Tuesday, July 14, 2026

 

 

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு 

 

பதிவு எண் 156

 

வாலியும் சுக்ரீவனும் கோரமான யுத்தத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்

हिय हारा भय मानि।““இனி வாலியிடம் மோத முடியாது என்று தெரிந்தவுடன் சுக்ரீவன்   இராமன் இருக்குமிடத்தை பயத்துடன் நோக்கினான். இதை வால்மீகியும் தனது இராமாயணத்தில் கூறியுள்ளார்.

 

हीयमानम् अथ अपश्यत् सुग्रीवम् वानरेश्वरम् |

प्रेक्षमाणम् दिशः च एव राघवः स मुहुर् मुहुर् || ४-१६-३१

ततो रामो महातेजा आर्तम् दृष्ट्वा हरीश्वरम् |

स शरम् वीक्षते वीरो वालिनो वध कांक्षया || ४-१६-३२

 

“बहु छल बल कारि हिय हारा।”  ஜீவனின் உடலில் பலம் இருக்கும் வரை இறைவன் அவனுக்கு உதவுவதில்லை. எப்போது தனது புருஷார்த்தையும் இழந்து நம்பிக்கை இழந்து இறைவனைச் சரணடைகிறானோ, அப்பொழுது இறைவன் அவனுக்கு உடனே உதவுவான்.

 

 

हृदय माँ सर वानि ஒரே பாணத்தால் வாலியைக் கொல்வேன் என்று உறுதி அளித்ததால் வில்லின் நாணை நன்றாக இழுத்துவிட்டான் இராமன் என்று சொல்கிறார் துளசிதாசர் . வாலியின் மார்பில் குறிவைத்து இராமன் அடித்தான் என்கிறார் துளசிதாசர். காரணம் அவன் இதயத்தில் அகங்காரம் இருந்தது. அதை வேரோடு எடுத்தால் தான் வாலிக்கு முக்தி கிடைக்கும்.. மேலும் வாலியை மறைந்து நின்று அடித்ததன் காரணம் வாலி தன்னைப் பார்த்தவுடன் வணங்கி சரணடைந்து விட்டால் இராமன் செய்த பிரதிஞ்ஞை என்னாவது? ஒரு சில உரையாசிரியர்கள் வாலிக்கும் சுக்ரீவனுக்கும் மல்யுத்தம் வெகு நேரமாக நடந்து கொண்டிருந்தது. அது வெயில் காலமாதலால் இராமனும் இலக்ஷ்மணனும் மரத்து நிழலில் மறைந்து நின்றனர் என்று சொல்கின்றனர்

 

தொடரும்

No comments: