துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 169
நேற்றைய
தொடர்ச்சி
வால்மீகி மீண்டும் சொல்கிறார். அதாவது இராமன். “நான் க்ஷத்ரிய வம்சமத்திலிருந்து
வந்தவன். தவறுகளைப் பொறுத்துக் கொள்ள மாட்டேன். தனது மகளையோ, சகோதரியையோ,
தம்பியின் மனைவியையோ எவன் காமக் கண்ணோட்டத்தில் பார்க்கிறானோ அவன்
அழிக்கப்படவேண்டியவன்” சொவதாக வால்மீகி
சொல்கிறார்.
“यथा माता च भगिनी भ्रातृपत्ती तथा सुता।
एता: कुदृष्टदा द्रष्टव्या न कदापि विपश्चिता॥
தாயையும், சகோதரியையும், சகோதர மனைவியையும், மகளையும். "இவர்களை
அறிவுள்ளவர்கள் தவறான பார்வையால் (காமக் கண்ணால்) எப்போதும்
பார்க்கக் கூடாது."
தர்மத்தின்
அடிப்படை: இந்த ஸ்லோகம்,
வாலியின் செயல்
தர்ம விரோதம், எனவே இராமனின் செயல் தர்ம நியாயம். இது "தர்மத்திற்கு எதிரானவனைத்
தண்டிப்பது தர்மமே" என்று கற்பிக்கிறது.
துளசிதாசர் இங்கு सुनु सठ कन्या सम ए चारी” அதாவது சகோதரனின்
மனைவி, சகோதரி, அண்ணி, சகோதரியின் மருமகள் இவர்கள் எல்லோரையும் மகள் ஸ்தானத்தில்
வைத்துப் பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். தவறான கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள் கண்டிப்பக்கத்
தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.
தம்பியின்
மனைவி யைத்தான் தருமமோ தொடுவ தும்சொல்
வம்பான
வார்த்தை சொன்னாய் வரும்வினை தன்னை நோக்காய்
௮ம்பிற்கோ
தண்ட மேந்தி யடவியை யாள வேவி
தம்பியாம்
பரதன் எற்குத் தந்ததா லடித்தேன் கண்டாய்
(அமிர்த
இராமாயணம்)
சுக்ரீவன் உனது
தம்பியாகையால் அவன் உனது மகனாவான். அவனது மனைவி உனது மருமகளாகிறாள். ஆனால்
சுக்ரீவன் உயிரோடு இருக்கையில் நீ பாவ காரியஞ் செய்ய முயன்று அவனது மனைவியான
ரூமையை நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். ஆக நீ தர்மத்தைப் புறக்கணித்து உனது
மனம் போனபடியெல்லாம் நடந்து கொண்டு, உனது தம்பியின் மனைவியை அனுபவித்து உனது
காமத்தைப் பூர்த்தி செய்து கொள்ள விழைந்த குற்றத்திற்காக இந்தத் தண்டனை
வழங்கப்பட்டுள்ளது”. என்றான் இராமன்.
ஆனால் வாலியால் இராமனின் பதிலுக்குப் பதில்
சொல்ல முடியவில்லை.
தொடரும்
No comments:
Post a Comment