Thursday, April 30, 2026

 




துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 93

 

நேற்றைய தொடர்ச்சி..

 

 

சுக்ரீவன் இராமனிடம் சீதையைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறான்.

 

சுக்ரீவன் சீதையைப் பற்றிக் கூறுதல்

 

मंत्रिन्ह सहित इहाँ एक बारा। बैठ रहेउँ मैं करत बिचारा॥

गगन पंथ देखी मैं जाता। परबस परी बहुत बिलपाता॥2

 

  “நான் ஒருமுறை இங்கு அமைச்சர்களுடன் (நளன், நீலன், ஜாம்பவான் மற்றும் ஹனுமன்) அமர்ந்து ஆலோசனை செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது ஒருவன்   ஒரு பெண்ணைக்  கவர்ந்து ஆகாய மார்க்கமாகச் சென்றதையும், அழுது கண்ணீர் வடித்தவளாய்  “புலம்பிக் கொண்டிருந்ததையும் பார்த்தோம்” என்றான் சுக்ரீவன்,

 

இதற்கு சமமான சுலோகம் ஆத்யாத்ம இராமாயணத்தில் உள்ளது.

 

एकदा मन्त्रिभिः सार्द्ध स्थितो5हं गिरिमूर्द्धनि।

विहायसा नीयमानां केनचित्प्रमदोत्तमाम्‌॥'

===================

राम राम हा राम पुकारी। हमहि देखि दीन्हेउ पट डारी॥

मागा राम तुरत तेहिं दीन्हा। पट उर लाइ सोच अति कीन्हा॥3

 

“எங்களைப் பார்த்ததும் இராமா இராமா என்று அழைத்தபடியே ஓர் ஆடையைக் கீழே போட்டார்” என்றான் சுக்ரீவன்.   இராமன் அந்த ஆடையைக் கொண்டுவரச் சொன்னான். அந்த ஆடையை மார்போடு அனைத்துக் கொண்டு மிகவும் வருந்தலானான்..

 

இங்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது. பொதுவாக பெண்கள் தங்கள் கணவன் பெயரைச் சொல்வதில்லை. ஆனால் இங்கு சீதை இராமா! இராமா! என்று அலறியதன் மூலம்  நான் இராமனின் மனைவி. எனது நிலையை எனது கணவர் இராமனிடம் தெரிவியுங்கள் என்பதற்காகப் பெயரைச் சொன்னார் என்று சொல்கின்றனர். மேலும் சீதை மிக உயரத்தில் சென்று கொண்டிருந்ததளால் மெதுவாகச் சொன்னால் கீழே நிற்கும் குரங்குகளுக்கு கேட்காது என்று எண்ணி உரத்த குரலில் கூறியதாக உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஆபத்தில் இருக்கும் சமயம் அதிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ள கணவன், மகன், குரு ஆகியோர் பெயரைச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை என்று உரையாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

 

தொடரும்..


Wednesday, April 29, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 92

 

நேற்றைய தொடர்ச்சி

 

இலக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஜானகி கிடைத்துவிடுவாள். கவலை வேண்டாம்” என ஆறுதல் கூறினான். சுக்ரீவனின் நட்பு உண்மையான நட்பு. அதனால் இராமனின் துயரத்தைக் கேட்டதும் தான் கண்ணீர் விட்டு அழுதான்.

 

जे मित्र दु: होहिं दुखारी। तिन्हहि बिलोकत पातक भारी॥

 

எவன் ஒருவன் தனது நண்பனின் துயரத்தைக் கேட்டு தான் துக்கப்பதுவதில்லையோ, அத்தகையவனைப் பார்ப்பதே பாவம் என்கிறார் துளசிதாசர்.

  

துன்பம் பகிரா துணை எனினும் தோழன் 

அன்பின் இலக்கணம் அல்ல  

துன்பம் பகிர்ந்திடா நெஞ்சினை நோக்கினால் 

பாவம் பெரிதெனப் பார்.

 

இங்கு உரையாசிரியர்கள் வேறு ஒரு கருத்தும் சொல்கிறார்கள். இராமன் சீதையின் பிரிவால் துயரப்படுவதைக் கேட்ட சுக்ரீவனுக்குத் தனது மனைவியின் நினைவு வந்திருக்கக் கூடும். தன்னைப் போலவே இராமனும் மனைவியின் பிரிவால் வருந்துகிறான் என்பதை நினைத்துக் கண்ணீர் வடித்திருப்பான் என சொல்கின்றனர்..

  

निज दुख गिरि सम रज करि जाना।

 मित्रक दुख रज मेरु समाना॥

 

அதாவது உண்மையான நண்பன்  தனது துன்பத்தைத் தூசிபோல நினைத்து நண்பனுக்கு ஏற்பட்ட துன்பத்தை இமய மலையாகக் கருதுவான்..

 

சுக்ரீவன் சீதை கண்டிப்பகக் கிடைப்பாள் मिलिहि'  என்று சொல்கிறான். காரணம் சீதை இராவணன் தன்னைக் கடத்திச் செல்லும்போது கீழே சில குரங்குகளைப் பார்த்ததும் தன்னுடைய நகைகளை அடையாளமாக விட்டுச் செல்கிறாள். அவளுக்கு நம்பிக்கை இருந்தது இராமன் கண்டிப்பாக தன்னைத் தேடி அங்கு வருவான் என்று. அதைத்தான் சுக்ரீவன் உறுதியாக சீதை கிடைத்துவிடுவாள் என்று சொல்கிறான்..

 

தொடரும்


Tuesday, April 28, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 91

 

நேற்றைய தொடர்ச்சி


நட்பு உடன்படிக்கை ஏற்பட்டப்பிறகு இலக்ஷ்மணன் சுக்ரீவனுக்கு இராமனைப் பற்றிய முழு விவரங்களையும் சொல்கிறான். காரணம் இரண்டு நண்பர்களிடையே எந்தவித ஒளிவு மறைவு இருக்கக்கூடாது என்பதற்காக.

 

ददाति प्रतिगृह्णाति गुह्यमाख्याति पृच्छति!

भुङ्क्ते भोजयते चैव षड्विधं प्रीतिलक्षणम्!!

 

நட்பின் இலக்கணம் என்ன? பர்த்ருஹரி சதகம் என்ற நூலில் சொல்லப்படுவதாவது. தேவைப்படும்போது கொடுப்பது, தேவைப்படும்போது எடுத்துக் கொள்வது, ரகசியங்களைச் சொல்வது, ரகசியங்களைக் கேட்பது, நமக்கு பிடித்த உணவைச் சாப்பிடுவது, அவர்களுக்குப் பிடித்த உணவைக் கொடுப்பது  ஆகியவைதான் நட்பின் இலக்கணங்களாகக் கருதப்படுகின்றன. 

 

தருவான் பெறுவான் தனி ரகசியம் சொல்வான் 

அருவான் கேட்பான் அன்பினால்  

உருவான் உண்பான் உணவளிப்பான் என்பான் 

நட்பின் இலக்கணம் நன்று.

 

 

அடுத்து ஹனுமான் சொன்னது கதா कथा  இலக்ஷ்மணன் சொன்னது चारित. இங்கு கதா என்பது பெண்பால். ஹனுமன் சீதை அபகரிப்பு மற்றும் சுக்ரீவன் மனைவி உருமை வாலியால் அபகரிப்பு விஷயங்களைச் சொன்னான். இலக்ஷ்மணன் சொன்னது சரிதம். சரித என்பது ஆண்பால். இலக்ஷ்மணன் இரானின் வீர வரலாறான தாடகை வதம், சுபாகு வதம்,  மாரீசன் வதம், கர தூஷண வதம், விராதன் மற்றும் கபந்தன் வதம் ஆகிய வீர வரலாற்றைச் சொன்னான் என்று உரையாசிரியர்கள் சொல்லியுள்ளனர். இந்த விவரங்கள் ஹனுமனுக்குத் தெரியவில்லை.

 

कह सुग्रीव नयन भरि बारी। मिलिहि नाथ मिथिलेसकुमारी॥1

 

இலக்ஷ்மணன் சொன்னதைக் கேட்ட சுக்ரீவனின் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஜானகி கிடைத்துவிடுவாள். கவலை வேண்டாம்” என ஆறுதல் கூறினான். சுக்ரீவனின் நட்பு உண்மையான நட்பு. அதனால் இராமனின் துயரத்தைக் கேட்டதும் தான் கண்ணீர் விட்டு அழுதான்.

  

 

தொடரும்


Monday, April 27, 2026

 



 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 90

 

நேற்றைய தொடர்ச்சி

 

இராமயணத்தில் அக்னிக்கு முக்கிய இடம் உள்ளது. தசரதன் செய்த வேள்வித் தீயிலிருந்து வெளிவந்த பாயசத்தினால் வந்தவர்கள் தான் இராமனும் அவனது தம்பியரும். துளசி இராமாயணத்தில் இராமன் சீதையை அக்னியிடம் ஒப்படைத்து விட்டு அதிலிருந்து வெளிவரும் மாயா சீதையைத்தான் இராமன் கடத்திச் சென்றான். ஹனுமான் இலங்கையைத் தீக்கிரையாகியது அக்னியின் உதவியால். கடைசியில் சீதை அக்னிப் பிரவேசம் செய்து மாயா சீதை அக்னிக்குள் பிரவேசித்து உண்மையான சீதை அக்னியிலிருந்து வெளிவருகிறாள். ஆகையால் இராமாயணத்தின் தொடக்கம், இடை மற்றும் முடிவில் அக்னியின் பங்கு உள்ளது.

 

அக்னி சிவஸ்வரூபம். ஆக இங்கு சிவனையும் சாட்சியாகக் கருதலாம்.

 

कीन्हि प्रीति कछु बीच राखा। लछिमन राम चरित्सब भाषा॥

 

இராமன் சுக்ரீவன் நட்பு

 

 

இலக்ஷ்மணன் இராமன் காட்டிற்கு வந்த செய்தியையும்  சீதை கவர்ந்து செல்லப்பட்ட விவரத்தையும் சுக்ரீவனிடம் எடுத்துக் கூறினான். ஹனுமன்/

  

ஏற்கனவே ஹனுமன் இருதரப்புக் கதைகளையும் சொல்லிவிட்டா.ன். பிறகு இலக்ஷ்மணன் இராம சரிதத்தை மீண்டும் சொல்லவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழலாம். ஹனுமன் இருவருக்கும் இடையே நட்பை உருவாக்கி மொத்தக் கதையையும் சுருக்கமாகச் சொன்னான். அதவாது தெரிந்தவரை சொன்னான்.. ஹனுமனுக்கு முழு விவரமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அதனால் சுருக்கமாகச் சொல்லிவிட்டான். இலக்ஷ்மணன் அதை முழுமையாகச் சொன்னான். இராமனின் பிறப்பு, கல்வி முறை, சீதையுடன் திருமணம், தந்தையின் கட்டளைக்கிணங்க வனவாசம், இராவணனால் சீதை அபகரிக்கப்பட்ட விவரங்கள் ஆகியவை. இதை இராமன் ஏன் சொல்லவில்லை? தனது வீரத்தையும், பிரதாபத்தையும் தனது வாயால் சொல்வதைவிட இலக்ஷ்மணன் சொல்வதே சிறப்பு என்று இராமன் முடிவு செய்திருக்கலாம். நட்பு உடன்படிக்கை எற்பட்ட பிறகே இலக்ஷ்மணன் இந்த விவரங்களைச் சொல்கிறான். காரணம் இரண்டு நண்பர்களிடையே எந்தவித ஒளிவுமறைவு இருக்கக்கூடாது என்பதற்காக.

 

 

தொடரும்


Sunday, April 26, 2026

 



 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 89

 

நேற்றைய தொடர்ச்சி

 

வால்மீகி சொல்வதாவது – ஹனுமான் இரண்டு சுள்ளிகளை எடுத்து அவற்றை ஒன்றோடொன்று உராயவைத்து நெருப்பை உண்டாக்கினான். பிறகு அதற்கு பூக்களால் பூஜை செய்து அதை இராமன் சுக்ரீவன் இருவருக்கும் இடையில் வைத்தான். பிறகு இராமனும் சுக்ரீவனும் அக்னியை வலம் வந்து நண்பர்களானார்கள். சுக்ரீவன் இராமனிடம் சொன்னான் “இனி நாம் நண்பர்கள். இருவரது சுக துக்கங்களும் ஒன்றுதான்

  

அக்னிக்கு ஏன் இந்த மகத்துவம்? பகவத் கீதை அத்யாயம் 15  சுலோகம் 14

இதைத் தெளிவாக்குகிறது.

 

अहं वैश्वानरो भूत्वा प्राणिनां देहमाश्रित: |

प्राणापानसमायुक्त: पचाम्यन्नं चतुर्विधम् || 14||

 

நான் (பரமாத்மா), வைஷ்வானரனாக (அக்னி வடிவில்) உயிரினங்களின் உடலில் குடிகொண்டு, பிராணன்அபானன் ஆகிய உயிர்வாயுக்களுடன் இணைந்து,நான்கு வகையான உணவுகளைச் செதுக்குகிறேன் (செரிமானம் செய்கிறேன்).

 

விளக்கம்:

 

அஹம் வைஷ்வானர: "நான் வைஷ்வானரன்" இது அக்னி வடிவில் பரமாத்மா.

 

-பிராணினாம் தேஹமாஶ்ரித: உயிரினங்களின் உடலில் குடிகொள்கிறேன்.

-பிராணஅபான சமாயுக்த: உயிர்வாயுக்கள் (prāṇaமேலே செல்லும், apānaகீழே செல்லும்) மூலம் செயல்படுகிறேன்.

 அன்னம் சதுர்விதம் பசாமி: நான்கு வகையான உணவுகளைச் செரிமானம் செய்கிறேன்:

 

பூதபாகம் (மெல்லும்),

பேயம் (குடிக்கும்),

லேஹ்யம் (நக்கும்),

சோஷ்யம் (உணவாக உறிஞ்சும்).

 

இது பரமாத்மா உடலுக்குள் இருப்பது, உணவின் செரிமானம் கூட தெய்வீகச் செயலாகும் என்பதை உணர்த்துகிறது.

 

தொடரும்