வால்மீகியின்
பதிவு
எண் 408
நேற்றைய
தொடர்ச்சி...........
இராமாயணம்
படிப்போம்
நமக்கு
நாமே கேட்க வேண்டிய முதல் கேள்வி: இராமர் வாலியை வதம் செய்த தகவலை நாம்
எங்கிருந்து பெறுகிறோம்? நிச்சயமாக, இராமாயணத்தில் இருந்தே. சரி, நாம்
உண்மையில் இராமாயணத்தை படித்ததுண்டா? “இல்லை” என்பதே பெரும்பாலான மக்களின் பதில்.
கேள்வியெழுப்புவோரில் பெரும்பாலானோர் இராமாயணத்தைப் படித்ததே இல்லை; ஆனால்
கருத்து கூறி தீர்ப்பு வழங்குகின்றனர்– இது நியாயமா? கர்வமுள்ள மூடர்கள் மட்டுமே இவ்வாறு செய்வர்.
“தொலைக்காட்சியில் பார்த்தோம்,” என்று
சிலர் வாதம் செய்வர். இராமாயணத்தை வியாபார நோக்கில் தயாரிப்பவர்கள், கதையை
மட்டும் காட்டிவிட்டு அதிலுள்ள கருத்துகளில் ஆர்வம் காட்டுவதில்லை. அவர்களது
அக்கறை பணத்தில் மட்டுமே, பணத்திற்காக அவர்கள் எதையும் செய்வார்கள். வேத கால
வரலாற்றையும் உண்மைகளையும் திரித்து தங்களின் நோக்கத்திற்குப் பொருந்தும் வகையில், அவர்கள்
தொலைக்காட்சியில் வெளியிடுவர். எனவே, தொலைக்காட்சிகளில் வரும் இராமாயணத்தை நம்பி விவாதம்
செய்வது கூடாது.
மூல
இராமாயணமான வால்மீகி இராமாயணத்தை படிப்பதன் மூலமாக திருப்திகரமான பதிலைப் பெற
முடியும். வால்மீகி இராமாயணத்தைப் படித்தவர்கள் “வாலியை
இராமர் ஏன் வதம் செய்தார்” என்ற கேள்வியை ஒருபோதும் கேட்கமாட்டார்கள்; ஏனெனில், இராமரின்
செயலுக்கான காரணம் அங்கு தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்ரீ
இராமரே பரம்பொருள், பரம புருஷ பகவான் என்பதும் அங்கு
நிலைநாட்டப்பட்டுள்ளது.
முழுமையாக
ஏற்க வேண்டும்
சிலரோ, “இராமர்
வாலியை வதம் செய்தது அநீதி! இஃது எல்லாருக்கும் தெரியும், இதற்காக
இராமாயணம் படிக்க வேண்டிய அவசியமில்லை,” என்று வாதம் செய்கிறார்கள். ஒரு
விதத்தில் பார்த்தால், இராமரை எதிர்க்கும் இவர்கள், இராமர்
என்ற ஒருவர் வாழ்ந்தார் என்பதையும் அவர் வாலியைக் கொன்றார் என்பதையும்
ஏற்றுக்கொள்கின்றனர். ஒருவேளை இராமர் வாழ்ந்ததை அவர்கள் நம்பாவிடில், அவர்களது
வாதங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லை. இல்லாத ஒன்றைப் பற்றி வாதிடுவது முறையா? பிரச்சனை
என்னவெனில், வாதிடுவோர் முழு இராமாயணத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை; மாறாக, அவர்களின்
குற்றச்சாட்டுகளை மேலோட்டமாக ஆதரிக்கும் பகுதிகளை மட்டும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
தொடரும்
No comments:
Post a Comment