Tuesday, July 7, 2026

 


துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 150

 

தாரை தடுத்தும் கேளாமல் வாலி சுக்ரீவனுடன் யுத்தம் செய்ய புறப்பட்டுச் சென்றான்.

 

இருவரும் மலையென மோதினர். வாலி சுக்ரீவனை மிகவும் அச்சுறுத்திய படியே தன் கை முஷ்டியினால் ஓங்கு ஓரூ குத்துவிட்டுப் பலமாகக் கர்ஜித்தான்.

  

 

तब सुग्रीव बिकल होइ भागा। मुष्टि प्रहार बज्र सम लागा॥

मैं जो कहा रघुबीर कृपाला। बंधु होइ मोर यह काला॥2

  

வலி பொறுக்கமுடியாமல் சுக்ரீவன் தப்பி ஓடினான். அவன் ஓடிவந்து இராமனைச் சரண் அடைந்து “இரகுவீரரே! நான் முன்பே சொல்ல வில்லையா? இந்த வாலி எனது அண்ணன் இல்லை. என்னைக் கொல்லவந்த எமன்.” என்றான்..

 

சுக்ரீவனால் வாலி விட்ட ஒரு குத்தைக் கூட தாங்க முடியவில்லை., அது இடியைப் போல இருந்தது. இடி என்பது இந்திரனின் ஆயுதம். வாலி இந்திரனின் அம்சம். ஆதலால் சுக்ரீவனால் அதைத் தாங்க முடியவில்லை. அங்கு நின்றால் மீண்டும் தாக்குவான் என்று பயந்து இராமனிடம் ஓடினான். இராமனிடம் சென்று “தாங்கள் வாலியை ஒரே பாணத்தால் கொல்வதாக  வாக்களித்தீர்கள் . ஆனால் வாலி இப்படி பயங்கரமாகத் தாக்கியும் தங்கள் ஏதும் செய்யாமல் பேசாமல் நிற்கிறீர்களே?” என்றான். அதற்கு இராமன் “சுக்ரீவா! நீ இன்னும் உனது சகோதரனுடன்  யுத்தம் புரிய ஆரம்பிக்கவே இல்லையே” என்றான். உடனே சுக்ரீவன் “என்னை புடைத்து எடுக்கும் இவனா சகோதரன். இவன் காலன். தாங்கள் தான் அருள் புரிய வேண்டும்” என்றான்.

 

சுக்ரீவன் முதன் முதலில் இராமனைக் கண்டதும் வாலியைப் பற்றிச் சொல்லி வாலி எனது முதல் எதிரி. அவன் கொல்லப்படவேண்டியவன் என்றான். இராமனும் அவனது கதையைக் கேட்டபின் வாலியை ஒரே பாணத்தினால் கொலவேன் என்று உறுதி அளித்தான். ஆனால் இராமன் வாக்குறுதி அளித்ததும் எனக்கு ஞானம் பிறந்து விட்டது. எனக்கு சொத்து, சுகம் எதுவும் தேவை இல்லை. தங்களின் அன்பு கிடைத்ததே பெரும் பாக்கியம். இத்தைகையே சந்தர்ப்பம் எனக்கு வாலியால் கிடைத்தது. வாலி எனக்கு நன்மையே செய்துள்ளான். எனக்கு தங்களிடம் வேறு ஒன்றும் தேவை இல்லை. தங்கள்  நினைவுடனே எப்போதும் இருக்கவேண்டும் அதுவே போதும் என்றான். வாலி எதிரி என்றவன் திடீரென்று அவன் எனக்கு நன்மைகள் செய்தான் என்று சொல்லி வானர இனத்துக்குரியச் சஞ்சலப் புத்தியை வெளிப்படுத்தினான்.

 

தொடரும்..............


No comments: