Friday, July 17, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 159

 

நேற்றைய தொடர்ச்சி..........

 

 

சுக்ரீவனுக்கும் வலிக்கும் நடந்த யுத்தத்தில்  வாலியின் மார்பில் பாணத்தைச் செலுத்தினான் இராமன்.

 

இராமனின் அம்பு மார்பில் பட்டும் வாலி எழுத்து அமர்ந்தான். வாலி தனது எதிரில் நின்று கொண்டிருந்த தாமரைக் கண்களையுடைய இராமனைப் பார்த்தன். இடது கையில் வில்லும் வலது கையில் அம்புடன் நின்றிருந்தான் இராமன்.

  

இவ்வாறு வால்மீகி, ஆத்யாத்ம மற்றும் பல  இராமாயணங்களில் வாலி கண்ட இராமனைப் பற்றிய வர்ணனை கிடைக்கின்றன.. இங்கு துளசிதாசர் வில்லில் நாணேற்றிய அம்புடன் வாலி அருகில் வந்தான் என்று சொல்கிறார்.. இங்கு ஒரு கேள்வி எழுகிறது. ஒரே பாணத்தால் வாலியை வீழ்த்துவேன் என்று இராமன் சொன்னான். அதன்படி வீழ்த்திவிட்டான். பிறகு இராமன் கையில் மற்றொரு அம்பு வந்தது?  இதற்கு உரையாசிரியர்களின் ஒரே கருத்து இராமன் எய்த அம்பு எப்போதும் இலக்கைத் தாக்கிவிட்டு மீண்டும் அவனிடம் வந்துவிடும். அதுபோல் தான் வாலியின் மீது எய்த அம்பு வாலியைத் தாக்கிவிட்டு மீண்டும் இராமனிடம் வந்துவிட்டது என்கின்றனர் உரையாசிரியர்கள்.. ஆனால் சில உரையாசிரியர்கள் இதை ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் லங்கா காண்டத்தில் பல இடங்களில் இராமனின் பாணம் இலக்கைத் தாக்கிவிட்டு அவனது அம்புராத்தூணிக்குள் வந்து சேர்ந்தது என்று எழுதியுள்ளார் துளசிதாசர். ஆனால் வாலியைக் கொன்ற அம்பு அப்படி வந்தது என்று எழுதவில்லை.

  

 ஆத்யாத்ம இராமாயணத்தில் வாலி இறக்கும் முன்பே வாலியே

 

विशल्यं कुरु मे राम हृदयं पाणिना स्पृशन्‌।

तथेति बाणमुदधृत्य राम: पस्पर्श पाणिना॥'

 

இராமனே அந்த அம்பை அகற்றச் சொல்லிவிடுகிறான். வால்மீகி இராமாயணத்தில் நீலன் அந்த அம்பை उद्बबर्ह शरं नीलस्तस्य गात्रगतं तदा  'அகற்றியதாகச் சொல்லப்பட்டுள்ளது.

 

  


தொடரும்

 


No comments: