Saturday, February 28, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 32

 


நேற்றைய தொடர்ச்சி

 

பஞ்சமுக அனுமனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

  

பில்லி சூனியம், தீய சக்திகள் அச்சம் அல்லது கெட்ட கனவுகள், கடுமையான உடல்நலக் கவலைகள், மன உளைச்சல், நிதி உறுதியற்ற தன்மை, வாழ்க்கையில் நம்பிக்கை இழத்தல் போன்ற அனைத்து கவலைகளில் இருந்தும் பஞ்சமுக அனுமன் காக்கிறார் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இதன் காரணமாகவே அவரது சிலைகள் அல்லது படங்களை அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் வைத்து வழிபடுகின்றனர்.

 

பஞ்சமுக ஹனுமான் மந்திரம்:

 

 

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய

வாயு புத்ராய மகா பலாய

சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய

மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய

கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய

 

-----------

 

சப்த சமுத்ர நிராலங்கிதாய,

பிங்கள நயனாய அமித விக்ரமாய

சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய

சஞ்சீவினி சமாநயன

சமார்த்தாய அங்கதலட்சுமண

கபி சைன்ய ப்ராண நிர்வாககாய

 

-------------

 

தசகண்ட வித்வம்ஸனாய

இராமேஷ்டாய பல்குணசகாய

சீதா சகித இராமச்சந்திர

ப்ராசதகாயட் ப்ரயோகாங்க

பஞ்சமுக ஹனுமதே நம!

 

---

இந்த மந்திரத்தை தினமும் 8 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. இப்படி தொடர்ந்து வழிபட்டு வந்தால் ஜாதகத்தில் உள்ள கிரக தோஷங்கள் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கி விடும். துன்பங்கள், நோய்கள் விலக நீண்ட ஆயுள் ஏற்படும்.

 

வாருங்கள் மீண்டும் துளசிதாசரிடம் செல்வோம்.

 

 

தொடரும்

Friday, February 27, 2026

 


நிறம் 


நொடிக்கு

நொடி

நிறத்தை

மாற்றிக்

கொள்ளும்

உலகம்.

ஆமாம்.............

ஹோலி

எப்போது?


======

முதுமை


முதுமை

எல்லா

கேள்விகளுக்கும்

பதில்

வைத்திருக்கும்

பருவம்

ஆனால்

கேள்விகள்

கேட்போர்

யாருமில்லை


ஆர். சேஷாத்ரிநாதன் 

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 31

 

நேற்றைய தொடர்ச்சி

  

பஞ்சமுக ஹனுமனைப் பற்றி மற்றொரு கதையும் சொல்லப்படுகிறது.

 

இராவணனை வதம் செய்த செய்தியை அறிந்த சதகண்டன் என்னும் அரக்கன் இராமனோடு போர் புரிய வந்தான். இராவணவதம் முடித்த இராமன் களைப்பு தீர ஓய்வெடுக்கட்டும் என எண்ணிய ஆஞ்சநேயர், தனக்கே உரித்தான வானரம் மற்றும் சிங்கம், கருடன், வராகம்(பன்றி), குதிரை ஆகிய ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக மாறினார். சதகண்டன் எடுத்த மாய வடிவங்களுக்கு ஏற்ப தானும் உருமாறி அழித்தார்.

 

பஞ்சமுகத்தின் சிறப்பு

 

இந்த ஐந்து முகங்களும், கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு மற்றும் மேல் திசைகளை நோக்கியுள்ளன. ஒவ்வொரு முகமும் ஒரு குறிப்பிட்ட ஆற்றலையும், பலனையும் குறிப்பதாக கூறப்படுகிறது. 'பஞ்சமுக ஆஞ்சநேயர் தத்துவம்' என ஆன்மிகம் சிறப்பிக்கும் இந்த ஐந்து முகங்கள் நமக்கு சொல்லும் செய்தி என்ன? இங்கு காண்போம்.

 

1. கிழக்கு முகம் (அனுமன் முகம்): ஆஞ்சநேயரின் உண்மையான சுயரூபத்தைக் குறிக்கும் இந்த முகம் கிழக்கு, புதிய தொடக்கங்கள் மற்றும் ஞானத்துடன் தொடர்புடைய கிழக்கு நோக்கி உள்ளது. இது பக்தி, தீர்க்கமான அறிவு, புத்திக்கூர்மை, மற்றும் செயலில் வலிமை ஆகியவற்றைக் குறிக்கிறது.

 

2. தெற்கு முகம் (நரசிம்ம முகம்): ஸ்ரீநரசிம்மரின் அம்சத்துடன் மரணம் மற்றும் மாற்றத்தைத் தரும் தெற்கு திசை நோக்கிய இந்த முகம் பயம், எதிர்மறை ஆற்றல் மற்றும் தீய சக்திகளை அழிக்கும் ஆற்றலுடன் அச்சத்தில் இருந்து நம்மை விடுவிக்கிறது.

 

3. வடக்கு முகம் (வராக முகம்): வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையைக் குறிக்கும் வடக்கு முகம் வராகரின் அம்சத்தைக் குறிக்கிறது. விஷ்ணுவின் பன்றி அவதாரமான இது பூமிக்குரிய வலிமை, சாபங்கள் மற்றும் எதிர்மறையிலிருந்து ஒருவரை விடுவித்தல், செல்வ செழிப்பு, அமைதி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் குறிக்கிறது.

 

4. மேற்கு முகம் (கருட முகம்): தீமைகளிலிருந்து பாதுகாத்தல் மற்றும் நீக்குதல் ஆகியவற்றைக் குறிக்கும் மேற்கு முகம் கருடனின் அம்சமாக சரும நோய், விஷ நோய், ஊழ்வினை நோய்களை போக்கி அருள்தருகிறது. மேலும் விஷங்கள், பாம்புக்கடிகள் மற்றும் சூனியம் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தருகிறது.

 

5. மேல் முகம் (ஹயக்ரீவ முகம்): ஆன்மீக விழிப்புணர்வைக் குறிக்கும் விதமாக மேல் நோக்கி காணப்படும் இந்த முகம் ஹயக்ரீவரின் அம்சத்தைக் குறிக்கிறது. இது அறிவு, தெளிவு, ஞானம், கல்வி மற்றும் பேச்சுத்திறன் ஆகியவற்றைக் குறிக்கிறது.

 

தொடரும்

 


Thursday, February 26, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 30

 

நேற்றைய தொடர்ச்சி


அங்கிருந்த காளிதேவி கோயிலுக்குள் நுழைந்து தேவியின் உருவத்துக்குப் பின்னால் மறைந்து கொண்டார் ஹனுமான் . மயில்ராவணனும் மஹி ராவணனும் காளிக்கு பலி கொடுப்பதற்காக ராம- லட்சுமணரை அழைத்து வந்தனர். அப்போது, ‘‘மயில்ராவணா... உனது பக்திக்கு மெச்சினேன். நீ மஹிராவணனுடன் என் பலிகளை உள்ளே அனுப்பு. நீ வர வேண்டாம்!’’ என்று காளி போலவே குரல் கொடுத்தார் அனுமன்.

  

அதன்படி ராம- லட்சுமணருடன் மஹி ராவணன் கோயிலுக்குள் நுழைந்ததும் ஆஞ்ச நேயர் விஸ்வரூபம் எடுத்து அவனை அடித்துக் கொன்றார். பிறகு, தான் கொண்டு வந்திருந்த வில், அம்புகளை ராம- லட்சுமணர்களிடம் கொடுத்து மயில்ராவணனுடன் போர் செய்யும்படி வேண்டினார்.

  

நெடுநேரமாகியும், மஹிராவணன் திரும்ப வராததால் சந்தேகம் கொண்ட மயில்ராவணன் கதவைத் திறந்து உள்ளே நுழைந்தான். ராம- லட்சுமணர்களை தன் தோள்களில் அமரச் செய்து மயில்ராவணன் மீது அம்புகளைத் தொடுக்கச் செய்தார் அனுமன். மயில்ராவணன் மாயப் போர் புரிந்தான். போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வர எண்ணிய அனுமன், ராம- லட்சுமணரைக் கீழே இறக்கி விட்டார். அவர்களிடம் போரைத் தொடருமாறு கூறி, மயில்ராவணனின் உயிர் மூலமான வண்டுகளைத் தேடிப் புறப்பட்டார் அனுமன். விபீஷணர் கூறியபடி ஏழு கடல்கள் கடந்து, ஒரு தீவை அடைந்தார். அங்கு தன்னை எதிர்த்த அரக்கர்களை அழித்து, தடாகம் ஒன்றில் தாமரைப் பூவுக்குள் இருந்த விஷம் கக்கும் வண்டுகள் அடங்கிய பெட்டியை எடுத்துக் கொண்டு திரும்பினார்.

  

‘ஐந்து வண்டுகளையும் ஒரே நேரத்தில் கொன்றால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும்!’ என்று பிரம்மனிடம் வரம் வாங்கி இருந்தான் மயில்ராவணன். அப்படி முடியாவிட்டால், கொல்ல முயல்பவரே மடிய நேரிடும்! அசரீரி மூலம் இதையறிந்த அனுமன் வானரம், நரசிம்மம், கருடன், வராஹம், குதிரை முகங்க ளோடு விசித்திர உருவெடுத்தார்.

  

இதைக் கண்ட மயில் ராவணன் நிலை தடுமாறினான். அனுமன் அந்தப் பெட்டியைத் திறந்து ஐந்து வண்டுகளையும், ஐந்து முகங்களின் வாயினால் ஒரே நேரத்தில் கடித்துத் துப்பினார். வண்டுகள் இறந்தன. மயில் ராவணன் பாதாளமே அதிரக் கீழே விழுந்து துடிதுடித்து இறந்தான்.

  

பிறகு ராம- லட்சுமணர்களை தோள்களில் தூக்கிக் கொண்ட ஆஞ்சநேயர் இலங்கையை அடைந்தார். வானர சேனைகள் மகிழ்ந்தன! பஞ்சமுக அனுமனை வழிபடுவதால், சிறப்பான பலன்கள் உண்டாகும். இவரின் ஒவ்வொரு திருமுகமும் திவ்ய பலன்களை அளிக்கவல்லது.

 

தொடரும்

Wednesday, February 25, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 


பதிவு எண் 29

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமனுக்கு கிடைத்த அஷ்ட சித்திகளையும் நவ நிதிகளையும் பார்த்தோம், இந்தப் பதிவில் பஞ்சமுக ஹனுமனைப் பார்ப்போம்.

 

ஹனுமனின் ஐந்து முகங்கள்

 

ஹனுமனின் 5 முகங்கள் சொல்லும் ரகசியம்! உங்களுக்குத் தெரியுமா?

 

முப்பெரும் தெய்வங்களில் ஒருவரான பிரம்மாவுக்கு இருந்த பெருமைகளில் ஒன்று தான் ஐந்து முகங்கள். தனக்கு ஐந்து முகங்கள் இருந்த பெருமையில் ஆணவத்தின் காரணமாக பிரம்மா தனது ஒரு முகத்தை சிவபெருமான் மூலம் பெற்ற சாபத்தினால் இழந்து நான்முகனாக வழிபடும் பெருமை இழந்த கதையும் அறிவோம்.

 

ஆனால் எந்த ஆணவமும் இல்லாமல் தெய்வங்களிலேயே பராக்கிரமிக்க அதே சமயம் பணிவுடன் விசுவாசம் மிக்க தெய்வமாக மனிதர்களின் வாழ்வியலோடு பொருந்தி எவ்வித வேறுபாடுமின்றி அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் ஒரு தெய்வமாக வழிபடப்படுபவர் தான் ஆஞ்சநேயர் எனும் ஹனுமன். இவரும் ஐந்து முகங்களுடன் பஞ்சமுக ஆஞ்சநேயராக வழிபடப்படுவது சிறப்பு. அத்துடன் இவரது தனித்துவமான உருவம் குழந்தைகளிடம் கூட கவனத்தையும் ஆர்வத்தையும் ஈர்ப்பது சிறப்பு.

 

பஞ்சமுக ஹனுமன் புராண வரலாறு:


பாதாள உலகின் வேந்தன் மயில்ராவணன். இவன், பிரம்மனைக் குறித்து தவம் செய்து அரிய வரங்கள் பெற்றவன்; மாயாஜாலங்கள் செய்வதில் நிபுணன். ராவணனின் கட்டளைக்கு இணங்க, ராம-லட்சுமணர்களை பாதாள லோகத்திலுள்ள காளிதேவிக்கு பலி கொடுப்பதாக சபதம் செய்து புறப்பட்டான்.

  

இதை விபீஷணனின் ஒற்றர்கள் மூலம் அறிந்த சுக்ரீவன், ராம- லட்சுமணரைப் பாது காக்கும்படி அனுமனிடம் கூறினார். அனுமன், ராம- லட்சுமணரை பர்ணசாலையின் உள்ளே அமர்த்தி, தன் வாலினால் பர்ணசாலையைச் சுற்றிலும் கோட்டை அமைத்து அதன்மீது அமர்ந்து காவல் புரிந்தார்.

  

ஆனால், மாயம் புரிவதில் வல்லவனான மயில்ராவணன், விபீஷணரின் உருவெடுத்து வந்து அனுமனிடம் அனுமதி பெற்று, வாலால் அமைக்கப்பட்ட கோட்டைக்குள் புகுந்தான். தனது மாய சக்தியால் ராம-லட்சுமணரைச் சிறிய பொம்மைகளாக்கி மறைத்துக் கொண்டு வெளியேறினான். பின்னர் பாதாள லோகம் வந்த மயில்ராவணன், ராம- லட்சுமணரை நிஜ உருவம் பெறச் செய்தபின் சிறை வைத்தான்.

  

சற்று நேரத்தில், ராம-லட்சுமணரைக் காணாது திகைத்தனர் வானர வீரர்கள். விபீஷணர் மயில்ராவணனின் மாய வேலையை அறிந்து எடுத்துரைத்தார். அனுமனிடம் மயில் ராவணனது இருப்பிடத்தையும் அவன் தம்பி மஹிராவணன் பற்றியும் எடுத்துச் சொன்னார் விபீஷணன். ஐந்து வண்டுகள் ஒரு பெட்டியில் இருக்கும் ரகசியத்தையும், அந்த வண்டுகளிடம் தான் மயில்ராவணனின் உயிர் இருப்பதையும் சொன்னார்.

  

பாதாள லோகம் விரைந்தார் ஆஞ்சநேயர்,

 

தொடரும்

Tuesday, February 24, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் 28


நேற்றைய தொடர்ச்சி

இதுவரை ஹனுமான் பெற்ற அஷ்ட சித்திகளைப் பார்த்தோம்.

இனி ஹனுமன் பெற்ற நவநிதிகளைப் பார்ப்போம்.

ஒன்பது நிதிகள் (நவநிதிகள்)

அனுமன் சீதாதேவியின் அருளால் குபேரனிடமிருந்து பெற்ற ஒன்பது நிதிகள் (நவநிதிகள்) செல்வத்தின் பல்வேறு வடிவங்களாகக் கருதப்படுகின்றன. அவை பத்மா, மஹாபத்மா, சங்க, மகர, கச்சப, முகுந்த, நந்த, நீல மற்றும் கர்வ நிதிகளாகும். இவை அனைத்தையும் தன் பக்தர்களுக்கு அருளும் ஆற்றல் படைத்தவராக அனுமன் போற்றப்படுகிறார்.

ஹனுமான் பெற்ற அந்த ஒன்பது நிதிகள் பின்வருமாறு:

பத்ம நிதி :

இது தாமரை மலரைக் குறிக்கும்.

நல்லொழுக்கம் மற்றும் தாராள மனப்பான்மையைக் குறிக்கிறது.

நீதியான மற்றும் தர்ம நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் செல்வத்தைக் குறிக்கிறது.

மஹாபத்ம நிதி :

இது பெரும் தாமரை மலரைப் போன்றது.

மகத்தான செல்வத்தையும் தூய்மையையும் குறிக்கிறது.

மத மற்றும் ஆன்மீக காரணங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வளங்களைக் குறிக்கிறது.

ஷங்க நிதி :

இது வெற்றியைத் தரும் சங்கைக் குறிக்கிறது

புகழ் மற்றும் அதிகாரத்தை குறிக்கிறது.

எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கும் மரபு மற்றும் சாதனைகளை பிரதிபலிக்கிறது.

முகுந்த நிதி :

ஒரு வகை நறுமணப் பொருள் அல்லது பழத்தைக் குறிக்கும்

ஆடம்பரத்தையும் அரச மிகுதியையும் பிரதிபலிக்கிறது.

வாழ்க்கையில் ஆறுதலையும் நிறைவையும் குறிக்கிறது.


நந்தா நிதி :

குடும்ப செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது.

தலைமுறை செல்வத்தின் அடித்தளத்தை அடையாளப்படுத்துகிறது.

மகர நிதி :

இது முதலையைக் குறிக்கும்

இராணுவ சக்தி மற்றும் பாதுகாப்பைக் குறிக்கிறது.

தன்னையும் மற்றவர்களையும் பாதுகாப்பதில் வலிமையைக் குறிக்கிறது.

கச்சப நிதி :

இது ஆமையைக் குறிக்கும்.

இது, நீண்ட ஆயுள், நிதானம் மற்றும் நிலையான செல்வத்தை வழங்குகிறது.

தன்னிறைவு மற்றும் வளம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தப்படும் செல்வத்தைக் குறிக்கிறது.

நீலா நிதி :

நீலக் கல்லைக் குறிக்கும்

ஞானத்தையும் புத்திசாலித்தனத்தையும் குறிக்கிறது.

தலைமுறைகளைத் தாங்கி நிற்கும் அறிவுச் செல்வத்தைக் குறிக்கிறது.

கர்வ நிதி :

ஞான உருவம் மற்றும் ரகசியத்தைக் குறிக்கும்\

சமநிலை மற்றும் மிதமான தன்மையைக் குறிக்கிறது.

நல்லிணக்கத்தையும் உள் அமைதியையும் தரும் செல்வத்தைக் குறிக்கிறது.

இந்த நிதிகள் வெறும் தங்கம் அல்லது வெள்ளி மட்டுமல்ல, மன உறுதி, அறிவு, நற்பண்புகள் போன்ற மனிதனின் உண்மையான செல்வங்களையும் குறிக்கின்றன,

அனுமன், ராம பக்தியின் மூலம் இந்த எட்டு சித்திகளையும் ஒன்பது நிதிகளையும் பெற்றவர் என்று ஹனுமான் சாலிசாவில் குறிப்பிடப்படுகிறது:


अष्ट सिद्धि नव निधि के दाता,

सीया राम के बरद पूरि जाता।

அதாவது, "ராமனின் அருளால் எட்டு சித்திகளையும் ஒன்பது நிதிகளையும் அளிக்கும் ஆற்றல் அனுமனுக்கு உண்டு."

இந்த சித்திகளும் நிதிகளும் அனுமனின் ஆன்மீக மற்றும் பௌதிக சக்திகளை வெளிப்படுத்துவதாகக் கருதப்படுகிறது.

தொடரும்




Monday, February 23, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 27

 

நேற்றைய தொடர்ச்சி

 



அஷ்டமா சித்திகளைப் பற்றிப் பார்த்தோம். இந்த சித்திகளைப் பெற்ற சிலர்”

 

இவற்றை யார் பெற்றார்கள்? (புராண உதாரணங்கள்)

 

ஹனுமான் –


 அணிமா, மஹிமா, கரிமா, லகிமா எல்லாம் (சுந்தர காண்டம்)


 சிவபெருமான் –


 எட்டும் முழுமையாக (திருவிளையாடல் புராணம்)


 திருமூலர், பட்டினத்தார், போகர் போன்ற 18 சித்தர்களும் இவற்றைப் பெற்றவர்கள்


 விஸ்வாமித்ரர் –


  ஈசத்துவம், வசித்துவம் மூலம் உலகை ஆள முயன்றார்

  

இந்த அஷ்டமா சித்திகளும் ஆஞ்சநேயரிடத்தில் சாதாரணமாக இருந்தது. இராம காவியத்தில் எங்கு பார்த்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சித்திகள் இவரிடமிருந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

 

  ========

அணிமா சித்தி – அணுவாய் மாறிடுவேன்

மஹிமா சித்தி – மலையாய் நிற்பேன்

லகிமா சித்தி – இறகாய் மிதப்பேன்

கரிமா சித்தி – கல்லாய் நிற்பேன்

 --

ப்ராப்தி சித்தி – பறந்து செல்வேன்

பிராகாம்யம் சித்தி – பொருள் தோன்றும்

ஈசத்துவம் சித்தி – எல்லாம் வசப்படும்

வசித்துவம் சித்தி – உலகம் அடங்கும்!

------- 

அணுவாய் ஆனாலும் அகிலம் காண்பேன்

மலையாய் நின்றாலும் மனம் அடங்கும்

இறகாய் மிதந்தாலும் இறைவன் நினைப்பேன்

கல்லாய் நின்றாலும் கருணை கொண்டேன்!

 --------

பறந்து சென்றாலும் பாதம் பணிவேன்

பொருள் தோன்றினாலும் பற்றை விடுவேன்

எல்லாம் வசப்பட்டாலும் என்னை விடுவேன்

உலகம் அடங்கினாலும் உள்ளே அடங்குவேன்!

 ---------

அஷ்டமா சித்தியும் ஆசை கொள்ளேன்

அவை வந்து போகும் அழியும் அழியும்

அழியா ஒரு பொருள் அருள் நாதன் மட்டும்

அவன் பாதம் பற்றி அமர்ந்து நிற்பேன்


தொடரும் 

Wednesday, February 18, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 26

 

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமனுக்கு கிடைத்த அஷ்டமா சித்திகளில் சிலவற்றை நேற்று பார்த்தோம். மீதியை இன்று பார்ப்போம்.

 

பிரகாம்யம்

 

  இன்னொரு உடலில் கூடுவிட்டு கூடுபாய்கிற வித்தை. வேறொரு உடலில் நுழைந்து வெளியே வரும் திறன்.. மனம் விரும்பியதை உடனே பெரும் சக்தி

அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்

 

ஈஸத்துவம்.

 

எல்லாவற்றையும் சொடுக்கு நேரத்தில் நிறைவேற்றிக் கொள்வது. வாயுவின் வேகத்தில் காரியமாற்றுவது. பிறரைக் கட்டுப் படுத்தும் சக்தி

 

வசித்துவம்


எது செய்தாலும் வசீகரத்துடன் செய்வது. பேச்சில், செயலில் எல்லாவற்றிலும் ஈர்ப்பை உண்டாக்கும் சித்தி. நாவுக்கரசு சுவாமிகள் சமணம் துறந்து சைவம் பேணிய நிகழ்வினைத் தொடர்ந்து, கொடிய சமணர்களும் பல்லவ மன்னனும் பல்வேறு விதங்களில் சுவாமிகளை மாய்த்து விட முனைகின்றனர். முயற்சிகளிலும் தோல்வியைத் தழுவ, மற்றொரு முயற்சியாக சுவாமிகளை மதயானையைக் கொண்டு இடறச் செய்ய முயல்கின்றனர்.

 

கொடிய மதம் கொண்டிருந்த அவ்வேழமானது வழியெங்கும் பெரும் சேதத்தை விளைவித்தவாறும், இடி முழக்கமென பெருவொலி எழுப்பியவாறும், கூற்றுவனைப் போன்று சுவாமிகளை நிறுத்தியிருக்கும் நிலப் பரப்பிற்கு விரைந்தோடி வருகின்றது. சுவாமிகள் ஆனையுரி போர்த்தருளும் முக்கண் முதல்வரின் திருவடிகளையே நினைந்தவாறு நின்றிருக்கின்றார்.

 

எவரொருவரும் அஞ்சிப் பதறியோடும் தன்மையில் அம்மத யானை வெகுண்டு எதிரில் வர, சுவாமிகள் ஒருசிறிதும் சலனமின்றி 'அஞ்சுவது யாதொன்றுமில்லை' எனும் அற்புதப் பாமாலையொன்றினை மகிழ்வுடன் பாடுகின்றார்.



  ============

சுண்ணவெண் சந்தனச் சாந்தும்; சுடர்த்திங்கள் சூளாமணியும்

வண்ண உரிவை உடையும்; வளரும் பவள நிறமும்

அண்ணல் அரண் முரணேறும்; அகலம் வளாய அரவும்

திண்ணன் கெடிலப் புனலும்; உடையார் ஓருவர் தமர்நாம்

அஞ்சுவது யாதொன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை!

===============

 

வேத முதல்வரான சிவபெருமானின் திருவடிகளையே சரணமெனப் பற்றி, மெய்யன்பையே ஒரு கொள்கையாகக் கொண்டிருந்த நாவுக்கரசு சுவாமிகளை அம்மத வேழம் வலமாய் வந்து, எத்திசையுளோரும்  கண்டு வியக்குமாறு நிலத்தில் வீழ்ந்து வணங்குகின்றது, இதையே வசித்துவம் என்று சொல்கின்றனர்.

  

 

தொடரும்


Tuesday, February 17, 2026

 



 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 25

 

நேற்றைய தொடர்ச்சி

 

ஹனுமனுக்கு கிடைத்த அஷ்டமா சித்திகளைப் பற்றி தனித்தனியாகத் தெரிந்து கொள்வோமா?

 

ஹனுமனும் அஷ்டமாசித்திகளும்


பிரம்மாவே இவரின் அருமைபுரிந்து அஷ்டமாசித்திகளையும் அருளினார். இவரிடமிருந்த அஷ்டமா சித்திகள் என்னவென்று பார்ப்போமா?. அஷ்டமாசித்திகள் என்பது எட்டு வகையான சித்திகளைக் குறிக்கும்.

  

அனிமா अणिमा

 

அணுமாதிரி மிகச் சிறியதாக மாறுவது. கிட்டத்தட்ட ஆலவிதைக்குள் ஒளிந்திருக்கும் ஆலமரம்போல ஒரு அணுவளவு உயிரையும், உடலையும் சுருக்கிக் கொள்வது. பிருங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காகச் சிறு வண்டாக உருமாறினார்

 

மகிமா,

 

இருப்பதிலேயே மிகப் பெரிய உருவமாவது. மலையின் எதிரே நின்று மலையைவிட பெரிதாக மாறுவது. வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், கிருஷ்ண பரமாத்மா அர்ஜூனனுக்கு விஸ்வ ரூப தரிசனம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்

 

கரிமா,

 

எடுத்த உருவத்தை கனத்துப்போகச் செய்வது. மலையை பெயர்க்க வேண்டுமெனில் மலையின் கனத்த சக்தியின் அளவை, தன் உடலுக்குள் ஏற்றுக்கொள்வது. அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி

 

லகிமா

 

லேசாக தன் உடலை மாற்றிக் கொள்வது. திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்

 

பிராப்தி  

 

எங்கு வேண்டுமானாலும் உடனே சென்றடையும் சக்தி திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி

 


தொடரும்

Monday, February 16, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 24

 


நேற்றைய தொடர்ச்சி

  

ஹனுமனின் பலம்

  

ஹனுமனுக்கு அபரிமிதமான மன மற்றும் உடல் சுறுசுறுப்பு, வலிமை, சக்தி மற்றும் அவரது குணம் மாசற்றதாகவும், அவரது அறிவுத்திறன் உயர்ந்த நுட்பம் கொண்டதாகவும் இருந்தது. அவர் வேதங்களைப் பற்றிய முழுமையான,   இணையற்ற அறிவைக் கொண்டிருந்தார். காரணம், அவருக்கு எல்லா வேதங்களையும் கற்பித்த சூரிய பகவானே அவருக்கு ஆசிரியர்.   அவரது பேச்சு நேர்த்தியாகவும், அறிவார்ந்ததாகவும் இருந்தது.  எட்டு சித்திகளின் (மாய சக்திகள்) மற்றும் ஒன்பது நிதிகளின் (ஆன்மீக சொத்துக்கள்) கருவூலமாகக் கருதப்பட்டார்.அவர் பிறந்ததிலிருந்தே துறவியாகவும் பிரம்மச்சாரியாகவும் இருந்தார்.

  

அன்னை சீதையின் அருளால்  இந்த சித்திகள் ஹனுமனுக்கு கிடைத்ததாகவும், ஹனுமான் அந்த சித்திகளை தனக்காகப் பயன்படுத்திக் கொள்ளாமல் இராம காரியத்திற்காகத்தன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத் திறமைகளை அடைந்தவர்கள் சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும், அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன. இவ்வாறான அட்டமா சித்திகளைச் சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர். இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது

 

 

 ============

அணுமாதி சித்திகளானவை கூறில்

அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை

இணுகாத வேகார் பரகாய மேவல்

அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே

 =============

 

இந்த எட்டு விதமான சித்திகளில் முதல் மூன்று உடலாலும், அடுத்த ஐந்து மனதாலும் பயிற்சி செய்து பெறக் கூடியதாகும். இந்த எட்டு சித்திகளும் எவர் ஒருவருக்கு கைகூடுகிறதோ அவர் தெய்வத்திற்கு இணையாக இருப்பார்கள் என திருமந்திரம் என்ற நூல் குறிப்பிடுகிறது.. பல புராணங்கள் அனுமனைக் கண்டு வியக்கின்றது. ஏனெனில், எல்லா சித்தர்களுக்கும் மகாசித்தராக விளங்கும் யோகேஸ்வரரான, அஷ்டமா சித்திகளை பெற்றவருமான, சூரியனையே குருவாகக் கொண்ட ஆஞ்சநேயரை பார்த்து வியக்கிறது.

 

இப்போது ஹனுமனுக்கு கிடைத்த சித்திகளைப் பற்றி தனித்தனியாக தெரிந்து கொள்வோமா?


தொடரும்








Sunday, February 15, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் 23

நேற்றைய தொடர்ச்சி

சிரஞ்சீவி ஹனுமன்

ஹனுமன் இராமனுக்கு மிகப் பிரியமானவன். நெருக்கமானவன். இராமன் இந்த உலகை விட்டுச் செல்லும்போது ஹனுமனும் இராமனுடன் வர விரும்பினான். ஆனால் இராமன் ஹனுமனை இந்த உலகிலே தங்கச் செய்து தனது மகிமை மங்காமல் பார்த்துக் கொள்ளும்படி கூறினான். மேலும் இராம நாமத்தை விடாமல ஜபிப்பவர்களைப் பாதுகாக்கும்படியும் கூறினான். ஆத்யாத்ம இராமயணத்தின் உத்திர காண்டம் ஒன்பதாவது சர்கத்தில் இதைப் பற்றி குறிப்பு உள்ளது.

न र्कर्ञ्चदुत्तरों वायों त्वया मत्कृ तकारणात् ।

एवों र्वभीषणों तूक्त्वा नूमन्तमथाब्रवीत् ॥ ३४॥

मारते त्वों र्चरञ्जीव ममाज्ञाों मा मृषा कृ थाः ।

जाम्बवन्तमथ प्रा र्तष्ठ त्वों िापरान्तरे । ३५॥

இராமன் விபீஷணனிடம் “விபீஷணா! உன்னை இந்தப் பூமி உள்ளளவும் இராஜ்ய பரிபாலனம் செய்யும்படி முன்பே வாக்களித்துள்ளேன். நீயும் அதற்கு உடன்பட்டிருக்கிறாய். ஆதலால் உன் நகரத்திலேயே இருந்து ஆட்சி செய் என்று சொல்லிவிட்டு அருகில் இருந்த ஹனுமனை நோக்கி “ஓ ஆஞ்சநேய! நீ என்றும் சிரஞ்சீவி என்று வரமளித்தோம். ஆகையால் நீயும் உனது விருப்பமான இடத்தில் இருக்கலாம்? என்றான்.

வால்மீகி இராமாயணம் உத்தர காண்டத்திலும் இந்தப் பகுதி 108 வது சர்கத்தில் வருகிறது.

तथेति प्रतिजग्राह रामवाक्यं विभीषणः ॥ राजा रा्तसय्ख्यानां राघवाज्ञामनुखरय्‌ ॥ २३२ ॥ तमेवुक्त्वा काकरख्यो हनूमन्तमथात्रवीत्‌ । जीविते कृतवुद्विस््वं मा अ्रतिज्ञां विरोपय ।॥ ३२३ ॥ मत्कथाः भरचरिष्यन्ति यावछोके इरीश्वर ॥ वैषद्रमख सुप्रीतो मदाक्यमदुपारुयन्‌ ॥ ३४ ॥ एषयुक्तस्तु हलमान्राववेण महात्मना ॥ वाक्यं निज्ञोपयामास परं हर्षमवाप्य च ॥ ३

இராமன் பூமியில் தனது கடமைகளை முடித்துவிட்டு எல்லோரிடமும் சொல்லிக் கொண்டு விடை பெறுகிறான். முதலில் விபீஷணனிடம் வந்து “விபீஷணா! எவ்வளவு காலம் இப் பூமியில் ஜனங்கள் வாழ்கின்றனரோ அவ்வளவு காலம் நீயும் இலங்காபுரியில் உயர்வு பெற்று வாழ்வாய். சந்திர சூரியர்கள் எவ்வளவு காலம் ப்ரகாசிக்கின்றனரோ. இப் பூமி எவ்வளவு காலம் அழியாதிருக்கின்றதோ, என்னுடைய கதை இப் பூமியில் எவ்வளவு காலம் மேன்மை பெற்று விளங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ அழியாது அரசு செலுத்தி வருக. விபீஷணா! இந்த்ராதி சகல தேவதைகளாலும் எப்பொழுதும் ஆராதிக்கப் படுகின்றவரான இக்ஷ்வாகு குலதேவதையான ஸ்ரீஜகந்நாதனை ஆராதித்து வரக்கடவது’ என்று சொல்ல, விபீஷணனும் திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கின்றேன், என ஒப்புக் கொண்டான்.

பிறகு இராமன் மாருதியைப் பார்த்து ஆஞ்சநேயா!! நீ சிரஞ்சீவி யாயிருக்க ஆசை கொண்டவன். இவ்வுலகத்தில் எனது காதை எவ்வளவு காலம் வழங்குகின்றதோ அவ்வளவு காலம் நீ இப்பூமியில் புகழுடன் வாழ்க” என்று சொல்ல, வாயுகுமாரன் உள்ளம் மகிழ்ந்து சுவாமி திருவுள்ளப்படி நடக்கக் காத்திருக்கிறேன் என்றான்.

இராமநாமம் இதழில் மலர,

இமையாத் தாசன் முன் நின்றான்;

“உனது சேவை அளப்பரியது” என்று

உலகம் கேட்க இராமன் சொன்னான்.

------

“யுகங்கள் கடந்தும் வாழ்ந்திடு நீ,

என் கீர்த்தி ஓங்கும் காலமெல்லாம்;

என் நாமம் ஒலிக்கும் இடமெல்லாம்

உன் ஆன்மா அங்கே தங்கட்டும்.”

----------

வாலின் ஜ்வாலையில் லங்கை எரித்தாய்

வானம் தாண்டி செய்தி தந்தாய்;

சஞ்சீவி மலை தாங்கி வந்து

சகோதரன் உயிர் காத்தாயே!

-------

அதனால் இன்று யுகங்கள் மாறினும்

அஞ்சனேயன் பெயர் அழியாது;

பக்தியின் சின்னம், பலத்தின் மூலன்—

பாரதம் போற்றும் சிரஞ்சீவி!


தொடரும்