Wednesday, July 22, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 164

 

இராமனின் அம்பால் தாக்கப்பட்டு வீழ்ந்த இராமனிடம் வாலி  வீசும் கேள்விக் கணைகளின் தொடர்ச்சி.........

 

வால்மீகி ராமாயணம்:

 

त्वया नाथेन काकुत्स्थ सनाथा वसुंधरा |

प्रमदा शील संपूर्णा पति एव विधर्मिणा || -१७-४२

छिन्न चारित्र्य कक्ष्येण सताम् धर्म अतिवर्तिना |

त्यक्त धर्म अंकुशेन अहम् निहतो राम हस्तिना || -१७-४४

अशुभम् अपि अयुक्तम् सताम् एव विगर्हितम् |

वक्ष्यसे ईदृशम् कृत्वा सद्भिः सह समागतः || -१७-४५

अयुक्तम् यद् अधर्मेण त्वया अहम् निहतो रणे || -१७-५२

 

காகுத்ஸ்தா,! உன்னை நாதனாக அடைந்த வசுந்தரை {பூமி}, தர்மப்பதியில்லாத {அறத்துடன் கூடிய கணவனில்லாத} சம்பூர்ண சீலமுடைய {நல்லொழுக்கம் நிறைந்த} பெண்ணைப் போல, நாதனற்றவளாக இருக்கிறாள் நன்னடத்தையெனும் சங்கிலியை நொறுக்கி, நல்லோரின் தர்மவரம்புகளை மீறி, தர்மத்தின் அங்குசத்தை விலக்கிவிட்ட {பாகனை மீறிய} இராமன் எனும் ஹஸ்தியால் {யானையால்} நான் கொல்லப்பட்டேன் நல்லோரால் நிந்திக்கப்படும் இவ்வகை செயலைச் செய்துவிட்டு, நல்லோருடன் கூடும்போது {நல்லோரைச் சந்திக்கும்போது} இஃது அசுபமானது, யுக்தமன்று {தகுதியற்றது} என்று சொல்வாயா?(நான் ரணத்தில் உன்னால் அதர்மமாகக் கொல்லப்பட்டதோ யுக்தமன்று {பொருத்தமற்றது / அநியாயமாகும்}.


தொடரும் 

 


No comments: