Monday, July 6, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

 

பதிவு எண் 149

 

நேற்றைய தொடர்ச்சி........... 

 

தாரை என்னைத் தடுத்தும் இராமன்  கையால் மரணம் வேண்டியே சுக்ரீவனுடன் யுத்தம் செய்தேன் என்று சொல்கிறான் வாலி . தாரை சொல்லியும் கேளாமல் அவன் யுத்தம் செய்ய ஓடி வந்தான். காரணம் அவன் கோபத்தின் பிடியில் இருந்தான்.

  

क्रोधिहि सम कामिहि हरिकथा। ऊसर बीज बएँ फल जथा

 

கோபத்தில் இருப்பவனிடம் அமைதியைப் பற்றிப் பேசுவதும் காமாந்தகாரனிடம் இறைவனைப் பற்றிப் பேசுவதும், களை விதைகளை விதைப்பதற்குச் சமம்.. அதைப் போல தாரை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேளாமல் வாலி சுக்ரீவனை अस कहि चला महा अभिमानी। तृन समान सुग्रीवहि जानी॥ ஒரு துரும்பென மதித்து யுத்தத்திற்குச் சென்றான்.

 

'तदा हि तारा हितमेव वाक्यं त॑

वालिनं पथ्यमिदं बभाषे। न रोचते तद्बबयनं

हि तस्यथ कालाभिपननस्यथ विनाशकाले॥'

 

தாரை எவ்வளவு எடுத்துச் சொல்லியும் வாலி அதைப் பொருட்படுத்தவில்லை. காரணம் அவன் அழியும் காலம் நெருங்கி விட்டது மரணத்தில் நிழல் அவன்மீது விழத் தொடங்கி விட்டது.

  

अस कहि चला महा अभिमानी। तृन समान सुग्रीवहि जानी॥

भिरे उभौ बाली अति तर्जा। मुठिका मारि महाधुनि गर्जा॥1

 

இங்கு अस कहि चला  இவ்வாறு சொல்லிவிட்டு நடந்தான் என்று சொல்கிறார். அதாவது வாலி மரணத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளான். ஆனால்  சுக்ரீவனின் அறைகூவலை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. முதலில் 'सुनत बालि क्रोधातुर धावा  என்று சொன்னார் துளசிதாசர். சுக்ரீவனின் கர்ஜனையைக் கேட்டு கோபத்துடன் ஓடினான் என்று சொன்னவர் இப்போது நடந்தான் என்று சொல்கிறார். காரணம் தாரையின் அறிவுரைகள் தான். தாரை அவனுக்கு அறிவுறுத்தியதும் கோபம் குறைந்து  நடந்தான் என்கிறார்.

 

தாரை வானரங்களின் தலைவன் சுஷேணன் என்பவனின் மகள். எதிர்காலத்தைப் பார்க்கவும், வரவிருக்கும் நிகழ்வுகளை முன்கூட்டியே அறிந்து சொல்லும் மாய சக்தி தாரையிடம் இருந்தது, மேலும் ஆபத்து நிகழும் முன்பே அதனைத் தெரிந்து கொள்ளும் ஆறாம் அறிவு அவளிடம் இருந்தது, அவளுடைய வார்த்தைகள் ஒரு போதும் பயனற்றவை அல்ல. அவளுடைய ஞானமும், பகுப்பாய்வுத்  திறனும் எல்லோராலும் பாராட்டுப் பெற்றவை,  அவளுடைய வார்த்தைகளைக் கேட்காததால் தான் வாலி அவனது முடிவைச் சந்தித்தான்.

 

தொடரும்..............

 

 


No comments: