துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
நேற்றைய
தொடர்ச்சி
अनुज बधू भगिनी सुत नारी। सुनु सठ कन्या सम ए चारी॥
इन्हहि कुदृष्टि बिलोकइ जोई। ताहि बधें कछु पाप न होई॥4॥
இராமன் கூறினான் “ஏ மூடனே!
கேள். தம்பியின் மனைவி, சகோதரி, புதல்வனின் மனைவி மற்றும் மகள் ஆகிய நால்வரும்
ஒன்றே. இவர்களைத் தவறானக் கண்ணோட்டத்தில் எவன் பார்க்கிறானோ அவனைக் கொல்வது பாவம்
அல்ல”. தம்பியே மகனுக்குச் சமம்” என்று சொல்கிறார் வால்மீகி.
यवीयान् आत्मनः पुत्रः शिष्यः च अपि गुणोदितः |
पुत्रवत् ते त्रयः चिंत्या धर्मः चैव अत्र
कारणम् || ४-१८-१४
துளசிதாசர் முதலில் अनुज बधू தம்பியின் மனைவி
என்று ஆரம்பிக்கிறார். காரணம் இங்கு வாலி தனது தம்பி சுக்ரீவனின் மனைவியை அபகரித்ததுவிட்டான்.
வாலியின் முதல் தவறு இது என்று சொல்கிறார்.
வாலிக்கு ஏன் தண்டனை கிடைத்தது? துளசிதாசர் कुदृष्टि बिलोकइ தனது தம்பியின் மனைவியை தவறான
கண்ணோட்டத்தில் பார்த்ததால் மட்டுமல்ல அவளை உனது மனைவியாக்கி கொண்டாய் அதனால் தண்டனை என்கிறார்
இதையே தான் வால்மீகி இராமயனாத்திலும்
சொல்லப்படுகிறது
तत् एतत् कारणम् पश्य यत् अर्थम् त्वम् मया हतः |
भ्रातुर् वर्तसि भार्यायाम् त्यक्त्वा धर्मम्
सनातनम् || ४-१८-१८
எதற்காக நான்
உன்னைக் கொன்றேனோ அந்தக் காரணத்தைச் சொல்கிறேன். கேட்பாயாக. நீ சனாதனமான
தர்மத்தைக் கைவிட்டு உனது தம்பியான சுக்ரீவனின் மனைவியை அபகரித்து அனுபவித்துக்
கொண்டிருக்கிறாய், இந்த மஹாபாவமே நான் உன்னைத் தண்டித்ததற்கு காரணம்”
தொடரும்
No comments:
Post a Comment