துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 147
நேற்றைய தொடர்ச்சி..............
சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய கிளம்பிய வாலியிடம் தாரை சுக்ரீவனுக்கு துணையாக
இராமன் இருப்பதாக சொன்னவுடன் வாலி இராமன் அவ்வாறு செய்யமாட்டான் என்று சொல்வதின்
தொடர்ச்சி ..........
ஆத்யாத்ம இராமாயணத்திலும் கிட்டத்தட்ட இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது.
तामालिङ्ग्य तदा वाली सस्नेहमिदमब्रवीत् ॥ ३३॥
स्त्रीस्वभावाद्बिभेषि त्वं प्रिये नास्ति भयं
मम ।
रामो यदि समायातो लक्ष्मणेन समं प्रभुः ॥ ३४॥
तदा रामेण मे स्नेहो भविष्यति न संशयः ।
रामो नारायणः साक्षादवतीर्णोऽखिलप्रभुः ॥ ३५॥
भूभारहरणार्थाय श्रुतं पूर्वं मयानघे ।
स्वपक्षः परपक्षो वा नास्ति तस्य परात्मनः ॥
३६॥
तस्माच्छोकं परित्यज्य तिष्ठ सुन्दरि वेश्मनि
இங்கு भीरु என்ற பதப் பிரயோகம் போடுகிறார் துளசிதாசர். அந்த
வார்த்தையின் பொருள் கோழை. வாலி, உனக்கு பெண்மைக்குரிய இயல்பான பயம் உள்ளது स्त्रीस्वभावाद् बिभेषि 'त्वम् என்றும் தனக்கு नास्ति भयं मम' எந்தவித பயமும் இல்லை
என்பதை பீரு என்ற ஒரு வார்த்தையில் நமக்கு உணர்த்தி விடுகிறார் துளசிதாசர்.
இங்கு तौ पुनि होब सनाथ' என்ற பதங்களுக்கு தீன்ஜி என்ற உரையாசிரியர்
புதுவித விளக்கம் கொடுக்கிறார். அதாவது நீ மீண்டும் கணவனுடன் சேர்ந்து விடுவாய்? என்று
வாலி சொல்வதாக உரையாசிரியர்
தெரிவிக்கிறார் அதாவது அது எப்படி சாத்தியமாகும். வாலி தாரையிடம் “உனக்கு யுத்தம்
வந்தால் நான் கொல்லப்படுவேன். நீ விதவை ஆகிவிடுவாய் என்ற பயம்தானே. ஆனால் அப்படி
இல்லை. நீ பஞ்சகன்யாக்களில் ஒருவள். ஆகையால் நீ மீண்டும் திருமணம் செய்து கொண்டு
சுமங்கலி ஆகிவிடுவாய். இதனால் நீ கவலை கொள்ளவேண்டாம்.” என்று சொல்வதாக எடுத்துக்
கொள்ளவேண்டும். அப்படி இல்லை என்றால் அந்த पुनि என்ற வார்த்தைக்கு பொருளே கிடையாது என்று
உரையாசிரியார் தெரிவிக்கிறார்.
தொடரும்..............
No comments:
Post a Comment