை, மதக் கட்டிடங்கள், சோழர்–சிங்களர் கலாச்சாரச் சங்கமமாக விளங்குகிறது.
அடுத்து நாம் கண்ட இடம் காந்தலாய் நீர்த் தேக்கம்
காந்தலாய் ஏரி (Kantale Tank அல்லது Kantale Wewa) இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு பழங்காலச் செயற்கை நீர்த்தேக்கம். இது இலங்கையின் மிகப் பழமையான மற்றும் முக்கியமான நீர்ப்பாசன அமைப்புகளில் ஒன்று. இதை “கந்தளை அணை” என்றும் அழைப்பார்கள். இது விவசாயம், சுற்றுலா, மற்றும் வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. கிபி 608- இல் மன்னன் அக்போடி II (King Aggabodhi II) கட்டியது. - பராக்கிரமபாகு மகான் (1153–1186 CE) காலத்தில் விரிவாக்கம் மற்றும் மேம்பாடு செய்யப்பட்டது
இது பண்டைய இலங்கை நீர்ப்பாசன தொழில்நுட்பத்தின் உச்சம். பண்டைய காலத்தில் கங்கதல வாபி (Gangathala Vapi) என்று அழைக்கப்பட்டது.
நீளம்: 4,267 மீட்டர்கள் (14,000 அடி) – இலங்கையின் நீண்ட அணைகளில் ஒன்று.
உயரம்: 15 மீட்டர்கள் (50 அடி).
பரப்பு: 23 சதுர கி.மீ (5,683 ஏக்கர்கள்).
நீர் திறன்: 135 மில்லியன் கன மீட்டர்கள் (சில ஆதாரங்கள் 115-136 Mn cu m).
பிடிப்பு பகுதி: 2 6 சதுர கி.மீ – மழைநீர் சேமிப்பு.
1986ல் அணை உடைந்து : 127 பேர் இறந்தனர் , பல வீடுகள் அழிந்தன . பின்னர் பழுதுபார்க்கப்பட்டது. இந்த ஏரி இலங்கையின் பண்டைய பொறியியல் அற்புதம்
பயணம் தொடரும்
No comments:
Post a Comment