துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் இரண்டு
முன்னுரை
முதலில் இராம லக்ஷ்மணர்களையும், பிறகு இராம நாமத்தையும், அதன் பிறகு சிவ பெருமான் உறையும் புண்ய க்ஷேத்ரமான காசியையும், கடைசியாக சிவ பெருமானையும் துதித்து. துளசிதாசர் கிஷ்கிந்தாக் காண்டக் கதையைத் துவக்குகிறார்.
மறை பொருளான பரம் பொருள் மனிதக் குழந்தையாகத் தோன்றியதையும், அந்த நடமாடும் தெய்வத்தைத் தாய் தந்தையரும், சுற்றத்தாரும், நண்பர்களும், ஆன்றோர்களும், சான்றோர்களும், புண்ணியாத்மாக்களும், பாவம் செய்தவர்களும், வாழ்த்தி, வணங்கி வழிபட்ட கதையைப் பால காண்டத்தில் கூறினார் துளசிதாசர்
அயோத்தியா காண்டத்தில் பரமனினும் உயர்ந்த பக்த சிரோமணி ஆகிய பரதன் கதையும், பக்தியின் பெருமையும் சொல்லப்பட்டது..
ஆரண்ய காண்டத்தில் யோகிகள், ஞானிகள், சித்தர்கள், மாரீச்சன், கழுகரசன், நாரதர், சபரி ஆகிய எல்லோரின் பக்தியின் பெருமையை உணர்ந்து, பரமனிடம் பக்தி தானம் கேட்டதையும் பரமன் உள்ளம் உவந்து அவர்களுக்கு பக்தி செய்யும் பெரு மனம் அளித்து அருள் பாலித்த வரலாற்றைக் கூறினார். அதுபோல மாயா சீதையை இராவணன் கவர்ந்து சென்ற வரலாற்றையும்(ராம சரித மானசில் கூறினார்.
இப்போது கிஷ்கிந்தா காண்டத்திலும் பக்தியின் பெருமையே பேசப்படுகிறது...
தொடரும்
No comments:
Post a Comment