அன்று சொன்னது...அர்த்தமுள்ளது....
பதிவு நான்கு
ஏகசக்ர நகரில் தாங்கள் தங்கி இருக்கும் பிராமணனுக்கு உதவுவதற்காக
பகன் என்ற அரக்கனிடம் தனது மகன் பீமன் செல்வான் என்று குந்தி சொன்னதை ஏற்க மறுத்த பிராமணனிடம்
குந்தி, "ஓ பிராமணரே! நானும் ஒரு பிராமணன்
எப்போதும் காக்கப்பட வேண்டும் என்று உறுதியான கருத்தையே வைத்திருக்கிறேன். பெரும் உடல் கொண்ட பல ராட்சசர்கள் எனது வீர
மகனிடம் மோதுவதை நான் கண்டிருக்கிறேன். இறுதியில் அவர்கள் எனது மகன் கையால்
கொல்லப்பட்டுள்ளனர் இந்த ராட்சசனால் எனது மகனைக் கொல்ல முடியாது. ஏனென்றால் எனது
மகன் பெரும் சக்தியும், ஆற்றலும் கொண்டவனாவான். அவனுக்கு
மந்திரங்களிலும் நிபுணத்துவம் உண்டு. அதனால், அவன் தன்னைக் காத்துக் கொள்வான்
என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியும்” என்று சொல்கிறாள்.
அதற்கு யுதிஷ்டிரன் “அன்னையே , மற்றவர்களுக்காக உனது சொந்த
மகனையே தியாகம் செய்ய ஏன் விரும்புகிறாய்?, பீமனின் கர வலிமையை நம்பியே நாம் இரவில் மகிழ்ச்சியுடன்
உறங்குகிறோம். திருதராஷ்டிரனின் தீய மகன்களிடம் இருந்து நாட்டை மீட்கும் காரியமும்
அவனை நம்பியே இருக்கிறது. எந்தப் பீமனின் பேராற்றலை நினைத்து
துரியோதனனும் சகுனியும் விழிதட்டாமல் இரவு முழுவதும் உறங்குவதில்லையோ, எந்தப் பீமன் நம்மை அரக்கு மாளிகை
அபாயத்திலிருந்து மீட்டானோ, அந்தப் பீமனின் ஆற்றலை நம்பியே, நாம் இன்னும் வாழ்ந்து
கொண்டிருக்கிறோம். நீ அவனைக் கைவிடுவதாக
முடிவு செய்துவிட்டாயா? நீ உன் சுயநினைவை இழந்து விட்டாயா?” என்று வருத்தப்படுகிறான்.
குந்தி, "ஓ யுதிஷ்டிரா, பீமனைக் குறித்து நீ வருத்தப்படாதே. எனது புத்தியின் பலவீனத்தால் நான்
இந்த முடிவை எடுக்கவில்லை. திருதராஷ்டிரன் மகன்களுக்குத்
தெரியாமல் நாம் இந்த பிராமணரின் இல்லத்தில் கவலையில்லாமல் வாழ்ந்து வருகிறோம்.
அவரும் நம்மைப் பெரிதும் மதிக்கிறார். அதற்குக் கைம்மாறாக இதைச் செய்யத்
தீர்மானித்தேன்.
நான் முட்டாள்தனமாகவோ, அறியாமையாலோ அல்லது ஏதேனும் லாப
நோக்கத்தோடோ இப்படிச் செயல்படவில்லை. அறச்செயல் செய்வதற்காகவே இந்த முடிவை வலிந்து
எடுத்தேன். இச்செயலால் இரு காரியங்கள் சாதிக்கப்படும்; ஒன்று பிராமணனுக்கான
செய்ந்நன்றியைச் செய்வது, மற்றொன்று உயர்ந்த அறத்தகுதியை
அடைவது
தனது தாயின் வார்த்தைகளைக் கேட்து சமாதனமடைந்த யுதிஷ்டிரன், "அன்னையே , துயருற்ற பிராமணன் மீது
இரக்கப்பட்டு, நீ வலிந்து செய்த காரியம் நிச்சயமாக சிறப்பானதேயாகும்” என்று
சொல்கிறான்.
ஆக குந்தி இந்த விஷயத்தில் நல்லவர்களை காக்க தீயவர்களை
அழிப்பது ராஜ தர்மம் என்ற நிலைப்பாட்டை எடுக்கிறாள். அவளும் ஹஸ்தினாபுரத்து
முன்னாள் அரசிதானே,
இதே போன்று விஷயத்தில் சீதை என்ன நிலைப்பாட்டை எடுக்கிறாள்
என்று நாளை பார்ப்போம்.
No comments:
Post a Comment