Saturday, March 7, 2026

 



துளசிதாசரின்

கிஷ்கிந்தா காண்டம்.

ஓர் ஆய்வு

 

பதிவு எண் 39

 

நேற்றைய தொடர்ச்சி

 

அந்தணர் வேடத்தில் இருக்கும் ஹனுமன் இப்படி க்ஷத்ரியர்கள் காலில் விழுந்து வாங்கலாமா?  என்ற கேள்விக்கான  பதிலின் தொடர்ச்சி...........

 

வால்மீகி இராமாயணத்தில்


 ==========

'विनीतवदुपागम्य राघवौ प्रणिपत्य च।

==========

 

என்றும், ஆனந்த இராமாயணத்தில்


  ============

'विनयावनतो भूत्वा रामं नत्वेदमब्रवीत्‌।

===========

 

என்றும், அந்தணரான ஹனுமன்  க்ஷத்ரியர்களான இராம, இலக்ஷ்மணர்களை வணங்கிதாகச் சொல்லப்பட்டுள்ளது. சிலரைப் பார்த்தும் கையெடுத்து கும்பிடத்  தோன்றும். அப்படித்தான் இராமனும் இலக்ஷ்மணனும் இருந்தனர் என்று இராமாயணம் எழுதிய அனைவருமே சொல்லுகின்றனர். இதை உறுதிப் படுத்தும் விதமாக மனுஸ்ம்ருதியில் ஒரு ஸ்லோகம் உள்ளது.


======== 

ऊर्ध्वं प्राणा ह्युत्क्रामन्ति यूनः स्थविर आयति ।

प्रत्युत्थानाभिवादाभ्यां पुनस् तान् प्रतिपद्यते ॥

========= 

 

இதைத்தான் வால்மீகியும்

=========== 

ऊर्ध्वं प्राणा ह्युत्क्रामन्ति यूनः स्थविर आयति ।

प्रत्युत्थानाभिवादाभ्यां पुनस् तान् प्रतिपद्यते ॥

மற்றும்

 

'प्रभया पर्वतेन्द्रोब्सौ+

============

 

என்று சொல்கிறார். அதாவது

 

" இளையவன் முதியவரிடம் வரும்போது. பயத்தினால் அவனது பிராணன் மேலே செல்கிறது, அவனது வணக்கம் மற்றும் எழுந்து நிற்கும் மரியாதையின் மூலம்,அந்த பிராண சக்தி அவனிடம் மீண்டும் வந்து சேருகிறது.

  

-இளையவர்கள் முதியவர்களை மரியாதையுடன் எதிர்கொள்வது (பிரத்யுத்தானம் – எழுந்து நிற்கும், அபிவாதம் – வணக்கம் செலுத்துதல்) என்பது பிராண சக்தியை நிலைநிறுத்தும் ஒரு தத்துவ வழி.

 

மரியாதை என்பது உயிரின் ஒத்திசைவை ஏற்படுத்தும் ஒரு தெய்வீக நடத்தை.

 

இளையவன் மரியாதை இல்லாமல் நடந்தால், பிராண சக்தி அவனிடமிருந்து விலகும்;

 

ஆனால் மரியாதை செலுத்தினால், அந்த சக்தி மீண்டும் அவனை அணுகும்.

 

இது ஒரு நுண்ணிய தர்ம சிந்தனை:

 

மரியாதை என்பது உயிரின் இயக்கத்தையும், ஆன்மாவின் ஒளியையும் பாதிக்கும்.

 

இராமனும் இலக்ஷ்மணனும் தங்களது உடலில் இருந்து வரும் ஒளியால் எல்லா திசைகளையும் சூரியனைப் போலப் பிரகாசிக்கச் செய்தனர் என்று சொல்கிறார். இந்த ஒளியினால் கவரப்பட்ட ஹனுமன் இராமன், இலக்ஷ்மணர்களை வணங்கினார் என்று அனைத்து இராமாயணம் எழுதியவர்களும் சொல்கின்றனர். இதில் ஆச்சர்யப் படுவதற்கு ஒன்றுமில்லை காரணம் பரிக்ஷித் சபையில் சுகதேவரைக் கண்டவுடன் வசிஷ்டர் போன்ற முனிவர்கள் கூட எழுந்து நின்று வணங்கினர்.. அதபோல் இராவணனின் சபையில் அங்கதன் நுழைந்தவுடன் அனைவரும் எழுந்து நின்றனர் என்று சொல்லப் படுகிறது.

 

தொடரும்

 

No comments: