வால்மீகியின்
கிஷ்கிந்தா காண்டம்
ஹனுமனின் எழுச்சி
பதிவு எண் 404
நேற்றைய தொடர்ச்சி
ஜாம்பவான் ஹனுமானைப் புகழ்ந்து பேசுவதை அமிர்த இராமாயணத்தில் கீழ் கண்டவாறு சொல்லப்பட்டுள்ளது
==================
அலைகடல் தாண்டிச் சென்று அரக்கன்வாழ் காட்டைக் காண
பலவானா மொருவன் நீயே பாலரா லாமோ கண்டாய்
நலமேசெய் யாது போனால் நாதனும் ராவ ணன்றன்
தலைகள்பத் தையும் கொய்து தாயினை மீட்ப ரோதான்,
---------------------
அஞ்சிலே ஒன்றா ய் வந்து அனுமந்த வீர னென்று _
அஞ்சிலே ஒன்றைத் தாவி ௮ண்டர்கள் புகழ்ந்த சீலா
அஞ்சிலே ஒன்றைத் தாவி ௮ன்னையைத் துதித்து வந்தால்
அஞ்சனா மகனென் றுன்னை ஐயனும் மதிப்பா னன்றோ,
(அமிர்த இராமாயாணம்)
=======================
ஓங்கி நிற்கும் கடல் உனை அஞ்சுமோ?
ஓர் குதிப்பில் அதனை நீ தாண்டுவாய்!
வானம் திறக்கும் வழி உனக்கே —
வாழ்வின் வீரன் நீயே, ஹனுமா!
---------------
சீதையைத் தேடி செல், சிங்கமே!
சிந்தை தளராதே, தெய்வம் உனக்கே!
ராமன் நாமம் உனக்கு வலிமை —
ராவணன் கோட்டை சிதறும் நிச்சயம்!
---------------
கடல் உனைத் தடுத்து நிற்குமோ?
காற்றின் வேகம் உனக்குள் எரிகிறது!
ஜாம்பவான் சொல், நம்பிக்கை தீ —
ஜய ஜய ஹனுமா, பாய்ந்து செல்!
தொடரும்
No comments:
Post a Comment