Wednesday, January 14, 2026

 


இனிய பொங்கல் வாழ்த்துகள்

 

வால்மீகியின்

 கிஷ்கிந்தா காண்டம்

 இராமன் வாலி உரையாடல் 

பதிவு எண் 409

 


நேற்றைய தொடர்ச்சி...........

  

நியாய சாஸ்திரங்களிலிருந்து ஸ்ரீல பிரபுபாதர் பின்வரும் கதையைக் கூறுவதுண்டு: முட்டாள் ஒருவனால் வளர்க்கப்பட்ட கோழி ஒன்று தினமும் தங்க முட்டையிட்டு வந்தது. “இக்கோழியினால் எனக்கு நல்ல இலாபமே, ஆனால் இதற்கு இரை போடுவதற்கு செலவாகிறதே. இதன் முன்பகுதியை (தலையை) வெட்டிவிட்டால், எனக்கு செலவு இருக்காது, பின்பகுதியிலிருந்து செலவின்றி தங்க முட்டையைப் பெறலாம்,” என்று எண்ணிய அவன் கோழியின் தலையை வெட்டினான். விளைவு: அனைத்தையும் இழந்தான். இது, அர்த ககுட்டி நியாய, அதாவது “அரைக் கோழிக் கொள்கை” எனப்படுகிறது.

 

சாஸ்திரங்களின் ஒரு பகுதியை மட்டும் ஏற்று மற்றொரு பகுதியை நிராகரிக்கக் கூடாது என்ற போதனையை இக்கதையிலிருந்து நாம் பெறுகிறோம். முழு இராமாயணத்தையும் ஏற்று, அதனை முறையாக புரிந்துகொள்ள முயற்சிக்க வேண்டும். தத்தமது சொந்த கருத்துகளுக்கு சாதகமானவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு மற்றவற்றை நிராகரிப்பது சரியல்ல. இராமர் வாலியை வதம் செய்தார் என்னும் ஒரு பகுதியை மேற்கோள் காட்டுவோர், வாலி ஸ்ரீ இராமரை பரம புருஷ பகவானாக ஏற்று புகழும் பகுதியை விட்டு விடுகின்றனர்.

 

கோழியின் தலையை வெட்டிவிட்டு தங்க முட்டையை எதிர்பார்த்து அழும் முட்டாள்

  

வாலியை ஸ்ரீ இராமர் வதம் செய்தல்

 

வாலிக்கும் இராமருக்கும் இடையில் நடந்தது என்ன என்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்த அல்லது தெரிவிக்க, இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ள சம்பவத்தின் சுருக்கத்தைச் சற்று காண்போம்.

 

கிஷ்கிந்தையின் அரசனான வாலிக்கு அவனது இளைய சகோதரனான சுக்ரீவன் சேவை செய்து வந்தான். அவனுக்கு மாயாவி என்ற அசுரனுடன் ஒரு பெண்ணின் காரணத்தினால் பெரும் முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் மாயா வி வாலியைப் போருக்கு அழைத்தான், வாலி பெருங்கோபத்துடன் மாளிகையை விட்டு வெளியேற, சுக்ரீவனும் அவனைப் பின்தொடர்ந்தான். வாலியைக் கண்டு அச்சமுற்ற மாயாவி புதர்கள் நிறைந்த ஆழமான இருண்ட குகைக்குள் நுழைந்தான். அதன் வாயிலைக் காவல் காக்குமாறு சுக்ரீவனுக்கு கட்டளையிட்ட வாலி அசுரனுடன் போரிட குகைக்குள் சென்றான்.

 

தொடரும்

 

No comments: