துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 144
நேற்றைய தொடர்ச்சி..........
“காலன் எல்லோரையும் வெற்றி கொள்கிறான்.
ஆனால் இராம இலக்ஷ்மணன் இருவரும் அந்தக் காலனையும் வெற்றி கொள்வர். அவர்களுக்கு
முன்னால் நீங்கள் எம்மாத்திரம்? என்று தாரை வாலியை சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய
வேண்டாம் என சொல்கிறாள்..
பால காண்டத்தில் சீதையைத் திருமணம் செய்துகொண்டு
அயோத்தி திரும்பும் வழியில் இராமன் பரசுராமனை எதிர்கொள்கிறான்.
देव दनुज भूपति भट नाना। समबल अधिक होउ बलवाना॥
जौं रन हमहि पचारै कोऊ। लरहिं सुखेन कालु किन
होऊ॥
யுத்தம் என்று வந்து விட்டால்,, தேவர்களோ, அசுரர்களோ அரசர்களோ
எவரையும் எளிதில் வெல்வேன் அந்தக் காலன் உட்பட என்று இராமனே சொல்கிறான்.
அதுபோல ரிஷ்ய முக மலையில் இலக்ஷ்மணனுடன் சீதையைப் பற்றிய நினைவுகளுடன்
இராமன் அமர்ந்துள்ளான்.
बरषा गत निर्मल रितु आई। सुधि न तात सीता कै
पाई॥
एक बार कैसेहुँ सुधि जानौं। कालुह जीति निमिष
महुँ आनौं॥
“மழைக்காலம் முடிந்து இலையுதிர் காலம் தொடங்கப் போகிராது. ஆயினும் சீதையைப் பற்றிய
எந்தத் தகவலும் தெரியவில்லை. அவளைப் பற்றிய விவரம் தெரிந்து விட்டால் அந்தக்
காலனையும் வெற்றி கொண்டு சீதையை இங்கு அழைத்து வருவேன்.” என்று மனம் வருந்திக்
கூறுகிறான்.
कोसलेस सुत लछिमन रामा என்று கூறுகிறார்
துளசிதாசர். அதாவது தாரைக்கு இராமன் மற்றும் இலக்ஷ்மண் இருவரும் இறைவன் அவதாரம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது
இங்கு இரண்டுவிதமான கதை சொல்லப்படுகிறது. அது என்ன?
தொடரும்..............
No comments:
Post a Comment