Thursday, July 2, 2026

  

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 145 

 

காலன் எல்லோரையும் வெற்றி கொள்கிறான். ஆனால் இராம இலக்ஷ்மணன் இருவரும் அந்தக் காலனையும் வெற்றி கொள்வர். அவர்களுக்கு முன்னால் நீங்கள் எம்மாத்திரம்? என்று தாரை வாலியை சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய வேண்டாம். அவனுக்குத் துணையாக இராமன் உள்ளான் என்று சொல்கிறாள்..

 

இங்கு कोसलेस सुत लछिमन रामा என்று கூறுகிறார் துளசிதாசர். அதாவது தாரைக்கு இராமன் மற்றும் இலக்ஷ்மண் இருவரும்  இறைவன் அவதாரம் என்று தெரிய வந்துள்ளது. அதாவது இங்கு இரண்டுவிதமான கதை சொல்லப்படுகிறது.

 

 

முன் ஜன்மத்தில் தசரதன் மனுவாக இருந்துள்ளார். கோசலை அவரது மனைவியான சதரூபா வாக இருந்து தவம் செய்து மகாவிஷ்ணு தங்களுக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என தவம் செய்து மகாவிஷ்ணு அவர்களின் அடுத்த பிறவியில் அவர்களது மகனாகப் பிறப்பதாக உறுதி அளித்தார். அதன்படி இராமன்  கோசலைக்கு மகனாகப் பிறந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

அடுத்து  காஷ்யப முனிவரும் இதுபோலத் தவம் செய்து மகாவிஷ்ணு தனக்கு மகனாகப் பிறக்கவேண்டும் என்று வேண்ட அவர்களுக்கும் कश्यप अदिति महातप कीन्हा ।तेहि के मै पूरब वर दीन्हा ।।ते दशरथ कौशल्या रूपा ।कौशलपुरी प्रकट नर भूपा ।। வாக்களித்தார். காஷ்யப முனிவரும் அவது மனைவியும் தசரதன் கோசலையாகப் பிறந்து  அவர்களுக்கு மகனாக இராமன் பிறந்தான் என்று சொல்லப்படுகிறது.

 

तिन्‍्ह के गृह अवतारिहाँ जाई। रघुकुलतिलक सो चारिउ भाई

 

இங்கு ஒரு கேள்வி எழலாம். துளசிதாசர் முதலில் இலக்ஷ்மணன் பெயரைக் குறிப்பிட்டு பிறகு இராமன் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர்.  இதற்கு உரையாசிரியர்கள் சொல்வதாவது போரில் முதல் சேவகர்கள் தான் செல்வர் பின்னால் தான் அரசன் வருவான். அதுபோல் இங்கு சேவகனான இலக்ஷ்மணன் பெயர் வந்துள்ளது பிறகு இராமன் பெயர் இடம் பெற்றுள்ளது.

 

 

தொடரும்..............


No comments: