துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 162
வாலியின் வினாக்கள்
இராமனின் அம்பு மார்பில் கீழே விழுந்த வாலி எழுத்து அமர்ந்தான். தனது எதிரில் நின்று கொண்டிருந்த தாமரைக் கண்களையுடைய இராமனைப் பார்த்தன். இடது கையில் வில்லும் வலது கையில் அம்புடன் நின்றிருந்தான் இராமன்.
துளசிதாசர், வாலி இராமனை 'पुनि पुनि” மீண்டும் மீண்டும் பார்த்தான் என்று சொல்கிறார். இராமச்சந்திர மூர்த்தியின் உருவம் மிக அழகானது. யாராலும் பார்க்காமல் இருக்கமுடியாது. அப்படி அழகான ரூபத்தைப் பார்த்து யோசிக்கிறான். “இவ்வளவு அழகான உருவம் கொண்டவரா இந்தச் செயலைச் செய்தார்? நிரபராதியான என்னை ஏன் அடித்தார்? தவறு இருந்தால் என்னைக் கூப்பிட்டுப் பேசி இருக்கலாமே? இந்த சுக்ரீவன் ஒரு கோழை. அவன் உதவுவான் என்று நம்பி இவர் அவனிடம் நட்பு பாராட்டியது ஏன்?” இப்படி நினைத்து நினைத்து இராமனை மீண்டும் மீண்டும் பார்க்கிறான் வாலி.. கடைசியில் இராமன் எது செய்தாலும் நல்லதே செய்வான் என்று வாலி ஆறுதலடைந்தான்.
=================================
हृदयँ प्रीति मुख बचन कठोरा। बोला चितइ राम की ओरा॥2॥
धर्म हेतु अवतरेहु गोसाईं। मारेहु मोहि ब्याध की नाईं॥
=================================
அவன் மனம் என்னவோ நிறைந்துதான் இருந்தது. ஆனால் அவன் வாய் கடுஞ்சொல் பேசிற்று. “அறம் காக்கப் பிறந்தவனே! என்னை ஓரூ வேடன் மிருகங்களை அடிப்பது போல (மறைந்திருந்து) அடித்தது ஏன்? இதனால் உனக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது? என்று தனது கேள்விக் கணைகளை வீச ஆரம்பித்தான்.
தொடரும்
No comments:
Post a Comment