இலங்கையில்
ஏழு நாட்கள்
===================
முதல் நாள்
முருகன் தரிசனம் முடிந்து கொழும்பு நகரைச் சுற்றிப் பார்க்க கிளம்பினோம். இலங்கையில் பார்க்கவேண்டிய இடங்கள் கோவில்கள் நிறைய இருந்தாலும், ஏழு நாட்கள் அனைத்தையும் பார்ப்பது கடினம் என்பதால் பயண அமைப்பாளர் முக்கியமான இடங்களை பேருந்தில் இருந்து கொண்டே காட்டினார் , இறங்கி ஏறி பார்ப்பதால் நிறைய நேரம் வீணாகும் என்றும் முக்கியமான இடங்களைப் பற்றிச் சொல்ல பேருந்தில் இருந்தே அவற்றைப் பார்த்தோம்.
முதலில் கொழும்பு நகரைப் பற்றி ஒரு சில வார்த்தைகள்.:
கொழும்பு இலங்கையின் வணிகத் தலைநகரம் மற்றும் பெருங்கொழும்பு மாநகர சபையின் மையமாகும். 2000 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கர், அரபர், சீனபோர்த்துகீசிய வணிகர்களின் துறைமுகமாக இருந்தது. 1815 ல் இந்நகரம் வெள்ளையர்களின் கைக்குள் வந்தது .அப்போது அது இலங்கையின் தலைநகரானது. 1948 ல் சுதந்திரம் பெற்றது. பெரு நகர மக்கள் தொகை முப்பது லட்சம் என்று சொல்லப்படுகிறது. இங்கு நிறைய இடங்களை பெருந்திளிருந்தே பார்த்தோம். அவைகளாவன இலங்கையின் பழைய பாராளுமன்றம், ஐ.நா அலுவலகக் காரியாலயம், இந்திய மற்றும் பல நாட்டுத் தூதரகங்கள், ஜனாதிபதி மாளிகை,, பண்டாரநயாக சர்வதேச மாநாட்டு மண்டபம் கொழும்பு துறைமுகம். ...................
இவற்றில் முக்கியமான ஒரு சில இடங்களைப் பற்றியக் குறிப்புகளைக் கீழே தருகிறேன்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம்:.
இந்த பெயரை யாரும் எளிதில் மறக்க முடியாது. 1975 கால கட்டங்களில் நான் தூத்துக்குடியில் இருந்தேன் அன்றைய கால கட்டத்தில் ரேடியோவைத் தவிர வேறு பொழுது போக்கும் சாதனங்கள் இல்லை. தூத்துக்குடி இலங்கைக்கு அருகில் இருப்பதால் மிகவும் தெளிவான ஒலிபரப்புடன் அதிகமாகக் கேட்பது இலங்கை வானொலியின் நிகழ்ச்சிகள் தான். அதுவும் அவர்களது வர்த்தக ஒலிபரப்பு மிகவும் புகழ் பெற்றது. கே எஸ் ராஜா, அப்துல் ஹமீது, ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரின் குரலை யாரும் மறந்து இருக்க மாட்டார்கள். அவர்களின் பாட்டுக்குப் பாட்டு நிகழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது, அதைப் போல அமீன் சயானியின் பினாகா கீத் மாலா என்ற நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றது அந்த இலங்கை வானொலியின் கட்டிடத்தை பார்த்ததும் எனக்கு அன்றைய நினைவுகள் நினைவுக்கு வந்தன
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் என்பது ஆசியாவின் பழமையான வானொலி நிறுவனமாகும். 1925-இல் "Radio Ceylon" என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது, 1967-இல் அரசாங்கத்தின் கீழ் "Ceylon Broadcasting Corporation" ஆக மாற்றப்பட்டு, பின்னர் SLBC என அழைக்கப்பட்டது 1925 டிசம்பர் 16 அன்று "Radio Ceylon" என்ற பெயரில் நிறுவப்பட்டது. இது ஆசியாவின் முதல் வணிக குறுக்கலை (short-wave) வானொலி நிலையமாகும். இந்த நிலையம் கடந்த ஆண்டு 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடியது/. இது ஒரு வரலாற்றுச் சாதனை இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகளில் கோடிக்கணக்கான கேட்போரைக் கவர்ந்தது. 70,000-க்கும் மேற்பட்ட பாடல்கள் கொண்ட மிகப்பெரிய இசை காப்பகம் உள்ளது. அந்த நிலையம் என் கண்களில் இருந்து மறைந்தது..........
அடுத்து உலக சரித்திரத்தின் அத்தியாயங்களைத் தனது கரும் பக்கங்களால் நிரப்பிய ஒரு இடத்தைப் பற்றிச் சொல்கிறேன்
பயணம் தொடரும்
No comments:
Post a Comment