துளசிதாசரின்
கிஷ்கிந்தா
காண்டம்.
ஓர் ஆய்வு
பதிவு எண் 62
நேற்றைய தொடர்ச்சி
ஹனுமன் தனக்கு ஒன்றுமே தெரியாது,
ஞானமில்லாதவன். எனது தலைவனை மட்டும் நம்பி இருக்கிறேன் என்று சொல்கிறான். அதாவது
எனக்கு இறைவனை விட்டால் வேறு யாரையும் தெரியாது. வேறு பாதையும் இல்லை என்று அந்த
நாராயணனிடம் சரண் அடைகிறான். அதாவது சர்ரனாகதி தத்துவத்தில் இது முதல் அம்சம். .
அப்படியானால் சரணாகதி தத்துவத்தின் அந்த ஆறு அங்கங்கள் என்ன?
अनुकूलस्य संकल्पः प्रतिकूलस्य वर्जनम् ।
रक्षिष्यतीति विश्वासो गोप्तृत्वे वरणं तथा ।
आत्मनिक्षेपकार्पण्ये षड्विधा शरणागति:
இந்த சுலோகம் ஹரி-பக்தி-விலாஸம் (என்ற
வைஷ்ணவக் கிரந்தத்தில் இருந்து வருகிறது, இது
ஸ்ரீ சனாதன கோஸ்வாமி அவர்கள் எழுதியது. இதில் ஷட்விதா சரணாகதி — பகவானிடம் சரணாகதியாக இருப்பதற்கான ஆறு முக்கிய அம்சங்கள்
விளக்கப்படுகின்றன.
சரணாகதி – ஆறு அம்சங்கள்
1. அனுகூலஸ்ய ஸங்கல்பः –
நன்மைக்கே மனதளவில் ஒப்புதல்
பகவானுக்கு ஏற்ற, தர்மத்துக்கு ஏற்ற, பக்திக்கு ஏற்ற
செயல்களை மனதாலும், செய்கையாலும் ஏற்கும் மனநிலை.
-உதாரணம்: ஜபம், பஜனம், தர்மம், பக்தி, சேவை.
“நான் பகவானுக்கே உகந்ததைச் செய்கிறேன்”
என்ற மனநிலை.
2. ப்ரதிகூலஸ்ய வர்ஜனம் –
தர்மத்துக்கு எதிரானதைத் தவிர்த்தல்
-பக்திக்கு விரோதமான, தர்மத்துக்கு எதிரான, மாயை சார்ந்த
செயல்களை முழுமையாக விலக்குதல்.
-உதாரணம்: அகங்காரம், ஆசை, பொய், வன்மம்.
“பகவானுக்கு விரோதமானதை நான் செய்ய
மாட்டேன்” என்ற உறுதி.
3. ரக்ஷிஷ்யதீதி விஸ்வாஸ: –
பகவான் என்னை பாதுகாப்பார் என்ற நம்பிக்கை
-எந்த சூழ்நிலையிலும், பகவான் என் பாதுகாவலர் என்ற உறுதியான நம்பிக்கை.
-இது பக்தியின் ஆதார நம்பிக்கை.
“என்னை யாரும் காப்பாற்ற முடியாது;
பகவானே என் காப்பாளர்”.
தொடரும்
No comments:
Post a Comment