Wednesday, July 8, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 151

 

நேற்றைய தொடர்ச்சி............

  

இப்போது வாலி தன்னைத் தாக்கியதும் அவன் எனது சகோதரன் அல்ல அவன் யமன் என்று சொல்லி மீண்டும் வானர இனத்தின்  அடிக்கடி தாவும் குணத்தை வெளிப்படுத்தினான்.  சுக்ரீவனால் பரமாத்மா என்று சொல்லப்பட்ட இராமனுக்கு வாலியை வீழ்த்த எவ்வளவு நேரம் ஆகும். ஆனால் வாலி நல்லவன் என்று சுக்ரீவனின் சொன்ன வாயால் வாலி ஒரு யமன் என்று சொல்ல வேண்டும் என்று காத்திருந்தான்.

 

बंधु न होड़ मोर यह काला இவன் எனது உறவினன் இல்லை என்னைக் கொல்ல வந்தக் காலன் என்பதை ஆத்யாத்ம இராமாயணத்தில்

 

किं मां घातयसे राम शत्रुणा भ्रातृरूपिणा ।

यदि मद्धनने वाञ्छा त्वमेव जहि मां विभो

एवं मे प्रत्ययं कृत्वा सत्यवादिन् रघूत्तम ।

उपेक्षसे किमर्थं मां शरणागतवत्सल ॥ १२ ॥

 

சுக்ரீவன் இராமனிடம் சொல்கிறான் “இராமா! சகோதரனாகிய எதிரியால் நான் கொல்லப்படவேண்டும் என்று விரும்புகிறாயா? அதற்கு நீயே என்னைக் கொன்றுவிடு” இராமா நீ சரணாகத வத்சலன். எனக்கு நம்பிக்கை கொடுத்து நீ என்னை ஏன் அலட்சியம் செய்கிறாய்.” என்றான்.

 

வால்மீகி இராமாயணத்திலும் இதே போன்று சுக்ரீவன் கேட்கிறான்.

 

आह्वयस्व इति माम् उक्त्वा दर्शयित्वा विक्रमम् |

वैरिणा घातयित्वा किम् इदानीम् त्वया कृतम् || -१२-२६

 

“இராமா! தாங்கள் தான் வாலியை யுத்தத்திற்கு அழைக்கச் சொன்னீர்கள். ஆனாலும் எதிரி என்னை அடிப்பதை தாங்கள் ஏன் விட்டு வைத்தீர்கள்”

 

இங்கு ஒரு சுவாரசியமான விஷயம். சுக்ரீவன் இராமனை ரகுவீர் என்றும் கிருபாளு என்று அழைக்கிறான். இராமன் தன்னைக் காப்பாற்றவில்லை என்றாலும் இராமனிடம்  மரியாதை குறையவில்லை. இதுதான் நட்பின் இலக்கணம் என்று ஒரு சில உரையாசிரியர்கள் சொல்கின்றனர். அதே நேரம் சில உரையாசிரியர்கள் இதில் கிண்டல் தொனிக்கிறது. என்று சொல்கின்றனர். அதாவது இராமன் रघुबीर कृपाला வீரனாக இருந்தும், தயை நிறைந்தவனாக இருந்தானும், வாலி தன்னைத் தாக்கியபோது தனது வீரத்தையும் காட்டவில்லை தனது தயையையும் காட்டவில்லை என்று சுக்ரீவன் சொல்ல வருவதாக உரையாசிரியர்கள் சொல்கின்றனர்.

 

தொடரும்..............

 


No comments: