அன்று சொன்னது.....அர்த்தமுள்ளது......
பதிவு மூன்று.
ஏகசக்ர நகரத்தில் அந்தணர்களாக மாறுவேடத்தில், ஒரு அந்தணர் வீட்டில்
தங்கியிருந்தனர் பாண்டவர்களும் அவர்களின்
தாயார் குந்தியும். ஒரு நாள் பீமனும்
குந்தியும் மட்டும் இருந்தபோது,வீட்டினுள் அழுகுரல் கேட்டது. அதற்கான காரணத்தை
குந்தி கேட்க, முதலில் சொல்ல மறுத்த அந்த பிராமணன், பிறகு துயரத்துக்கான காரணத்தைச்
சொல்ல ஆரம்பித்தான்.
‘தாயே இங்கு அருகில் யமுனை நதிக்கருகே, பகன் என்று ஒரு ராட்சசன் வசித்துவருகிறான்.
மனிதர்களைக் கொன்று உண்பவன். தினமும் ஊருக்குள் வந்து எல்லோரையும் அடித்து கொன்று
தின்று கொண்டிருந்தான். கடைசியில் ஒரு உடன்படிக்கைக்கு வந்தான். அதன்படி, தினம்
இரு எருமைகள் பூட்டிய வண்டியில் சமைத்த உணவுடன் அதை கொண்டு செல்ல ஒருவனுடன்
அனுப்பவேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் பல ஆண்டுகளுக்கொருமுறை மீண்டும் இந்த முறை
வரும். இன்று முதன்முதலாக எனது வீட்டுமுறை. ஆதலால் யார் சமைத்த உணவுடன் அங்கு செல்வது என்ற
கவலை. செல்லாவிட்டால் பகன் மிகுந்த கோபப்படுவான். வசதி உள்ளவர்கள் பணம் கொடுத்து எடுத்து
செல்ல ஒருவனை விலைக்கு வாங்கிவிடுவர். நான் ஏழை. மிகச்சிறு குழந்தைகள். இவர்களை
விட்டு என்னால் செல்லவும் முடியாது. என்ன
செய்வது என்று தெரியவில்லை” என்றான்.
குந்தியோ ‘கவலை படாதீர்கள். எனக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். அதில்
ஒருவனான பீமன் வண்டியுடன் செல்வான்” என்றதும். அந்த பிராமணன் "என் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, ஒருபோதும் நான் இந்தக் காரியத்தைச்
செய்ய மாட்டேன். எனது வாழ்வுக்காக, ஒரு
பிராமணனின் உயிரையோ அல்லது ஒரு விருந்தாளியின் உயிரையோ நான் துறக்க மாட்டேன். ஒரு பிராமணனின் நன்மைக்காக, ஒருவன் தன்னையோ அல்லது தனது வாரிசையோ
தியாகம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது. நான் அந்த அருமையான அறிவுரையை மதித்து
நடக்க விரும்புகிறேன். ஒரு பிராமணனின் மரணமா? அல்லது எனது மரணமா? என்று வரும்போது நான் பின்னதையே தேர்ந்தெடுப்பேன்.
“பிராமணனைக் கொல்வது என்பது பாவத்திலேயே பெரும் பாவமாகும், அதற்கு விமோசனமே இல்லை. ஒரு பிராமணனின்
உயிர்த்தியாகத்தைவிட, ஒருவன்
தன்னைத் தியாகம் செய்து கொள்வதே சிறந்தது என்று நான் நினைக்கிறேன். தாயே, நான் என்னைத் தியாகம் செய்வதால், தற்கொலை செய்யும் குற்றவாளி ஆக
மாட்டேன். இன்னொருவன் எனது உயிரை எடுக்கும்போது, எந்தப் பாவமும் என்னைப் பற்ற முடியாது. ஆனால் தெரிந்தே நான் ஒரு பிராமணனை
மரணத்திற்கு அனுப்பினேன் என்றால், அந்தக்
கொடிய பாவகரச் செயலில் இருந்து நான் எப்போதும் தப்ப முடியாது. தனது வீடு தேடி வந்தவரையோ, தன்னிடம் தஞ்சமடைந்தவர்களையோ
கைவிடுவதும், தன்னிடம்
மரணம் வேண்டுபவனைக் கொல்வதும் கொடூரமான பாவகரச் செயல்களாகும் என்று கல்விமான்கள்
கூறியிருக்கிறார்கள்.ஆதலால் நான் இதற்க்குச் சம்மதிக்கமாட்டேன்”
பிறகு என்ன நடந்தது.....
ஒரு நாள் பொறுத்திருங்கள்.
No comments:
Post a Comment