Sunday, July 5, 2026

 


காலை வணக்கம்

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 148

 

நேற்றைய தொடர்ச்சி..............

 

வாலி தாரையிடம் சொல்வதன் தொடர்ச்சி.............

  

துளசிதாசர் जौं कदाचि என்ற பதத்தைப் போடுகிறார். இதன் பொருள் இராமன் தர்மம் அறிந்தவர். ரகுநாதர். ரகுவம்சத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் தர்மாத்மாக்கள்  நான் அவருக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. धर्मज्ञः च कृतज्ञः च कथम् पापम् करिष्यति || அதனால் என்னை ஏன் அவர் கொல்வார்? மேலும் அவர் சமபார்வை கொண்டவர். அவருக்கு சுக்ரீவன் எப்படியோ அப்படித்தான் நானும். அதனால் என்னை அவர் ஏன் தண்டிக்கப் போகிறார்? அவர் இலக்ஷ்மணனுடன்    வந்தால் रामो यदि समायातो लक्ष्मणेन सम॑ प्रभु: எனக்கு அவர்மீது அளவிலா அன்புவரும் 'तदा रामेण मे स्नेहों भविष्यति न संशय:। நான் அவரை வணங்கி அழைத்து வருவேன். आनेष्यामि गृहं साध्वि नत्वा तच्चरणाम्बुजम्. அப்படியானால் அவர் ஏன் என்னைக் கொல்லப் போகிறார்? என்று வினவினான். 

 

மீண்டும் तो पुनि होउँ सनाथ என்ற பதங்களை எடுத்துக் கொள்வோம், வாலிக்குத் தெரியும் இராமனின் கையால் தான் கொல்லப்பட்டால் கண்டிப்பாக முக்தி கிடைக்கும் என்று, வால்மீகி இராமாயணத்திலேயே இதைப் பற்றிய செய்தி உள்ளது

 

शक्यम् दिवम् आर्जयितुम् वसुधाम् अपि शासितुम् |

त्वतः अहम् वधम् आकांक्षयन् वार्यमाणो अपि तारया ||

सुग्रीवेण सह भ्राता द्वन्द्व युद्धम् उपागतम्

 

தாரை என்னைத் தடுத்தும் இராமன்  கையால் மரணம் வேண்டியே சுக்ரீவனுடன் யுத்தம் செய்தேன் என்று சொல்கிறான். தாரை சொல்லியும் கேளாமல் அவன் யுத்தம் செய்ய ஓடி வந்தான். காரணம் அவன் கோபத்தின் பிடியில் இருந்தான்.

 

தொடரும்..............

 


No comments: