Thursday, July 23, 2026

 


அன்று சொன்னது.....அர்த்தமுள்ளது.


 பதிவு இரண்டு

 

அறிவுரை என்பது சொல்பவரின் மனநிலை, குண நலன், இருக்குமிடம், வகிக்கும் பதவி இவற்றைப் பொறுத்து வேறுபடும். இங்கு அதுபோல, ஒரே விஷயத்தை இரண்டு இதிகாசங்களிலுள்ள வேறு வேறு பாத்திரங்கள் சொல்லும்போது எவ்வாறு வேறுபடுகிறது என்பதைப பார்ப்போம்

 

முதலில் மகாபாரதக் குந்தி......

 

துரியோதனன், சகுனி ஆகியோரின் சதியால் வாரணாவதம் அரக்கு மாளிகைத் தீயிலிருந்து தப்பி ஒரு கானகத்திற்குத்  தாயார் குந்தியுடன் வருகின்றனர பாண்டவர்கள். அங்கு ஹிடும்பன் என்ற ராட்சசனைக் கொன்று அவன் தங்கை ஹிடும்பியை திருமணம் செய்துகொள்கிறான் பீமன். அவர்களுக்குக் கடோத்கஜன் என்ற மகன் பிறக்கிறான். பிறகு வியாசர் அங்கு தோன்றி அவர்களை ஏகச்சக்ரம் என்ற ஊரில்  ஒரு பிராமணன் வீட்டில், பிராமண வேடத்தில்  தங்கவைக்கிறார், அங்கு பாண்டவர்கள் பிக்ஷை எடுத்து வாழ்க்கையைக் கழிக்கின்றனர்.

 

ஒரு நாள் பீமனைத்தவிர மற்ற பாண்டவர்கள் அனைவரும் பிக்ஷைக்காக வெளியே சென்று விடுகின்றனர். வீட்டிற்குள் திடீரென்று அழுகுரல் கேட்கிறது. இரக்க குணமும், பிறருக்கு நன்மையை விரும்பும் குந்தியால் பிராமணரின் அந்த பரிதாபமான அழுகையைக் கேட்டுத்  தாங்கிக்கொள்ள முடியவில்லை. துரியோதனனிடமிருந்து மறைந்து வாழ இடம் கொடுத்துத் தங்களை ஆதரிக்கும் அந்த பிராமணனுக்கு திடீரென்று அப்படி என்ன துயரம் வந்திருக்கும் என்று எண்ணிய குந்தி, அங்கு  என்ன நடக்கிறது என்று பார்க்கிறாள்.

 

அங்கு அந்த குடும்பத்தலைவனான பிராமணன் தனது மனைவி மற்றும் சிறு குழந்தைகளுடன் அழுது கொண்டிருக்கிறான். அவர்களுடைய உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த குந்தி, அவர்களிடம் சென்று ‘உங்கள் துயரத்திற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன், என்னால் முடியுமென்றால் நான் அவைகளைக்  களைந்து விடுவேன்” என்று கூறினாள்.

 

விருந்தினராக வந்தவர்களிடம் அதற்கான காரணத்தைச் சொல்ல முதலில் மறுத்த அந்த பிராமணன் குந்தியின் வற்புறுத்தலுக்குப்  பிறகு தனது துயரத்திற்கான காரணத்தைச் சொல்ல ஆரம்பிக்கிறான்.  

 

அந்த பிராமணன் சொன்ன விஷயம் என்ன.

 

இன்று போய் நாளை வாருங்கள்.

 


No comments: