துளசிதாசரின்
கிஷ்கிந்தா காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 172
நேற்றைய தொடர்ச்சி
வாளாசிரியர் அங்கிருந்தோர் அனைவருக்கும் கேட்கும்படி “உன் குருவின்மனைவியை
விரும்பிய உள்ளத்தையும், தகாதவார்த்தை பேசிய
நாவினையும், தொட்ட கைகளையும், கெட்ட எண்ணத்தோடு
பார்த்த கண்களையும் காத்துக்கொள்” என்று கூறினார்.பின்னர் சித்தனுடைய அங்கங்கள் ஒவ்வொன்றையும் வெட்டி
வீழ்த்தினார். பின்னர் அவ்விடத்திலிருந்து மறைந்தார்.
தங்களுடைய ஆசிரியரைக் காணாது வாளாசிரியரின் மாணவர்கள் திகைத்தனர்.
தங்களுடைய ஆசிரியரைத் தேடி அவருடைய இல்லத்திற்கு சென்றனர்.வாளாசிரியருக்கும்,
மாணிக்க மாலைக்கும் கிடைத்த சிறப்பு
அப்போது வாளாசிரியர் மாணிக்க மாலையின் துயரினைப் போக்க சோமசுந்தரர் தனது
உருவம் தாங்கி வந்து சித்தனைக் கொன்றாதக் கூறினார்.
இந்நிகழ்ச்சியைக் கேள்விப்பட்ட குலோத்துங்க பாண்டியன் இறைவனின் திருவருளைப்
பெற்ற அத்தம்பதியினரை வணங்கி யானையின் மீது ஏற்றி ஊர்வலம் வரச் செய்து பொன்னும்
பொருளும் வழங்கினான். இந்த நிகழ்வை கமலை வல்லியம்பலவாண முனிவர் தனது முதுமொழிமேல்
வைப்பு என்ற நூலில் ஒரே பாடலில் சொல்லிவிட்டார்.
தையலார் கற்பழியச்
சார்வானை மாமதுரைத்
தெய்வமே சென்றொறுக்குஞ்
செய்தியால் - நொய்தின்
மறந்தும் பிறன்கேடு
சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன்
கேடு.
தொடரும்
No comments:
Post a Comment