Sunday, July 19, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 161

 

நம் நாட்டில் நீதி மன்றங்களில் கோடிக் கணக்கில் வழக்குகள் முடிவுக்கு வராமல் தேங்கிக் கிடக்கின்றன. அதிலும் பல வழக்குகள் பல்லாண்டுகள் முடிவுக்கு வராமல் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. ஒரு வழக்கு மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இன்னும் விவாதிக்கப் பட்டு வருகின்றது . அது  மக்கள் மன்றத்தில். அதுதான் இராமன் வாலியைக் கொன்ற விவகாரம். இராமன் வாலியைக் கொன்றது சரியா? அதுவும் மறைந்திருந்து கொன்றது சரியா? என்று விவாதிக்கப்பட்டு பலவிதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. என்னைப் பொறுத்தவரை ஒரு விஷயத்தை, அதுவும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு நடந்ததாகக் கூறப்படும் விஷயத்தை இன்று விவாதிக்கும்போது அன்றைய காலகட்டத்தை உணர்ந்து விவாதிப்பதுதான் சரி என்று நினைக்கிறேன். அந்தக் கால கட்ட அரசியல் அமைப்பு. சமுதாய அமைப்பு நிகழ்வு நடந்த சூழ்நிலை இவற்றை கருத்தில் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். அன்றைய நிகழ்வை இன்றைய சமுதாயத்தை உரைகல்லாக வைத்து உரசிப் பார்ப்பது சரியல்ல என்றே நினைக்கிறேன்.

 

 

இராமனை மனிதனாகப் படைத்த ஆதி கவி வால்மீகி, வாலியை மறைந்திருந்து வதைத்தற்க்கான விளக்கம் அளித்துள்ளார். இராமனைப் பரம்பொருளாக சித்தரித்த கவி கம்பனும் அதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.  இருவரின் விளக்கங்களை பகுப்பாய்வு செய்து இன்றைய அறிஞர்கள் இன்னும் விவாதித்துக் கொண்டுள்ளனர்.  பொதுவாக நாம் இந்த இரண்டு மேதைகளின் விளக்கங்களைத்தான் படித்துள்ளோம். இதே விஷயத்தை ராமசரித மானஸ் என்ற இராமாயணத்தை அவதி மொழியில் எழுதிய  துளசிதாசர் எவ்வாறு கையாண்டுள்ளார் என்று இனி பார்க்கலாம்.

 

பொதுவாக வாலி வதை,  தர்மம், அரசாட்சி மற்றும் தார்மீக பொறுப்பை ஆராய்வதற்கான ஒரு கதை முப்பட்டகமாக செயல்படுகிறது, இது கடமை, நீதி மற்றும் நெறிமுறை தெளிவின்மைக்கு இடையிலான சிக்கலான தொடர்புகளை விளக்குகிறது.  அடுத்த பதிவில் சந்திப்போம்.

 

 

தொடரும்


No comments: