இலங்கையில்
ஏழு
நாட்கள்
=================
மூன்றாம்
நாள்: பதிவு எண் ஒன்று
இன்று
நாங்கள் முதலில் சென்ற இடம் கண்டியில் உள்ள ஸ்ரீ மகா பத்தினி தேவாலயா..
ஸ்ரீ
மகா பத்தினி தேவாலயம் (Sri Maha
Pattini Devalaya) இலங்கையின் கண்டி நகரில் உள்ள ஒரு பழமையான
பௌத்த-இந்து கலப்பு வழிபாட்டுத்தலம். இது கண்டி தலதா மாளிகை (பல் கோவில்) அருகே
அமைந்துள்ளது. பத்தினி தேவி) சிங்கள பௌத்தர்களால் மிகுந்த மரியாதையுடன்
வணங்கப்படும் தெய்வம் – சீதை/கண்ணகியின் உருவம் என்று இந்துக்களாலும்
வணங்கப்படுகிறது.
தமிழில்
எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். கற்பிற்
சிறந்தவளாகக் காட்டப்பட்டுள்ள இவள், எவ்வித
ஆராய்வுமின்றிப் பொய்க் குற்றச்சாட்டின் மீது கொலைத் தண்டனைக்கு உட்பட்ட தனது
கணவனின் குற்றமற்ற தன்மையைப் பாண்டிய அரசன் நெடுஞ்செழியனிடம் வாதித்து நிரூபித்தாள்.
தன் பிழை கண்டு வேதனையடைந்த பாண்டியனும், அவரது
மனைவியான கோப்பெருந்தேவியும் அவ்விடத்திலேயே உயிர் துறந்தனர். கோபம் அடங்காத
கண்ணகி, மதுரை நகரையும் தன் கற்பின் வலிமையால் எரித்ததாகச்
சிலப்பதிகாரம் கூறுகிறது.
சிலப்பதிகாரம்
எழுதப்பட்ட வேளையில், சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் கண்ணகிக்கு விழா
எடுத்தான். இவ்விழாவில் பண்டைய இலங்கை மன்னன் கஜபாகுவும் கலந்துக்கொண்டதாக வரலாறு
கூறுகிறது. அந்த
இலங்கை வேந்தன் கண்ணகிக்குத் தன் நாட்டிலும் படிமம்
அமைத்து வழிபட்டான், நாள்
தோறும் பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்தான். ஆடி மாதம் சிறப்பு வழிபாடுகளும்
திருவிழாக்களும் நடத்தினான். இன்றும் கூட சக்தியுடன், சிவன் மற்றும் விஷ்ணுவையும்
சேர்த்து வழிபடுகின்றனர்.இவன் மூலம் இலங்கையில் கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக
வணங்கும் வழக்கம் ஆரம்பித்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்கள் தங்கள் தலை நகரை
மாற்றும்போது ஒவ்வொரு தலைநகரிலும் கண்ணகிக்கு கோவில் அமைத்து வழிபட்டனர். பிள்ளைப்பேறு
மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும் தெய்வமாக இவர் கருதப்படுகிறார். குறிப்பாக
பெரியம்மை நோயிலிருந்து பாதுகாப்பவராக, சிங்கள
மொழியில் தேவியங்கே லெட் ('தெய்வீக துன்பம்') என்று
குறிப்பிடப்படுகிறது.
சின்னம்மை, அம்மை
போன்ற நோய்கள் கடவுளின் எளிய தண்டனைகள் என்று சிங்கள மக்கள் நம்புகிறார்கள். இந்த
நோய்களில் இருந்து குணப்படுத்த அவர்கள் இதுபோன்ற நிகழ்வுகளின்போது பத்தினி
தேவியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். குடும்ப உறுப்பினர் ஒருவர் இந்த நோயயால்
பாதிக்கப்படுகையில், அவர்கள் இவருக்காக தானத்தை வைத்திருகிறார்கள். இது
கிரி -அம்மா தானா (பால்-தாய் அளிக்கும் பிச்சை ) என்று அழைக்கப்படுகிறது.. ஆனால்
அங்கும் கதிர்காமம் போல கர்ப கிருஹத்தில் இங்கும் திரைதான் உள்ளது. உள்ளே என்ன
உள்ளது என்று தெரியவில்லை. திரையில் அன்னை இரண்டு கைகளிலும் சலங்கையுடன் காட்சி
அளிக்கிறாள். உருவம் வைக்காமல் திரை மட்டும் வைத்திருப்பது, பத்தினி (கண்ணகி) தேவியை அரூபமான
சக்தியாக வணங்கும் வழக்கத்தைக் காட்டுகிறது. இது அவள் அழிவில்லாத, எல்லையற்ற சக்தி என்பதை குறிக்கும்.இது
பௌத்த சிந்தனையுடன் ஒத்துப் போகிறது. ஆனால் இந்த மாற்றம் எப்போது நடந்தது என்று
மட்டும் தெரியவில்லை. பத்தினி வழிபாடு
இலங்கையில் பௌத்தக் கோவில்களுடன் இணைந்து வளர்ந்தது; பத்தினி தேவியை சிங்கள பௌத்தர்கள் காவல்
தெய்வமாகவும், நோய் தீர்க்கும்
சக்தியாகவும் ஏற்றுக்கொண்டதால், பௌத்தக்
கோவில்களும் பத்தினி ஆலயங்களும் ஒரே வளாகத்தில் காணப்படுகின்றன/. ஒரு சில
உரையாசிரியர்கள் கண்ணகி மதுரையை எரித்துவிட்டு ஆயிரக்கணக்கான மக்களுடன் இலங்கை
வந்து குடியேறினார். அதிலிருந்து அவள் தெய்வமாக வணங்கப்படுகிறாள் என்று
கூறுகின்றனர். கற்புக்கரசியை நாம் கைவிட்டோம்
அவர்கள் கொண்டாடுகிறார்கள்
பயணம் தொடரும்..........
No comments:
Post a Comment