Sunday, March 1, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

பதிவு எண் 33

நேற்றைய தொடர்ச்சி

ஹனுமானைப் பற்றி விரிவாகப் பார்த்து விட்டோம். மீண்டும் துளசிதாசரிடம் வருவோம்

ஹனுமான் சுக்ரீவன் உரையாடல்

தூரத்திலிருந்து இராம இலக்ஷ்மணர்கள் இருவரையும் பார்த்துப் பயந்த சுக்ரீவன் ஹனுமனிடம் கூறுகிறான். “ஏ! ஹனுமனே! வருகின்ற இந்த இரண்டு மனிதர்களும் வலிமைக்கும் அழகிய வடிவத்திற்கும் இருப்பிடமாகக் காணப்படுகின்றனர். நீ ஒரு பிரம்மச்சாரியாக வடிவெடுத்து அங்கு சென்று கவனி. அவர்கள் யார் என்று அறிந்து அங்கிருந்தே சைகை செய்து எனக்கு அறிவிப்பாயாக.. இதையே வால்மீகியும் கூறுகிறார்.. அதாவது வால்மீகி ஹனுமனை ஒரு அந்தண யாசகனாக சென்றதாகச் சொல்கிறார்.

तौ त्वया प्राकृतेनैव गत्वा ज्ञेयौ प्लवङ्गम।

इङ्गितानां प्रकारैश्च रूपव्याभाषणेन च4.2.24।।

लक्षयस्व तयोर्भावं प्रहृष्टमनसौ यदि।

विश्वासयन्प्रशंसाभिरिङ्गितैश्च पुनः पुनः4.2.25।।

ममैवाभिमुखं स्थित्वा पृच्छ त्वं हरिपुङ्गव ।

प्रयोजनं प्रवेशस्य वनस्यास्य धनुर्धरौ4.2.26।।

शुद्ध आत्मानौ यदि एतौ जानीहि त्वम् प्लवंगम |

व्याभाषितैः वा रूपैः वा विज्ञेया दुष्टता अनयोः || ४-२-२७

 

ஆத்யாத்ம இராமாயணத்தில் ஹனுமன் ஒரு பிராமண பாலகனாக அனுப்பப்பட்டதாகச் சொல்லியுள்ளனர்.


------------

तथेति वटुरूपेण हनुमान् समुपागतः ।

विनयावनतो भूत्वा रामं नत्वेदमब्रवीत्

-------------

அப்படி அனுப்புவதன் நோக்கம் என்ன?



----------------

மால்வரைச் சாரல் மறைவில்நின் றஞ்சியவன்

வாலியின் வேட்டையென வாடி —

நீலமதி சூடி நெடுவில் ஏந்தியரை

யார் கொலோ? என்மனம் யாத்தான்.

-------

“வேடமொரு தாங்கி விரைவுடனே போய்

நாடி வருக” என நயந்தான் —

ஓதநயம் சூழ் உயர்பிரமச் சாரியைத்

தூதனாகத் தேர்ந்தெடுத்தான்.


------------

வில்லினொடு நின்ற விருந்தினர் தன்மையை

சொல்லறிந்து காணும் துணிவால் —

சீதைக்கேள்வன் சேவடி சேர்ந்திட

நல்லின்ப நட்பை நாடினான்.



தொடரும்

No comments: