Thursday, July 16, 2026

 

துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

  

பதிவு எண் 158

 

நேற்றைய தொடர்ச்சி..........

  

சுக்ரீவனுக்கும் வலிக்கும் நடந்த யுத்தத்தில்  வாலியின் மார்பில் பாணத்தைச் செலுத்தினான் இராமன்.

 

இராமனின் அம்பு மார்பில் பட்டும் வாலி எழுத்து அமர்ந்தான் என்கிறார் துளசிதாசர். காரணம் देखि प्रभु आगे  தனக்கு முன் இராமன் நிற்கக் கண்டான் என்கிறார். இராமன் நினைத்திருந்தால் வாலியைக் கொன்றுவிட்டு அப்படியே சென்று இருக்கலாம். ஆயினும் அவனுக்கும் தரிசனம் தரவேண்டும் என்பதற்காகவே அவன் முன் வந்து நின்றான். இதைத்தான் வால்மீகியும் சொல்கிறார். 

बहुमान्य

चतं वीर वीक्षमाणं शनैरिव। उपयातौ महावीयों भ्रातरौ रामलक्ष्मणौ ॥

==== 

स्थाम

 गात सिर जटा बनाएँ। अरुन नयन सर चाप चढ़ाएँ॥1

पुनि पुनि चितइ चरन चित दीन्हा। सुफल जन्म माना प्रभु चीन्हा॥

 

கருமை நிறம். தலையில் ஜடை. சிவந்த கண்கள், நாணேற்றிய  வில், வாலி மீண்டும் மீண்டும் இராமனைப் பார்த்தபடியே தன் மனதினை அவருடைய திருவடிகளில் பதித்தான். “இவன் என் பிரபுதான்” என்ற எண்ணம் மேலிட “ என் ஜன்மம் கடைந்தேறியது” என்று பெரு மகிழ்ச்சியுற்று  அவன் மன நிறைவு பெற்றான்.

 

இராமனின் தோற்றத்தை மிகச் சுருக்கமாக स्थाम गात सिर जटा என்று சொல்லிவிட்டார். வாலி இராமனைப் பார்த்த விவரத்தை ஆத்யாத்ம இராமாயணத்தில்

 

“ அப்போது வாலி தனது எதிரில் நின்று கொண்டிருந்த தாமரைக் கண்களையுடைய இராமனைப் பார்த்தன். இடது கையில் வில்லும் வலது கையில் அம்புடன் நின்றிருந்தான் இராமன்.”

  

ततो वाली ददर्शाग्रे रामं राजीवलोचनम् ।

धनुरालम्ब्य वामेन हस्तेनान्येन सायकम् ॥

पीनचार्वायतभूजं नवदूर्वादलच्छविम् ।

सुग्रीवलक्ष्मणाभ्यां च पार्श्वयोः परिसेवितम् ॥

 

தாமரை கண் கொண்ட திருமால் தோன்ற,

வில்லும் அம்பும் ஏந்தி நின்றான் முன்புறம்.

பசுமை இலை போல ஒளிர்ந்த நெஞ்சழகன்,

சுக்ரீவன், லட்சுமணன் சூழ்ந்த நாயகன்.

 

கண்டவுடன் வாலி நெஞ்சம் திகைத்ததே,

இவன் மனிதன் அல்ல, தெய்வம்என உணர்ந்ததே.

அருள், வலிமை, அழகு, வீரத்தின் உருவாய்,

ராமன் நின்றான் அந்தப் போர் நொடியில் பெருமையாய். 

 

 

 

தொடரும்


No comments: