Thursday, July 9, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 152

 

நேற்றைய தொடர்ச்சி

 

யுத்தத்தில் வாலியிடம் அடிபட்டு இராமனிடம் ஓடி வந்த சுக்ரீவன் “இராமா! சகோதரனாகிய எதிரியால் நான் கொல்லப்படவேண்டும் என்று விரும்புகிறாயா? அதற்கு நீயே என்னைக் கொன்றுவிடு” இராமா நீ சரணாகத வத்சலன். எனக்கு நம்பிக்கை கொடுத்து நீ என்னை ஏன் அலட்சியம் செய்கிறாய்.” என்றான்.

 

உடனே இராமன்

  

एक रूप तुम्ह भ्राता दोऊ तेहि भ्रम तें नहिं मारेउँ सोऊ॥

  

  சுக்ரீவனிடம் “நீங்கள் இருவரும் ஒரேமாதிரியான உருவம் கொண்டவர்கள். இந்த மயக்கத்தினால் அவனை நான் கொல்லவில்லை” என்று கூறிவிட்டு சுக்ரீவன் உடலைத் தடவிக் கொடுத்தான்.

 

இராமனின் இந்த கூற்று வால்மீகி இராமாயணத்திலும் சொல்லப்பட்டுள்ளது

 

अन्योन्य सदृशौ वीरौ उभौ देवौ इव अश्विनौ

अलंकारेण वेषेण प्रमाणेन गतेन |

त्वम् सुग्रीव वाली सदृशौ स्थः परस्परम् || -१२-३०

स्वरेण वर्चसा एव प्रेक्षितेन वानर |

विक्रमेण वाक्यैः व्यक्तिम् वाम् उपलक्षये || -१२-३१

ततो अहम् रूप सादृश्यात् मोहितो वानरोत्तम |

उत्सृजामि महावेगम् शरम् शत्रु निबर्हणम् || -१२-३२

त्वयि वीर विपन्ने हि अज्ञान् लाघवान् मया |

मौढ्यम् मम बाल्यम् ख्यापितम् स्यात् कपीस्वर || -१२-३४

 

அதாவது “நீங்கள் இருவரும் ஒன்று போல உள்ளீர்கள். அஸ்வினி குமாரர்கள் போல உள்ளீர்கள். அலங்காரம், வேஷம் {தோற்றம்}, பிரமாணம் {உடல் உருவம்} ஆகியவற்றில் நீயும், வாலியும் பரஸ்பரம் காண ஒத்தவர்களாக இருக்கிறீர்கள்.வானரா, ஸ்வரத்தாலும் {குரலாலும்}, பிரகாசத்தாலும், பார்வையாலும், விக்ரமத்தாலும் உங்கள் இருவருக்கிடையிலும் எந்த வேறுபாட்டையும் காணமுடியவில்லை. வானரோத்தமா! எனவே உருவத்தோற்ற ஒற்றுமையில் குழப்பமடைந்ததால், மஹாவேகத்துடன் சத்ருவை அழிக்கும் சரத்தை நான் ஏவவில்லை. வீரா, கபீஷ்வரா {குரங்குகளின் தலைவா}, என் அஞ்ஞானத்தாலும், லாகவத்தாலும் {நான் பாணம் எய்து} நீ பீடிக்கப்பட்டால், என்னுடைய அசட்டுத்தனமும், சிறுபிள்ளைத்தனமும் நிறுவப்படும்.” என்றான்.

 

தொடரும்..............


No comments: