Wednesday, January 7, 2026

 



இலங்கையில்

ஏழு நாட்கள்

===================

முதல் நாள் (5)

கொழும்பு பெரு நகரத்தில் நாம் பார்த்த பல இடங்களைப் பற்றி இதுவரை பார்த்தோம். ஆனால் இலங்கையின் இரண்டு இடங்கள் இலங்கையின் தலை எழுத்தையே நிர்ணயம் செய்கின்றன.


இதைப் பற்றிக் கண்டிப்பாக நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒன்று கொழும்புத் துறைமுகம்.

கொழும்பு துறைமுகம் இலங்கையின் மிகப்பெரிய, பிஸியான வணிகத் துறைமுகம்; கொழும்பின் மேற்குப் பகுதியில் உள்ளது.. சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவின் பங்களிப்புடன் இந்தத் துறைமுகம் இயங்குகிறது. இந்தியாவின் அதானி குழுமம் 229 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்துள்ளது.. உலகிலேயே மிக நவீனமய மாக்கப்பட்ட துறைமுகம். விரைவாக பல்லாயிரம் டன் சரக்கைக் கையாழும் திறன் பெற்றது.

அடுத்து ஹம்பன்தொட்ட துறைமுகம்

இலங்கையின் தெற்குப் பகுதியில் உள்ளது.. இது ஒரு ஆழ் கடல் துறைமுகம். 2010 ல் நிறுவப்பட்டது. இலங்கையில் கிழக்கு–மேற்கு சர்வதேச கடல்பாதையில் உள்ளது, கொழும்பில் ஒரு துறைமுகம் இருக்கும்போது இந்த துறைமுகம் எதற்கு? கப்பல்கள் பொருட்களை ஒருநிலையிலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு ஹம்பன்தொட்டா பயன்படுத்தப்படுகிறது அதாவது ஜப்பான், இந்தியா, தென் கொரியா போன்ற நாடுகள் தாங்கள் உற்பத்தி செய்யும் கார்களை மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்த துறைமுகம் ஒரு transhiptment point ஆக பயன்படுயகிறது.. இலங்கையின் தெற்குக் கடல்பாதையில் முக்கிய பங்கு வகிக்கிறது — பெரிய கப்பல்கள் மற்றும் சரக்கு வர்த்தகச் சேவைகளுக்கு இடம் வகுக்கிறது.. ஆனால் இதைக் கட்டுவதற்கு 1.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிக வட்டிக்கு சீனாவிடமிருந்து கடன் வாங்கியது. அந்தக் கடனைத் திருப்பச் செலுத்த முடியாததால் அந்தத் துறைமுகத்தை 2017ல் சீனாவுக்கே 99 வருடங்கள் குத்தகைக்கு கொடுத்துவிட்டது. முன்பே சொல்லி இருந்தேன் லோட்டஸ் டவர் என்ற கட்டிடத்தை 104 கோடி அமெரிக்கா டாலர்கள் செலவில் சீனா கட்டிக் கொடுத்துள்ளது. இப்படி பல கட்டுமானங்களைக் கட்டி சீனா இலங்கையை தனது பொறியில் சிக்க வைத்துவிட்டது. அப்படிக் குத்தகைக்கு விடும் போது அதில் ஒரு நிபந்தனை அந்தத் துறைமுகத்தில் ஆயுத தளவாடங்கள் ஆயுதக் கப்பல்கள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமாக எந்தவித அச்சுறுத்தல்களும் இருக்கக் கூடாது என்று. ஆனால் இன்றும் சீன அதை மீறிக் கொண்டிருக்கிறது.

இது போல 2019 ல் இந்தத் துறைமுகத்தில் ஒரு பெரிய எண்ணை சுத்திகரிப்பு ஆலை அமைக்க இலங்கை இந்தியாவுடன் 3.85 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தம் செய்தது/ முதலில் சீனா இந்த ப்ராஜெக்டை எடுத்துக் கொள்ள முன் வந்தபோது இன்று அதிபராக இருக்கும் டிச்ஸனயாக அன்று எதிரணியில் இருந்தார். அவர் அப்போது சீனாவுடன் ஒப்பந்தம் செய்வதை எதிர்த்தார். ஆனால் அவரே அதிபரானவுடன் 2025 ல் இந்திய ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு சீனா சென்று 3.70 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு புதிய ஒப்பந்தம் செய்துகொண்டார். ஆனால் அந்த இலங்கைக்குத்தான் சமீபத்தில் வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டபோது இந்தியா முந்திச் சென்று உதவி செய்தது. சீனா கட்டுமானங்களாகக் கட்டி இலங்கையை தனது பிடிக்குள் வைத்துள்ளது. இந்தியாவோ, அத்தியாவசப் பொருட்கள், பெட்ரோல், டீசல் முதலியவைகளைக் கொடுத்து உதவுகிறது.

சேதுக் கால்வாய் திட்டம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டபோது சீனாவின் அழுத்தத்தால் இலங்கை அதை மறைமுகமாக எதிர்த்தது. அது ரத்தானதும் இருவரும் மகிழ்ந்தனர். இன்று கேரளாவின் விழிஞ்சம் துறை முகம் செயல் படத் தொடங்கியதும் இலங்கையும் சீனாவும் கவலையில் உள்ளன. காரணம் விழிஞ்சம் துறைமுகம் இனி முக்கியமான transhipment point ஆகிவிடும். அதனால் எதிர்காலத்தில் கப்பல்கள் ஹம்பன்தொட்ட துறைமுகம் செல்ல வேண்டியதிருக்காது.

இனி பயணத்தின் இரண்டாம் நாள் .



No comments: