துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 157
நேற்றைய தொடர்ச்சி..........
வாலியும் சுக்ரீவனும் கோரமான
யுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்
हिय हारा भय मानि।““இனி வாலியிடம் மோத முடியாது என்று
தெரிந்தவுடன் சுக்ரீவன் இராமன் இருக்குமிடத்தை பயத்துடன் நோக்கினான்
ஒரே பாணத்தால் வாலியைக் கொல்வேன் என்று
உறுதி அளித்ததால் வில்லின் நாணை நன்றாக இழுத்துவிட்டான் இராமன் என்று சொல்கிறார்
துளசிதாசர் . வாலியின் மார்பில் குறிவைத்து இராமன் அடித்தான் என்கிறார்
துளசிதாசர்.
இராமன் ஏன் வாலியின் தலையைக் கொய்யவில்லை?.
இறுதியில் வாலியின் தரப்பிலிருந்து ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அதற்கு ஒரு
வாய்ப்பளிக்கத்தான் என்று உரையாசிரியர்கள் சொல்கின்றனர். மார்பில் குறி வைத்ததன்
காரணம் அவனது இதயத்தில் அகங்காரம் இருந்தது. அந்த அகங்காரத்தை ஒழித்தால்தான்
வாலிக்கு முக்தி கிடைக்கும் என்பதற்காக மார்பில் குறிவைத்து அடித்தான் இராமன்.
परा बिकल महि सर के लागें। पुनि उठि बैठ देखि प्रभु आगे॥
பாணம் தைத்ததும் துடித்தபடியே
வாலி நிலத்தின் மீது வீழ்ந்தான்.பிறகு எழுந்து பார்த்தான். எதிரே
கமலக்கண்ணன் சடை முடிதரித்தவனாய் கையில் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கக் கண்டான்.
இராமனின் திறமையை யுத்த காண்டத்தில் சொல்கிறார் துளசிதாசர்
सो नर क्यों दसकंध बालि बध्यो जेहिं एक सर।
बीसहुँ लोचन अंध धिग तव जन्म कुजाति जड़॥ 33(क)॥
“ஹே இராவணா! ஒரே பாணத்தால் வாலியை வீழ்த்தியவனைப் பற்றி
கேள்விப்பட்டதில்லையா.? அப்படிக் கேள்விப்படவில்லை என்றால் உனக்கு இருபது கண்கள்
இருந்தாலும் நீ குருடனே” என்கிறார் துளசிதாசர்,
தொடரும்
No comments:
Post a Comment