இலங்கையில்
ஏழு நாட்கள்
=================
இரண்டாம் நாள் பதிவு இரண்டு
அடுத்து நாங்கள் சென்ற இடம் அன்னை சீதை தீக்குளித்த இடம்.
இலங்கையில் சீதை தீக்குளித்ததாகக் (அக்னிப் பரீட்சை) கருதப்படும் இடம் திவுரும்பொல (Divurumpola) ஆகும். இது பண்டாரவளைக்கு அருகில் உள்ள வெலிமடை) பகுதியில் அமைந்துள்ளது.
இந்த இடத்தைப் பற்றிய முக்கியத் தகவல்கள்:
இது நுவரெலியாவில் இருந்து சுமார் 15 - 20 கி.மீ தொலைவிலும், பண்டாரவளைக்கு அருகிலும் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது.
சிங்கள மொழியில் 'திவுரும்பொல' என்பதற்கு 'சத்தியம் செய்த இடம்' என்று பொருள். சீதை தனது கற்பை நிரூபிக்க இங்குதான் தீப்புகுந்து சத்தியம் செய்ததாக நம்பப்படுகிறது..
இன்று இந்த இடம் ஒரு பௌத்த விகாரையாக (திவுரும்பொல ரஜமகா விகாரை) உள்ளது, இருப்பினும் ராமாயண வரலாற்றுடன் தொடர்புடைய முக்கிய இடமாகப் போற்றப்படுகிறது.
இராமன் தன் மீது கொண்ட சந்தேகத்திலிருந்து தான் தூய்மையானவள் என்று நிரூபிக்க தீயில் இறங்கி தனது தூய்மையை நிரூபித்தாள். அந்த இடத்ததிற்கு நாங்கள் சென்றோம். ஆனால் சீதை தீக்குளித்ததாகச் சொல்லப்படும் இடத்தில் ஒரு புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்புறம் மூன்றுக்கு மூன்று அடி இடத்தில் சீதைக்கு சிறிய கோவில் உள்ளது. அதில் ராமர் சீதை உருவங்களுடன் சீதையின் பெரிய உருவமும் இருந்தது. பெண்கள் மட்டும் அந்தச் சிலையைத் தழுவிக்கொள்ள அனுமதிக்கின்றனர். ஆண்கள் சீதையைத் தொட்டு வணங்க மட்டும் அனுமதி. உள்ளே இராமாயணச் சித்திரங்கள்.
சீதையின் இடத்தில் புத்தர். இந்த மாற்றம் எப்படி நடந்தது.?
கல்கி கிருஷ்ணமூர்த்தி 1951ல் இலங்கைக்கு விஜயம் செய்து ‘இலங்கையில் ஒரு வாரம்’ என்ற நூலை எழுதியுள்ளார். அதேபோல் மூதறிஞர் கி. வா. ஜகந்நாதன் அதே ஆண்டு இலங்கையைச் சுற்றிப் பார்த்து ‘இலங்கைக் காட்சிகள்’ என்ற நூலை எழுதி உள்ளனர்.இரண்டு நூலையும் படித்தேன். இருவரும் இந்த இடத்தைப் பார்த்ததாக எழுதவில்லை. ஒரு சில தரவுகளைப் பார்க்கும்போது 1980 ல் தான் இந்தக் கோவில் தோட்டத் தொழிலாளர்களால் உருவானதகத் தெரிகிறது. இலங்கையின் அரசியல் அமைப்புபடி எல்லா புராதன/புராண/வரலாறு இடங்களிலும் பௌத்த சின்னங்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படவேண்டும் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையில் இங்கு புத்தர் சிலையும் வைத்து சிறிய விஹாரும் நிறுவப்பட்டதகச் சொல்லப்படுகிறது. இது இந்து/புராண இடங்களை பௌத்தமயமாக்கும் ஒரு பகுதி.. நாங்களும் மௌனத்துடன் பார்த்துவிட்டு நகர்ந்தோம்
அடுத்து சீதைக்கு ஹனுமான் கணையாழி கொடுத்த இடம்.....
No comments:
Post a Comment