துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 165
நேற்றைய
தொடர்ச்சி.
இராமனின்
அம்பால் தாக்கப்பட்டு வீழ்ந்த இராமனிடம் வாலி
வீசும் கேள்விக் கணைகளின் தொடர்ச்சி.........
ஆத்யாத்ம
இராமாயணம்
किं मयापकृतं राम तव येन हतोऽस्म्यहम् ॥ ५१॥
राजधर्ममविज्ञाय गर्हितं कर्म ते कृतम् ।
वृक्षखण्डे तिरोभूत्वा त्यजता मयि सायकम् ॥ ५२॥
यशः किं लप्स्यसे राम चोरवत्कृतसङ्गरः ।
यदि क्षत्रियदायादो मनोर्वंशसमुद्भवः ॥ ५३॥
युद्धं कृत्वा समक्षं मे प्राप्यसे तत्फलं तदा ।
सुग्रीवेण कृतं किं ते मया वा न कृतं किमु ॥ ५४
धर्मिष्ठ इति लोकेऽस्मिन् कथ्यसे रघुनन्दन ॥ ५७॥
वानरं व्याधवद्धत्वा धर्मं कं लप्स्यसे वद
ராஜதர்மம் தெரியாத “உனக்கு நான் உனக்கு என்ன துரோகம் செய்தேன்? இந்தச் செயலைச் செய்தது கண்டிக்கத்தக்கது. அரசர்களுக்குரிய தர்மத்தை
அறியாமல் நிந்திக்கத்தக்க காரியத்தை மேற்கொண்டாயே?. மரக்கூட்டத்தில் மறைந்திருந்து என் மீது அம்பு
எய்தாய்,; சத்தியவந்தனான நீ திருடனைப் போல இந்தக்
காரியத்தைச் செய்து என்ன கீர்த்தியை அடையப்போகிறாய்? அதனால் உனக்குப்
புகழ் கிடைக்குமா? சுக்ரீவன் உனக்கு என்ன செய்தான்?,
நான் அவனுக்கு என்ன செய்யவில்லை?? ரகுநந்தன்! நீங்கள் இந்த உலகில் நல்லொழுக்கமுள்ளவர் என்று
அழைக்கப்படுகிறீர்கள், ரகுவம்சத்தில் பிறந்துள்ளீர்கள். ஆனால் ஒரு
வேட்டைக்காரனைப் போல, குரங்காக கருதப்படும் என்னைக் ..கொன்று
எந்தப் புகழை அடைந்தாய்? சொல்லுங்கள்!. நான் உங்களுக்கு வேண்டாதவன் ஆகிவிட்டேனா? சுக்ரீவன்
உங்கள் அன்பனா? இவ்வாறு மரிக்க நான் என்ன பிழை செய்தேன்?” என்றான். இராமன் மீது
வாலிக்கு பக்தி இருந்தாலும் அவைடமிருந்து கடுமையான சொற்கள் வந்து விழுந்தன. “धर्मसंस्थापनार्थ உலகத்தில் தர்மத்தை
நிலைநிறுத்தத் தாங்கள் அவதாரம் செய்தீர்கள் ஆனால் நீங்களே தர்மத்தைக்
கொன்றுவிட்டீர்கள் என்று வாலி கேட்கிறான்.
தொடரும்
No comments:
Post a Comment