Tuesday, July 21, 2026

   

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 163

 

 நேற்றைய தொடர்ச்சி.. 


தனது எதிரில் வந்து நின்ற இராமனிடம் வாலி ““அறம் காக்கப் பிறந்தவனே! என்னை ஓரூ வேடன் மிருகங்களை அடிப்பது போல(மறைந்திருந்து) அடித்தது ஏன்? இதனால் உனக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? என்று வினாவினான்.

  

 

வால்மீகி இராமாயணம் மற்றும் ஆத்யாத்ம இராமாயணங்களிலும் வாலி இராமனிடம் பேசிய கடுமையான வசனங்கள் உள்ளன

 

अर्थ सहितया वाचा गर्वितम् रण गर्वितम् || -१७-१५

पराङ्मुख वधम् कृत्वा को अत्र प्राप्तः त्वया गुणः |

यदहम् युद्ध सम्रब्धः त्वत् कृते निधनम् गतः || -१७-१६

 

வால்மீகி இராமாயணம்:

 

ராகவனையும், மஹாபலம் பொருந்திய இலக்ஷ்மணனையும் கண்டு, அர்த்தம் பொதிந்த சொற்களில், வசைப் பாங்குடனும், மதிப்புடனும் கூடியவையும், தர்மத்திற்கு இணக்கமானவையுமான  வாக்கியங்களை கர்வத்துடன் சொன்னான்: "நராதிபதியின் {மனிதர்களின் தலைவனான தசரதரின்  புத்திரனும், புகழ்பெற்றவனும், பிரிய தரிசனம் தருபவனுமான நீ, பாராமுகமாக இருந்தவனை இவ்வாறு வதம் செய்ததில் என்ன குணத்தை {புண்ணியத்தை} அடைந்துவிட்டாய்? யுத்தத்தில் ஈடுப்பட்டிருந்த எனக்கு, எவ்வகை மரணத்தை நீ அளித்துவிட்டாய்?

  

 

माम् इह अप्रतियुध्यन्तम् अन्येन समागतम् || -१७-२५

त्वम् नराधिपतेः पुत्रः प्रतीतः प्रियदर्शनः |

लिन्गम् अपि अस्ति ते राजन् दृश्यते धर्म सम्हितम् || -१७-२६

कः क्षत्रिय कुलेजातः श्रुतवान् नष्टसंशयः |

धर्म लिंग प्रतिच्छन्नः क्रूरम् कर्म समाचरेत् || -१७-२७

राम राघव कुले जातो धर्मवान् इति विश्रुतः |

अभव्यो भव्य रूपेण किम् अर्थम् परिधावसे || -१७-२८

हत्वा बाणेन काकुत्स्थ माम् इह अनपराधिनम् |

किम् वक्ष्यसि सताम् मध्ये कर्म कृत्वा जुगुप्सितम् || -१७-३५

 

“உன்னுடன்} யுத்தத்தில் ஈடுபடாதவனும், அன்னியனை {வேறொருவனை} எதிர்கொண்டிருப்பவனுமான என்னை எதற்காக நீ ஹிம்சித்தாய்?[ இராஜாவே, பிரிய தரிசனந் தருபவனாகவும், நராதிபதியின் புத்திரனாகவும் புகழ்பெற்றவனான நீ, ஒரு தர்மவான் போல் காட்சியளிக்கிறாய்.} க்ஷத்திரிய குலத்தில் பிறந்தவனும், கல்விமானும், {நன்மை தீமைகளில்} கருத்து மயக்கம் தெளிந்தவனும்,  தர்மலிங்கம் போர்த்தியவனுமான {தர்மக் குறியீடுகளைப் பூண்டவனுமான} எவன் {இத்தகைய} குரூர கர்மத்தைச் செய்வான்?இராமா! இரகு குலத்தில் பிறந்து, தர்மவான் என்று புகழ்பெற்றிருந்தாலும், பவ்யமற்றவனான நீ தார்மீகன் என்ற உருவத்தில்  திரிவது என்ன அர்த்தம்? காகுத்ஸ்தா! அபராதம் செய்யாதவனான என்னை இதோ பாணத்தால் கொன்று,  இழிசெயல் செய்துவிட்டு நல்லோர் மத்தியில் என்ன சொல்லப் போகிறாய்.

 

தொடரும்

 

No comments: